புதன், 9 செப்டம்பர், 2020

10.09.2014 காசி பாதயாத்திரை -108 ஆம் நாள், ஆவணி 25

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று 09.09.2014 பரோதா (Belan Baraudha), என்ற ஊருக்கு வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.

இன்று 108 ஆம் நாள் - 10.09.2014 ஆவணி 25 புதன் கிழமை.

யாத்திரிகர் அனைவரும்  அதிகாலை 3.00 மணிக்குத்  தினவழிபாட்டை முடித்துக் கொண்டு தொடர்ந்தோம்.  

5.57 am

5.56 am

6.14 am

இங்கிருந்து காசி 100 கி.மீ.

6.40 am

7.01 am

காலை 7.00 மணிக்கு ரொட்டியும் தேநீரும்.

7.43 am

7.44 am

7.55 am

8.40 am
அதிகாலையில் இருந்தே கடுமையான வெயில்.  காலை 8.30 மணிக்கு நடக்க முடியாத அளவிற்கு வெயில் சுள்ளென அடித்தது.  குடை எடுத்துக் கொள்ளாதவர்கள் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு நடந்து வந்தனர்.


9.42 am
காலை 9.30 மணிக்கு சாலையோரம் இருந்த பெட்ரோல் பங்க் வளாகத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.  வெயில் கடுமையாக அடித்தது.

9.48 am


9.53 am

10.53 am

11.07 am

11.23 am



காலை 11.30 மணிக்குச் சமோகரா வந்து சேர்ந்தோம்.  குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அன்பர் வரவேற்று அவரது இல்லத்தில் யாத்திரிகர்கள் தங்குவதற்குத் தேவையான வசதிகளைத் செய்து கொடுத்தார்.  இவரது வீட்டின் மாடியில் அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் உள்ளது.  வீடு கீழே, கோயில் மாடியில்.   யாத்திரிகர் அனைவரும் மேலே மாடியில் கிருஷ்ணனர் கோயிலில் தங்கினோம்.

கடுமையான வெயில்,  வெக்கைக் காற்று வீசிக் கொண்டே இருந்தது.

11.29 am

11.31 am


https://goo.gl/maps/jKRRYLJw4BN6ojoq6

இன்றைய பயண தூரம் சுமார் 32 கி.மீ.

காசி 78 கி.மீ. தூரத்தில் உள்ளது.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக