புதன், 17 அக்டோபர், 2018

04.08.2014 இச்சோடா, இராமேசுவரம் காசி பாதயாத்திரை,

04.08.2014
இராமேசுவரம் காசி பாதயாத்திரை. குருசாமி பச்சைக்காவடி அவர்களும் அவர்களது அடியார்களுமாக மொத்தம் 20 பேர் இராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு காசிக்குப் பாதயாத்திரை சென்றோம்.

Ichoda, Telangana 504307 04.08.2014 அன்று இங்கே தங்கினோம்.




இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒருவர்  யாத்திரிகர் அனைவருக்கும் இளநீர் கொடுத்தார்.  இளநீர் வியாபாரியிடம் நாங்கள் பணம் கொடுத்த போது வாங்க மறுத்து விட்டார்.   2013ஆம் ஆண்டு அவருடைய குடும்பத்தில் இறக்கும் தருவாயில் ஒருவர் (மகனோ, மகளோ?) இருந்துள்ளார்.  அந்த வருடம்  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் பாதயாத்திரை வந்தபோது அவருக்கு இளநீர் கொடுத்து உபசரித்துத் தனது துன்பநிலையைக் கூறியுள்ளார். 
குருசாமி அவர்களும் உனது குடும்பத்தில் சாவு வராது, பிழைத்துக் கொள்வார் என ஆசி வழங்கியுள்ளார்.  அதன்படியே, ஆச்சரியமான முறையில் நோய்வாய்ப்பட்டிருந்தவர் பிழைத்துக் கொண்டார் என்றும், குருசாமி பச்சைக்காவடி அவர்களின் ஆசியால்தான் இது நடந்தது என்றும் கூறினார். 

இச்சோடா இளநீர் வியாபாரி குருசாமி பச்சைக்காவடி அவர்களைத் தெய்வமாகக் கருதினார்.  முழு (மூட) நம்பிக்கை.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக