காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று 04.09.2014 மொகாரிகட்ரா என்ற ஊருக்கு வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.
இன்று 103 ஆம் நாள் - 05.09.2014 ஆவணி 20 வெள்ளிக் கிழமை.
யாத்திரிகர் அனைவரும் அதிகாலை 3.00 மணிக்குத் தினவழிபாட்டை முடித்துக் கொண்டு மொகாரிகட்ரா ஊரில் இருந்து யாத்திரயை தொடர்ந்தோம்.
வழியில் காலை 6.30 மணிக்கு, ரீவா நகர் எல்லை ஆரம்பமாகும் இடத்தில் உள்ள வளைவு அருகே சாலையோரம் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
6.26 am
6.27 am
7.01 am
7.25 am
पूर्वा नहर
8.09 am
ரீவா நகரின் உள்ளே செல்லாமல் புறவழிச்சாலை வழியாகச் சென்றோம்.
பீகர் (Beehar River) ஆற்றைக் கண்டு வணங்கிக் கொண்டோம். கங்கையின் உபநதியான இந்த நதி தெற்கில் இருந்து வடக்கு நோக்கிப் பாய்ந்து சென்று கங்கையில் கலக்கிறது. இந்த நதியில் சிலர் மீன்பிடித்தும் குளித்தும் விளையாடிக் கொண்டும் இருந்தனர்.
10.16 am
11.30 மணி அளவில் சல்பத்திரி ஆசிரமம் வந்து சேர்ந்தோம். கோயில் அர்ச்சகர் யாத்திரிகர்களை வரவேற்றார். ரீவா வாழ் அன்பர்கள் சிலர் வந்து குருசாமி அவர்களைக் கண்டு ஆசிபெற்றனர்.
https://goo.gl/maps/pdqjsZypQaMgyxC77
https://goo.gl/maps/jPjydCseJ5Dont7e7
11.45 மணிக்கு அனைவருக்கும் சூப் வழங்கப்பட்டது.
11.58 am
இரண்டு யாத்திரிகர்கள் மட்டும் கால தாமதமாக வந்து சேர்ந்தனர். குருசாமி அவர்களிடம் காரணம் கேட்டார். பீகர் நதியில் தீர்த்தமாடி வருவதாகத் தெரிவித்தனர். “ உள்ளூர் காரனுக்குப் பேய் பயம். வெளியூர் காரனுக்கு தண்ணீர் பயம்” உங்கள் இருவருக்கும் இந்தி தெரியாது. நீங்கள் நதியில் குளிக்கும் போது ஆழம் தெரியாத இடத்தில் மாட்டிக் கொண்டால், “காப்பாற்றுங்கள்” என்று இந்தியில் சொல்லத் தெரியாது. நீங்கள் போய் தெரியாத ஊரில் ஆற்றில் குளிக்கலாமா? எனக் கடிந்து கொண்டார்.
12.00 pm
6.28 pm
மாலை 6.30 மணிக்கு இங்குள்ள சாலக்கிராம சிவலிங்கத்திற்கு வழிபாடு நடைபெற்றது. யாத்திரிகர் சிலர் வழிபாட்டில் கலந்து கொண்டு வணங்கிக் கொண்டோம்.
https://goo.gl/maps/wNt5iJAza4KYrZQe7
இன்றைய பயண தூரம் சுமார் 30 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக