பொன்னமராவதி வலையபட்டி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்கள் தலைமையில் 20 யாத்திரிகர் கடந்த 26.05.2014 அன்று இராமேச்சுரத்திலிருந்து புறப்பட்டு 12.09.2014 அன்று காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.
யாத்திரிகர்களில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா , மகிண்டி கிராமம் , முத்தரசு மகன் பஞ்சவர்ணம் அவர்களும் ஒருவர். இவரிடம் ஏடுகள் இருப்பதாக என்னிடம் கூறினார். முடிந்தால் ஏடுகளை எடுத்து வாருங்கள் என்று கேட்டுக் கொண்டேன். எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, இன்று அவரிடமிருந்து ஏடுகளுடன் அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்தார்.
ஏடுகள் மிகவும் ஒடிந்த நிலையிலும், பூச்சி அரித்த நிலையிலும், வரிசைப்படியாக இல்லாமல் தனித்தனி ஓலைகளாகவும் இருந்தன. மஞ்சள் மிளகு போன்ற இரண்டொரு சொற்களைப் படிக்க முடிந்தது. எனவே இது மருத்துவம் தொடர்பான ஏடாக இருக்கலாம் என்று கருதுகிறேன். விரைவில் ஏடுகளை வாசித்துப் பதிவு செய்திட முயற்கிக்கிறேன்.
அன்பன்
கி.காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக