காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று 05.09.2014 இரகுநாத்கஞ்ச் வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.
இன்று 105 ஆம் நாள் - 07.09.2014 ஆவணி 22 ஞாயிற்றுக் கிழமை.
யாத்திரிகர் அனைவரும் அதிகாலை 3.00 மணிக்குத் தினவழிபாட்டை முடித்துக் கொண்டு இரகுநாத்கஞ்ச் ஊரில் இருந்து யாத்திரயை தொடர்ந்தோம்.
செருப்புப் போட்டும் நடக்க முடியவில்லை. செருப்பு போடாமலும் நடக்க முடியவில்லை. சாலையோரம் கொட்டிக் குவித்து வைக்கப்பட்டிருந்த சரளைக் கற்களின் மேல் நடக்கவும் முடியவில்லை. ஒவ்வொரு அடியும் எடுத்து வைப்பதற்குச் சிரமமாக இருந்தது.
7.14 am
சில இடங்களில் சாலைகள் போடப்பட்டிருந்தன.
காலை 7.00 மணி அளவில் சாலையோரம் அமர்ந்து ஓய்வு. அன்னதான வண்டி வரக் காலதாமதம் ஆனது. நடந்து வந்த களைப்பு அசதி. தேநீர் கிடைக்காமல் போனது.
யாத்திரிகர் சிலர் கால்களுக்கு மருந்து தடவிக் கொண்டனர்,
7.22 am
காசியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்து லாரி ஓட்டுநர் ஒருவர் வண்டியை நிறுத்திவிட்டு யாத்திரிகர்களை நலம் விசாரித்தார். சாலை நெடுக இவ்வாறுதான் சேறும் சகதியுமாக உள்ளது, கவனமாக நடந்து செல்லுங்கள் எனக் கூறினார்.
7.58 am
காலை மணி 7.50க்கு அன்னதான வண்டி வந்து சேர்ந்தது. ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம். சாலையில் ஏதோ ஒரு வண்டி பழுதடைந்து நின்றுவிட்டதாகவும், அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட நேரம் வரமுடியாமல் வரிசையில் வண்டிகள் எல்லாம் நின்று கொண்டிருந்தன என்றும் கூறினர்.
8.05 am
8.09 am
சாலையோரம் இருந்த குடிநீர் அடிகுழாயில் யாத்திரிகர் அனைவரும் கால்கைகளைக் கழுவிக் கொண்டு நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம்.
மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இருசக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் மிகவும் சிரமப்பட்டு வண்டிகளை ஓட்டிச் செல்வதைக் காண முடிந்தது.
8.12 am
8.15 am
சிறுவர்கள் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். காசிஸ்ரீ சிவப்பா அவர்களுடன் சேர்ந்து சிறிது நேரம் விளையாடிவிட்டு வந்தார்.
8.16 am
இங்கிருந்து காசி 177 கி.மீ.
8.46 am
8.46 am
மௌகஞ் வாசிகள் பலரும் யாத்திரிகர்களைத் தேடி வந்து விட்டனர்.
8.48 am
குருசாமி பச்சைக்காவடி அவர்கள், தேடிவந்து வரவேற்றவர்களை அழைத்து யாத்திரிகர்கள் காலைஉணவு சாப்பிட்டுவிட்டு நடந்து வருவோம், நீங்கள் உங்களது வானத்தில் முன்னதாகச் செல்லுங்கள் எனக் கூறி அனுப்பிவைத்தார்.
8.53 am
9.29 am
யாத்திரிகர்கள் மிகவும் மெதுவாக நடந்து வந்து மணி 9.05க்கு அன்னதான வண்டி நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். மௌகஞ் ஊருக்குச் செல்லும் சாலையோரம் உட்கார்ந்து சாப்பிட இடவசதி ஏதும் கிடைக்கவில்லை. அன்னதான வண்டியின் நிழலில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு முடித்தோம்.
சூள் என்று வெயில் அடித்தது.
9.31 am
9.43 am
9.46 am
9.48 am
9.48 am
10.06 am
10.12 am
11.26 am
காலை 11.20 மணிக்கு மௌகஞ் வந்து சேர்ந்தோம். ஊரார் சிலர் சாலையோரம் நின்று யாத்திரிகர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
11.26 am
11.28 am
11.30 மணிக்கு மௌகஞ் ஊரில் உள்ள “ஸ்ரீ ராம் ஜானகி” கோயிலுக்கு (श्री राम जानकी मंदिर ) வந்து சேர்ந்தோம்.
மருத்துவர் திரு. இராஜேந்திரன் அவர்களும் அவருடைய நண்பர்கள் பலரும் வந்திருந்து யாத்திரிகர்களை வரவேற்றனர்.
ஸ்ரீ ஜானகி சமேத ராமரை வணங்கிக் கொண்டு, அருகில் உள்ள கட்டிடத்திற்குச் சென்று தங்கினோம். குருசாமி பச்சைக்காவடி அவர்களும் யாத்திரிகர் சிலரும் இந்தக் கோயிலில் தங்கினர்.
சமையல் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
மதிய உணவு.
மாலை 5.15 மணிக்கு ஸ்ரீ ஜானகிராமர் கோயிலின் பட்டாச்சாரியார் சிறப்பு வழிபாடு செய்து வைத்தார்.
இரவு உணவு.
ஓய்வு.
https://goo.gl/maps/2Ve1zMcRDjMh1PKF8
இன்றைய பயண தூரம் சுமார் 25 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக