ஞாயிறு, 21 ஜூலை, 2024

02.07.2014 காசி பாதயாத்திரை - 38ஆம் நாள் - ஆனி 18

இராமேசுவரம் - காசி பாதயாத்திரை - 
பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.

இன்று 38ஆம் நாள் - ஆனி 18 (02.07.2014) புதன் கிழமை.  
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று சிக்பலப்பூர் ஐயப்பன் கோயில் வந்து சேர்ந்து இருந்தோம்.

3.23 am
இன்று அதிகாலை 3.10 மணிக்குத் தினசரி வழிபாடு முடிந்தவுடன் ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுப் பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.

5.41 am

6.05 am

6.18 am

6.23 am


காலை மணி 6.25 அளவில், ரெட்டிகோலார்ஹள்ளி ஊரின் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து காலைநேர ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டுப் பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.

இன்று யாத்திரிகர் அனைவருமே மிகவும் மகிழ்ந்து பேசி நடந்து வந்தனர்.

காசிஸ்ரீ தாமோதரன் அவர்கள் குருசாமி அவர்களுடன் சேர்ந்து நடந்து வந்தார்.

காசிஸ்ரீ மோகன் அவர்களும், காசிஸ்ரீ தொப்பை என்ற கலியபெருமாள் அவர்களும், காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களும், காசிஸ்ரீ பஞ்சவர்ணம் அவர்களும், காசிஸ்ரீ சிவாப்பா அவர்களும் ஒன்றாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.

காசிஸ்ரீ தனசேகரன் அவர்கள் சற்று தொலைவில் வந்து கொண்டிருந்தார்.

காசிஸ்ரீ கலியபெருமாள் அவர்களும்,  காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களும் மகிழ்ந்து பேசி நடந்து வந்து கொண்டிருந்தனர்.  இவர்களுடன் காசிஸ்ரீ தொப்பை என்ற கலியபெருமாள் அவர்களும் ஒன்றாகச் சேர்ந்து பேசி நடந்தார்.
காசிஸ்ரீ அங்கமுத்து அவர்கள் குருசாமி பச்சைக்காவடி அவர்களுடன் சேர்ந்து வருவதற்காக சிறிது நேரம் நின்றார்.   இரண்டு கலியபெருமாள் சாமிகளும் பேசிக்கொண்டே நடந்து செல்லலாயினர்.

மதுரை காசிஸ்ரீ கந்தசாமி அவர்கள்தான் யாத்திரிகர்களில் மிகவும் மூத்தவர்.  அவரை யடுத்து காசிஸ்ரீ மாதவன் அவர்கள் மூத்தவர்.  இவர்கள் இருவரும் ஒன்றாக மகிழ்ந்து  பேசிக்கொண்டே நடந்தனர்.
காசிஸ்ரீ நம்பிராஜன் அவர்களும், காசிஸ்ரீ சுப்பிரமணியன் அவர்களும் ஒன்றாக மகிழ்ந்து பேசிக்கொண்டே நடந்தனர்.

7.24 am

7.41 am
தும்களஹள்ளி அருகே மலையை வெட்டியெடுத்து நெடுஞ்சாலையை அகலப்படுத்தியுள்ளனர்.  பிரளயகாலத்தில் ஏற்பட்ட பெருவெடிப்பினால், பாறைகள் பிளவு பட்டு அதனூடே கடல்வெள்ளத்தினால் அடித்துவரப்பட்ட கடற்களிமண் படிந்து இறுகிப் பாறையாக மாறியுள்ளதையும், அந்தப் பாறைகளில் 45‘ அளவிற்குச் சாய்ந்து இருப்பதையும் காண முடிந்தது.

8.00 am

8.02 am

8.06 am
காசிஸ்ரீ காளைராசன், காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களும், காசிஸ்ரீ பஞ்சவர்ணம் அவர்களும் ஒன்றாக மகிழ்ந்து பேசிக் கொண்டே நடந்தனர்.

8.26 am
காலை மணி 8.25 அளவில் பெரச் சந்திரா வந்து சேர்ந்தோம்.  ஊரில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரும் அவரது மகனும் ஊரின் எல்லையின் நின்று குருசாமி பச்சைக்காவடி அவர்களை வரவேற்றனர்.  அவரது வீட்டிற்கு யாத்திரிகர்களை அழைத்துச் சென்றனர்.


8.32 am
மற்றும் சிலரும் வந்து நின்று  குருசாமி பச்சைக்காவடி அவர்களை வரவேற்றனர்.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று கணியன் பூங்குன்றனர் பாடிய பாடலுக்கு உதாரணமாகக் குருசாமி பச்சைக்காவடி அவர்களைக் கூறலாம்.
இராமேசுவரத்தில் இருந்து காசி வரை 2464 கி.மீ. வழி நெடுகிலும் எத்தனை யெத்தனையோ ஊர்கள்,  அத்தனை ஊர்களும் குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்குச் சொந்தஊர் போன்றே இருந்தன.  அந்த ஊரில் உள்ளோர் உறவினர்களாகவே யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தனர்.
தேசிய  மிகவும் 


பெரச்சந்திரா அன்பரது வீட்டின் ஈசானியத்தில்  வெள்ளெருக்கு வளர்த்து இருந்தனர்.  வீட்டிற்குள் வெள்ளெருக்கு வளர்ப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

8.35 am

8.36 am
பெரச்சந்திராவில் வரவேற்பு வழங்கிய அடியாரது வீட்டிற்கு எதிரே உள்ள பள்ளிக்கூடத்தில் தங்கல்.
ஓய்வு.
மாலைநேரத்தில் அடியார் வீட்டில் கூட்டுவழிபாடு.
ஓய்வு.


https://goo.gl/maps/De6GzwV34bTDL8Ja8
இன்றைய பயணம் சுமார் சுமார் 20  கி.மீ.
கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்