ஏட்டில் உள்ள செய்தி –
150 ஆண்டுகளுக்கு முன்பு
அயோத்தி லோக்குருவிடம் ஆசி பெற்ற
சிவகங்கை மண்ணின் மைந்தன்
ராமசாமி
உ
சிவமயம்
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டிக்கு அருகேயுள்ள நாமனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் 1874ஆம் ஆண்டு மு. பெருமாள் என்பரையும் அழைத்துக் கொண்டு அயோத்தியாபுரிக்குச் சென்றுள்ளார்.
வழியில் உள்ள கிர் காடுகளிலே (https://en.wikipedia.org/wiki/Gir_National_Park) அவருக்கு யாளிகளும் சிங்கங்களும் காவலாய் இருந்துள்ளன. ஸ்ரீமுக ௵(வருடம்), சீர் தை ௴ (மாதம்), 5 ௳(நாள்), அயோத்தியாபுரி சென்று வணங்கியுள்ளார். அயோத்தியாபுரியானது தெற்கு-வடக்காக நூற்றிப்பத்து காதமும் (சுமார் 1760 கி.மீ தொலைவும்), கிழக்கு- மேற்காக நூற்றிப்பத்து காதமும் – ஆகமொத்தம் 220 காத (3520 கி.மீ.) வழி உடையது. இந்த நான்கு முலைகளிலும் யாளிகளும், சிங்கங்களும் காவலாய் இருக்கின்றன. இவ்வளவு பரந்துபட்ட அயோத்தியாபுரியைச் சூரியர்களும் சந்திரர்களும் அரசு ஆண்டுள்ளனர். அவர்களெல்லாம் திருக்கயிலாய உலகத்திற்குப் போனபடியால், அதன் பிற்பாடு, ராமசாமி அவர்களுக்கு அசோக வனத்திலே ஜனக மகாராஜா வம்சத்தினரும், எமதரும மா ராஜா வகையறாவும், யாளிகளும் சிங்கங்களும் துணையாய் இருந்தபடியால் – இப்போது, இரவு பகல் ஒரு காலாகமாக இருக்கும் காலத்திலே, ராமசுவாமி முழித்துப் பார்க்கும் நேரத்தில், எங்கும் படு சக்தியாக – ராமமாய் இருக்கிறது. பசுவின் வயிற்றில் பிறந்து வழிவழியாக நல்லாட்சி புரிந்த அரசர்களெல்லாம் (இரணிய கெற்ப அரசர்கள் ) சாம்பலாகவே இருக்கிறது. – கலிகாலம் முத்திவிட்டது.
அப்போது – திருவினை
ஐயனார் சுவாமியை தரிசனம் பண்ண
வேண்டிப் புறம்படும் பொழுது,
லோககுருவையும் அந்தப் பட்டருடைய
மனைவியையும் ராமசாமி பார்த்து, இடமாகச் சுற்றி வந்து, வலமாகச்
சுற்றி வந்து வணங்கி, சாஷ்ட்டாங்கமாக் கீழே விழுந்து
வணங்கினார். அப்போது அவருக்கு அருள்
வந்தது.
பின்னர், ராமசாமி காசிக்கும்
திருக்கையிலாயத்திற்கும் சென்றுள்ளனார். அங்கே உபதேசம் செய்துள்ளார். அங்கிருந்து சிதம்பரத்திற்குச் சென்று வணங்க வேண்டுமென்று புறப்பட்டார். வழியில்
திருப்பதி என்ற வேங்கடாசலம் வந்தார். ஸ்ரீரங்கம் வந்து அங்கே உபதேசம்
பெற்றார். மதுரை கூடலழகர் பெருமாள்
கோயிலுக்குப் போகிறோம் என்று வாக்கு பெற்றார்.
திருக்கோஷ்டியூர் வணங்கித் திருப்பாற் கடலிலே தீர்த்தம் ஆடிப் பெருமாளை தரிசனம் பண்ணினார். பாறைஓவியங்கள் உள்ள இடமாகப் புகழ் பெற்று விளங்கும்
திருமலையில் உள்ள அருள்மிகு மலைக்கொழுந்தீசுவரர் கோயிலின்
மாணிக்கவாசலிலே கையெடுத்துக் கும்பிட்டு, அவரிடத்தில்
உத்தரவு பெற்றுள்ளார்.
மலைக்கொழுந்தீசுவரர் உத்தரவுப்படி, நாமனூர் ஜமீன் அழகுயேந்தன் ராசன் - துளசி
ராசன் இவர்களிடத்தில் சென்று கோம்பை என்று அழைக்கப்படும் கோயில்உரிமைகளைக்
கேட்டுள்ளார். உள்ளூர் கரைக்கு
மகாராசாவான இவர்களது நிர்வாக நாளிலே – தேர்ச் சக்கரம் (சப்பரம்) ஓடும் போது, சுவாமிக்கு மெய்காவலாகச் சென்றுள்ளார்.
காவல் தலைவன் ஆகிய தனுச்சன் சங்கழன், உறங்காபுலி உறங்கான்,
செம்புளி வயினான், முத்தழகன் நண்டன், இந்த
நாலு வகைப் பேருக்கும் முன்பாக கையெழுத்து
போட்டுக் கொடுத்து, அழகுகேந்திரன் ராசா இடத்தில், வேளான் இடத்தில், கானி(வயல்) பெற்றார். இவ்வாறு
ராமசாமியால் சேர்க்கப்பட்ட வயலுக்கு “உறங்கான்
செய்”
என்று பெயர். இந்த வயலில்
வரும் விளைச்சல் வருமானத்தைக் கொண்டு இன்றும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.
கோயிலில் இருந்து சோறு
பெற்றுள்ளனர். இவர்கள் காவல் காத்து, (கலம்
அளவுள்ள நெல்லை 12 பாகமாகப் பிரித்தால் அதில் 1 பகுதி குருணி ஆகும்.) குருணி அளவு நெல் பெற்றுள்ளனர். தானியக் கிடங்கு பெற்றுள்ளனர்.
கோவில்படி காத்து, இவர்களது வகை போக, நண்டன் செம்புலி இவர்கள் மேல்கோட்டை
வடகோட்டை காத்துள்ளனர்.
அயோத்தியைப் போற்றுவோம்,
ராமசாமியைப் போற்றுவோம்.
(குறிப்பு - மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் நாடு வெள்ளையன்
பெரியஅம்பலகார் வகையறாவினரிடம் இந்த ஓலைச்சுவடி
ஏடு உள்ளது. அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் அ.
செந்தில்ராஜன் அவர்களிடம் இந்த ஓலைச்சுவடியைக் கொண்டு வந்து வாசிக்கக் கொடுத்தவர்
மு. பெ. சொக்கலிங்கம் மகன் சீனிவாசன் (915981456) சளுப்புலி மாடன் வகையறா அம்பலம்
அவர்கள். ஓலைச்சுவடியைச்
சுத்தம் செய்து, படம் எடுத்து, வாசித்துத் தட்டச்சு செய்து ஆவணப் படுத்தியவர் –
காரைக்குடி அழகப்பா பல்கைகலைக்கழகத்தின் மேனாள் துணைப்பதிவாளர் காசிஸ்ரீ முனைவர் கி.
காளைராசன், கோட்டையூர் - 9443501912)