திங்கள், 5 மார்ச், 2018

உறும்பு என்றால் என்ன? சுள்ளுறும்பு, கேதையுறும்பு

சுள்ளுறும்பு - பெயர்க் காரணம் :

குருசாமி பச்சைக்காவடி அவர்களது இரண்டாம் ஆண்டு அறுபடைவீடு  பாதயாத்திரையின் 34 ஆவது நாள். இன்று ஆனி 27 ( 11.07.2017) செவ்வாய் கிழமை குழந்தை வேலன் சந்நிதியில் இருந்து காலை மணி 2:20க்குப் புறப்பட்டு வேடசந்தூர் அருள்மிகு ஐயனாரப்பன் கோயிலுக்கு காலை மணி 9:00 க்கு வந்து சேர்த்தோம்.
ஒட்டன்சத்திரம் - வேடசந்தூர் சாலையில் 'சுள்ளெரும்பு' என்ற ஊரில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.
செந்நிறமான சிற்றெறும்புக்குச்
சுள்ளெரும்பு என்று பெயர்.
ஊரின் பெயர் சுள்ளெரும்பு என்று இருந்தது எனக்கு வினோதமாகப் பட்டது. ஊரின் பெயர் காரணம் குறித்துச் சிலரிடம் கேட்டபோது, "தெரியாது, முன்பு சுள்ளெரும்புகள் நிறைந்து இருந்திருக்கலாம், அதனால் இந்தப் பெயர் உண்டாகி இருக்கலாம்" என்றனர்.
சுள் என்றால் உறைப்புச் சுவையைக் குறிக்கும்.
உறும்பு என்றால் உலர்ந்த கரம்பை ; மண்ணின் கூரிய சிறு கட்டி என்று பொருள்.
சுள்ளென்ற சுவையான உலர்ந்த கரம்பை மண் உடைய ஊர். அதனால் சுள்+உறும்பு  = சுள்ளுறும்பு என்ற காரணப் பெயர் இந்த ஊருக்கு உண்டாகியுள்ளது.
ஆழ்ந்த புவியியல் அறிவு அடிப்படையிலான "சுள்ளுறும்பு" என்ற காரணப் பெயர் மறுவிச் "சுள்ளெறும்பு" ஆகியுள்ளது.


கேதையுறும்பு = கேதை + உறும்பு.
கேதை = தாழை
உறும்பு = உலர்ந்த கரம்பை
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

1 கருத்து:

  1. இந்த ஊரில் கிடைக்கும் பச்சை கல் தேவை வியாபாரி அல்லது முகவர்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும் +918778593177 +919600862205

    பதிலளிநீக்கு