காசி பாதயாத்திரை நிறைவுநாள்
பயணக் கட்டுரை ......
சமோகராவிலிருந்து நேற்று 11.09.2014 அதிகாலை 2.30 மணிக்குத் தொடங்கி, இரவு தங்கி ஓய்வெடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தோம்.
40 கி.மீ. பயணம், மதியம் 12.00 மணிக்கு சுனார் என்ற ஊர் வந்து சேர்ந்தோம்.
58 கி. மீ. பயணம், இரவு 7.00 மணிக்கு சேர்பூர் என்ற ஊர் வந்து சேர்ந்தோம்.
8.00 மணிக்கு வழியில் உள்ள பள்ளிக்கூட வளாகத்தில் இரவு உணவு. இரண்டு மணி நேரம் ஓய்வு.
இரவு 10.00 மணிக்கு வழிபாடு. யாத்திரை தொடர்ந்தது.
இன்று 110 ஆம் நாள் - 12.09.2014 ஆவணி 27 வெள்ளிக் கிழமை.
68 கி.மீ. பயணம் செய்து நள்ளிரவு 00.30 மணிக்கு நாராயன்பூர் என்ற ஊர் வந்து சேர்ந்தோம். தேநீர்.
சில இடங்களில் கங்கையின் குளிர்ச்சியான காற்று வீசியது. சில இடங்களில் கங்கையில் தண்ணீர் ஓடும் சலசலப்பைக் கேட்க முடிந்தது. ஓரிரு இடங்களில் மழைத்தண்ணீர் தேங்கி நின்றது, அந்த இடங்களில் நடந்து செல்வது மிகவும் சிரமமாக இருந்தது.
72 கி.மீ. பயணம். ராம்நகர் வந்து சேர்ந்தோம், தேநீர்.
மிதவைப் பாலம் வழியாகச் செல்ல முடியாது என்று கூறிவிட்டனர்.
கங்கையைக் கடக்கும் முன், கங்கைக்கரையில் யாத்திரிகர்களை நிறுத்தி வைத்து, குருசாமி அவர்கள் மாதா கங்கையையும், அருள்மிகு காசிவிசுவநாதர் மற்றும் எல்லா தெய்வங்களையும் போற்றி வழிபாடு செய்தார்.
பாலத்தின் கீழே ரயில்வண்டி செல்ல, பாலத்தின் மேலே யாத்திரிகர் அனைவரும் மாதா கங்கையையும், காசிமாநகர் தெய்வங்களையும் வணங்கிக் கொண்டு கங்கையைக் கடந்து சென்றோம்.
https://goo.gl/maps/fgyhGVKdvD7A6cAS9
நேற்று சமோகரா அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் இருந்து புறப்பட்டு 26 மணி நேரப் பாதயாத்திரையில் சுமார் 80 கி.மீ. நடந்து ஆவணி 27 (12.09.2014) வெள்ளிக் கிழமை அதிகாலை மணி 4.50 க்கு அருள்மிகு காசி விசுவேசுவரர் சந்நிதி வாயிலில் நின்று வணங்கிக் கொண்டோம்.
பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர், அவரவர் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்கள், இராமேசுவரம் அருள்மிகு பர்வதவர்த்தினி இராமநாதசாமி, வழிநெடுகிலும் இருந்த கிராம தெய்வங்கள், அருள்மிகு காசி விசுவநாதர், அருள்மிகு அன்னபூரணி, அருள்மிகு காசி விசாலாட்சி முதலான அனைத்துத் தெய்வங்களின் திருவருளாலும், குருசாமி பச்சைக்காவடி அவர்களின் குருவருளாலும் இராமேசுவரம் - காசி பாதயாத்திரை நிறைவுற்றது.
அன்னதானவண்டியில் இருந்த பொருட்கள் அனைத்தும் எடுத்துவரப்பெற்று அவரவர்களிடம் பிரித்துக் கொடுக்கப்பட்டது.
சத்திரத்தில் காலை உணவு.
ஓய்வு.
மதிய உணவு.
ஓய்வு.
மாலை 4.30 க்கு குருஜி பச்சைக்காவடி அவர்கள் தலைமையில் யாத்திரிகர் அனைவரும் கங்கைக்குச் சென்று வழிபாடு செய்து தீர்த்தமாடி, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் எடுத்த மணலைக் கங்கையில் சேர்த்தோம்.
பலர் முடி காணிக்கை செலுத்தினர்.
மாலை நேரத்தில் கங்கா ஆராதனை பார்த்தோம்.
சத்திரத்தில் இரவு உணவு.
ஓய்வு.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக