காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி நேற்று 12.09.2014 அதிகாலை மணி 4.50 க்கு அருள்மிகு காசி விசுவேசுவரர் சந்நிதி வாயிலில் நின்று வணங்கிக் கொண்டோம். மாலையில் கங்கா ஸ்தானம். கங்கா ஆரத்தி வழிபாடு.
இன்று 111 ஆம் நாள் - 13.09.2014 ஆவணி 28 சனிக் கிழமை.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் தங்குவதற்கு ஒருவர் மட்டும் தங்கும்படியான அறை ஒன்றையும், பாதயாத்திரிகர்கள் தங்குவதற்கு ஒரு பெரிய அறை ஒன்றையும் சத்திர நிர்வாகிகள் ஒதுக்கிக் கொடுத்தார்கள். பாதயாத்திரிகர்கள் தங்குவதற்கு வாடகை இல்லை. அனைவருக்கும் மூன்று நேரமும் உணவும் இலவசமாக வழங்கினார்கள்.
நாளை ஞாயிற்றுக் கிழமை அலகாபாத் சென்று திருவேணி சங்கமத்தில் தீர்த்தமாடி வரலாம் எனக் குருசாமி அவர்கள் கூறினார். திருவேணி சங்கமத்தில் கங்காதீர்த்தம் பிடித்துவருவதற்கான ஏற்பாடுகளைக் காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களும் காசிஸ்ரீ சரவணன் அவர்களும் செய்தார்கள்.
திருவேணி சங்கமத்தில் இந்த இரண்டு குடங்களிலும் தீர்த்தம் பிடித்து இராமேசுவரம் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்ய வேண்டும். அதனால் இதற்கென இரண்டு செப்புப் பானைகளையும் அவற்றிற்கான பிரிமனைகளையும், இந்தப் பானைகளைப் பத்திரமாக வைப்பதற்கென ஒரு மரப்பெட்டியையும் தயாராக எடுத்து வைத்திருந்தார் குருசாமி அவர்கள்.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் பாதயாத்திரிரையாக வந்தவர்களின் பெயர் வயது மற்றும் முகவரிகளைச் சரிபார்த்து எடுத்துக் கொண்டு, காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களையும் உடன் அழைத்துக்கொண்டு காசிதேவஸ்தானம் அலுவலகத்தில் கொண்டுபோய்க் கொடுத்துவந்தார்.

யாத்திரிகர்களைப் பார்ப்பதற்காகவும், காசியில் வழிபாடு செய்வதற்காகவும் யாத்திரிகர்களின் குடும்பத்தினர் பலரும் காசிக்கு வந்திருந்து நகரவிடுதியில் அறைகள் எடுத்துத் தங்கியிருந்தனர்.
எனது மைத்துனர் திரு முத்துப்பாண்டி அவர்களும் தங்கை கலையரசியும் வந்திருந்தனர். அவர்கள் இருவரும் குருசாமி பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்து ஆசிபெற்றுக் கொண்டனர்.
எனது மைத்துனர் திரு முத்துப்பாண்டி அவர்களும் தங்கை கலையரசியும் வந்திருந்தனர். அவர்கள் இருவரும் குருசாமி பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்து ஆசிபெற்றுக் கொண்டனர்.
குருசாமி அவர்களிடம் ஆசி பெற்றபின்னர், யாத்திரிகர்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி ஆசி பெற்றனர்.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக