சனி, 22 பிப்ரவரி, 2025

காசிஸ்ரீ SP SN மாதவன் செட்டியார்


 சூரக்குடி திரு SP SN மாதவன், வயது 81; கைப்பேசி எண்:- 9363073151;  மிகவும் அமைதியானவர்.  சாது.

2014 ஆம் வருடம் காசிஸ்ரீ அயோத்திஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்கள் நடத்திய இராமேசுவரம் - காசி பாதயாத்திரையில் கலந்து கொண்டு காசிஸ்ரீ பட்டம் பெற்றவர்.  நடைவேகம் அதிகம்.  குருசாமிக்குப் பிடித்தமானவர்.  வட்டகைக் கூட்டம் பற்றியும்,  நகரத்தார் சமூகம் ஒன்றாக ஒற்மையுடன் சேர்ந்து வாழவேண்டும் பிரிவினை ஒருபோதும் பயனளிக்காது என்பது பற்றியும் அனைவரிடமும் எடுத்துக் கூறி வந்தார்.  

இவரது மகன் இவரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்ததார்.   மதுரையில் மகனுடன் இருந்து வந்தார்.

வயது மூப்பின் காரணமாகச் சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்தார்.   ஆயுட்காலத்தின் கடைசி நாட்களில் இருப்பதை உணர்ந்து மகனிடம் சூரக்குடிக்குச் சென்று இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.  இவரது கடைசி விருப்பத்தின்படியே மதுரையிலிருந்து சூரக்குடிக்கு தைப்பூசம் 11.02.2025 அன்று வந்துள்ளனர்.  சூரக்குடிக்குச் சொந்த வீட்டிற்கு வந்துவிட்டோம் என்ற மனநிறைவு அவருக்கு.  17.02.2025 அன்று ஆகாரம் செல்லவில்லை. பால் மட்டுமே ஆகாரம்.   18.022025 துளசித் தீர்த்தம் மட்டுமே ஆகாரம்.   19.02.2025 அன்று அருள்மிகு காசிவிசுவநாதர் விசாலாட்சியின் திருவடியில் முத்தியடைந்து விட்டார்.  

நாமும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.  காசிஸ்ரீ மாதவன் செட்டியார் அவர்களது நல்லாசிகள் நம் அனைவருக்கம் ஆகுக.

🙏🙏🙏


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக