காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி நேற்று முன்தினம் 12.09.2014 அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.
இன்று 114 ஆம் நாள் - ஆவணி 31 (16.09.2014) செவ்வாய்க் கிழமை.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்களை காசி அருள்மிகு விசாலாட்சி கோயிலுக்கு அழைத்துச் சென்றார். யாத்திரிகர்கள் அனைவரும் அன்னையை வழிபட்டு உய்வு அடைந்தோம்.
இக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் திருப்பணி செய்யப் பெற்றது. திருப்பணிகள் மற்றும் கும்பிஷேகம் தொடர்பான கல்வெட்டுகள் கோயிலில் உள்ளன.
(குறிப்பு - நாட்டுக்கோட்டை நகரத்தாரால் காசி விஸ்வநாதர் கோயில் அருகே புதிய இடம் வாங்கி தமிழக கட்டிடகலையில் கி.பி1893இல் விசாலாட்சி கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு பிலவ ஆண்டு தை மாதம் 25ஆம் நாள்(கி.பி1908இல்) நாட்டுக்கோட்டை நகரத்தாரால் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வாகத்தில் உள்ளது. சோமலெ (1963). ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர வரலாறு. பக். 40.)
குரோதன ஆண்டு கார்த்திகைத் திங்கள் 7ஆம் நாள் (22.11.1985)இல் கும்பாபிஷேகம் செய்யப் பெற்றுள்ளது.
ஸ்ரீ விஜய ஆண்டு சித்திரை மாதம் 4ஆம் நாள் (17.04.2013) புதன்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக