புதன், 10 பிப்ரவரி, 2021

ஸ்ரீ வில்வம் அண்ணா அவர்களின் காசி பாதயாத்திரை

 Saraswathi ThyagarajanSage of Kanchi in FaceBook

11/02/2021

🌿🌿🌿💐💐💐🌿🌿🌿




ஸ்ரீ வில்வம் அண்ணா வரலாறு 

இயற் பெயர் ஸ்ரீதர வாசுதேவன் {ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபத்தி இரண்டாம் ஆண்டு ஜூலை மாதம் நான்காம் தேதி} சுபகிருது வருடம் ஆனி மாதம் பூச நட்சத்திரத்தில் தமிழ் மாதம் இருபதாம் தேதி ஸ்ரீமதி ஜய லக்ஷ்மி, ஸ்ரீமத் அருணாசல தம்பதிகளுக்கு வேப்பத்தூரில் ஆறாவது புத்திரராக பிறந்தார்.

தந்தையின் சொந்த ஊர் திருவிடைமருதூர். தந்தை மேட்டூர் அணையில் பணி புரிந்தார். தாயார் கும்பகோணம் அருகே வேப்பத்தூரில் பிறந்தார். இந்த தம்பதிகளுக்கு மொத்தம் பதிமூன்று பேர். உடன் பிறந்தவர்கள் அனைவரும் படிப்பில் சூற புலிகள். வில்வம் அண்ணாவை தவிர அனைவரும் தங்கப்பதக்கம் பதக்கம் பெற்றவர்கள். வில்வம் அண்ணா பி.எஸ்.சி, டிப்ளமா படித்துள்ளார். பத்து ஆண்டு காலம் சென்னை, பெங்களுர் மற்றும் மும்பையில் பணியாற்றினார். அதற்கு பிறகு துபாயில் ஐந்து வருடங்கள் பணியாற்றினார். மஹா பெரியவாளின் பரம பக்தராக இருந்தார். தனது நாற்பத்தி ஐந்தாவது வயதில் மயிலாப்பூரில் தனது தாயாருடன் குடி ஏறினார். இவர் ஒரு பிரம்மச்சாரி. 

அப்போது முதல் காபாலீஸ்வரரிடம் சரணாகதி அடைந்தார். எப்போதும் கபாலீஸ்வரர் கோவிலில் பாராயணம் செய்து கொண்டு இருப்பார். சிதம்பர நடராஜர் கோவிலில் வில்வம் அண்ணா பாராயணம் செய்யும் வழக்கம் உண்டு. இரண்டாயிரத்தி எட்டாம் ஆண்டு முதல் யாரிடமும் பேசாமல் மௌனமாகவே இருக்க தொடங்கினார். எல்லாவற்றையும் எழுதி தான் காட்டுவார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஈச்சங்குடி சென்றார். ஈச்சங்குடியில் விநாயகர் அசரீரியாக உத்தரவு கிடைத்ததின் பேரில் அங்கிருந்து காசி செல்ல தீர்மானித்தார். சுமார் பதிமூன்று ஆண்டுகள் மௌனமாகவே இருந்த இவர் தற்போது மௌனத்தை கலைத்து காசி செல்லும் யாத்திரையை பற்றியும் சற்று பார்ப்போம். 

ஈச்சங்குடியில் இருந்து பாத யாத்திரையை, செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி தொடங்கினார். ஈச்சங்குடியில் இருந்து ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரையை தொடங்கினார். ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு பாத யாத்திரையை மேற்கொண்டார். அநேகமாக அடியேனின் கணக்கு படி பார்த்தால் தை மாதம் பொங்கல் அன்று காசியில் இருப்பார் என்று நினைக்கிறேன். தொடர்ந்து நூற்றி பத்தொன்பது நாட்கள் நடந்து காசி தீர்த்த யாத்திரையை மிக நல்ல முறையில் காசிக்கு சென்றடைந்தார். {அடியேன் இந்த கட்டுரையை எழுத தொடங்கிய போது வில்வம் அண்ணாவின் நூற்றி ஒராவது நாள்} இன்னும் காசி செல்வதற்கு சுமார் ஐநூறு கிலோ மீட்டருக்கு மேல் உள்ளது. இவர் செல்லும் நோக்கம் என்ன என்றால் இந்த கொடுமையான கொரானா நோய் இந்த உலகை விட்டு செல்ல வேண்டும் என்பதே. என்ன ஒரு சங்கல்பம் பாருங்கள். இவர் காசி செல்வதற்குள் அநேகமாக முக்கால் வாசி கொரானா பயம் போய் விட்டது. *எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் வள்ளரசு நாடாக இருந்தாலும் கோவிட் மருந்து இந்தியாவில் தான் கண்டு பிடிக்க பட்டு இன்று உலகம் முழுவதும் நம் பாரத தேசத்தில் இருந்து தான் மருந்து உலகத்திற்கே சென்று கொண்டு இருக்கிறது.* இதெல்லாம் நடக்கிறது என்றால் இந்த பாரத தேசத்தில் இது போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் என்பது இதுவே ஒரு உதாரணம். ஏன் என்றால் காலம் அப்பேர் பட்ட காலம். எல்லாம் ஆடம்பர வாழ்கை ஆகி விட்டது. பணம் மட்டுமே பிரதானமாக ஆகி விட்டது. கலி முந்திக் கொண்டு இருக்கிறது என்று நன்றாக தெரிகிறது. இந்த முற்றிய கலிகாலத்தில் நாம் எல்லோரும் சௌக்யமாக இருக்கிறோம் என்றால் வில்வம் அண்ணா போன்றவர்கள் இருப்பதால் தான். வில்வம் அண்ணாவின் இந்த பெறும் முயற்சியால் நாம் எல்லோரும் பரம சௌக்யமாக இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.... மொத்தம் நூத்தி பத்தொன்பது நாட்களில் இரண்டாயிரத்தி எட்நூறு கிலோ மீட்டர் நடந்துள்ளார் வில்வம் அண்ணா....

வில்வம் அண்ணா காசியில் இருந்து அயோத்தி பாதயாத்திரையாக சென்றடைந்துள்ளார்.  காசியில் ஶ்ரீமத் பாகவதம் பாராயணம் முடித்தார். அயோத்தியில் ஒரு பத்து நாட்கள் ஶ்ரீ இராமாயணம் பாராயணம் செய்ய இருக்கிறார். பாராயணம் முடிந்த பிறகு மீண்டும் காசிக்கு செல்ல அருள்கிறார். பின் அங்கிருந்து மீண்டும் சென்னை வந்து சென்னையில் இருந்து ஈச்சங்குடி சென்று மீண்டும் மயிலாப்பூர் வந்த பிறகு தனது மௌனத்தை தொடர உள்ளார் ஸ்ரீ வில்வம் அண்ணா. இந்த கலியுகத்தில் இப்படி பட்ட மஹானை நாம் தரிசித்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.

பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி காசியில் இருந்து அயோத்யா பாத யாத்திரையாக செல்ல தொடங்கய வில்வம் அண்ணா இன்று [09.01.21] இரவு சுமார் எட்டரை மணி அளவில் அயோத்யா சென்றடைந்தார் வில்வம் அண்ணா. ஈச்சங்குடியில் இருந்து ராமேஸ்வரம் வழியாக நூத்தி பத்தொன்பது நாட்களில் இரண்டாயிரத்தி எட்நூறு கிலோ மீட்டர் நடந்துள்ளார் வில்வம் அண்ணா தற்போது ஒன்பது நாட்களில் காசி முதல் அயோத்யா வரை இருநூத்தி பத்து கிலோ மீட்டர் தூரத்தை ஒன்பது நாட்களில் சென்றடைந்துள்ளார். ஆக மூவாயிரத்தி பத்து கிலோ மீட்டர் தூரத்தை நூத்தி இருபத்தி எட்டு நாட்களில் சென்றுள்ளார் வில்வம் அண்ணா. இதில் காசியில் இருபது நாட்கள் கூடுதலாக தங்கி இருந்த வில்வம் அண்ணா ஶ்ரீமத் பாகவத பாராயணம் செய்துள்ளார். ஆக மொத்தத்தில் நூத்தி நாற்பத்தி எட்டு நாட்களாக லோக ஷேமத்திற்காக தனி மனிதரின் முயற்சிக்கு நாம் அனைவரும் அவருக்காக இந்த நேரத்தில் நமஸ்கரிக்க வேண்டும். அடியேனின் முதல் அனந்த கோடி நமஸ்காரங்கள்.

🙏🙏🙏 ஹர ஹர மகாதேவ ஸம்போ காசி விஸ்வதாத கங்கே 🙏🙏🙏

அனைவருக்கும் நமஸ்காரங்கள்....

பெரியவா கடாக்ஷம் பரிபூரணம்.... சிவ சிவ.... ராம் ராம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக