இராமேசுவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராமேசுவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

26.05.2014 இராமேசுவரம் காசி பாதயாத்திரை, ஸ்ரீ ஏகாந்த ராமசுவாமி கோயில்

இராமேசுவரம், தங்கச்சிமடம் அருகே 
ஸ்ரீ ஏகாந்த ராமசுவாமி கோயில்


இராமேசுவரம் - காசி பாதயாத்திரை

26.05.2014 அன்று முதல்நாள் பயணம்.  மாலை நேரத்தில் இராமேசுவரம் தெற்குக் கோபுர வாயில் அருகே உள்ள கண்டனூர் நாட்டார்கள் விடுதியிலிருந்து புறப்பட்டு தங்கச்சிமடம் அருள்மிகு முருகன் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.

வரும் வழியில் அருள்மிகு ஏகாந்த இராமசாமி கோயிலின் தீர்த்தத்தை அருந்தி இறைவனை வழிபட்டோம்.












ஸ்ரீ ஏகாந்த ராமசுவாமி கோயில்,  துளசிதாஸ் ஸ்தாபனா சிவலிங்கம். 
கோயிலின் உள்ளே உள்ள அமிர்தவாபி தீர்த்தம்   சிறப்புடையது.  இந்த் தீர்த்தம்   தேவர்களுக்காகவும், வானவீரர்களுக்கும் ஸ்ரீராமரால் , கோயில் உள்ளே உண்டாக்கப்பட்டுள்ளது தான் அமிர்தவாபி தீர்த்தம்.  இது அமிர்தத்துவமானது. இந்த புண்ணிய தீர்த்தத்தை பார்த்தாலும், பருகினாலும் ஆயுள் அபிவிருத்தியும் வளமான வாழ்க்கையும் அமையும்.

https://goo.gl/maps/27aJzcKSAg22

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

புதன், 8 ஆகஸ்ட், 2018

09.08.2014, இராமேசுவரம் காசி பாதயாத்திரை, ஆடி 24, 76 ஆம் நாள் யாத்திரை, வாட்கி

குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டு இன்று ஆடி 24 (09.08.2014) 76 ஆம் நாள் யாத்திரை .
வாட்கி( )என்ற ஊருக்கு அருகே சாலையோரம் உள்ள இந்த ஆசிரமத்தில் வந்து தங்கினோம்.
அருகில் புதிதாகக் கோயில்கட்டும் பணிகளுக்குப் பூசைகள் நடைபெற்றுக் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மிகவும் அமைதியான இடமாக இருந்தது. ஆசிரமத்தின் மேற்பார்வையாளர் எங்களை மிகவும் அன்புடன் உபசரித்தார்.









08.08.2014, ஆடி 23, 75 ஆம் நாள் யாத்திரை, கீளாப்பூர்

காசிஸ்ரீ பச்கைக்காவடி அவர்களும் 
அவரது அடியார்களும்
இராமேசுவரம் காசி பாதயாத்திரை





ஆடி 23 (08.08.2014)
75 ஆம் நாள் யாத்திரை .
குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டோம்.
....
ஆடி 23 (08.08.2014)
75 ஆம் நாள் யாத்திரை .

நேற்று முழுவதும் மழை இல்லை , நல்ல வெயில் .
இன்றுதினவழிபாட்டை முடித்துக் கொண்டு 3.30 க்கு பாட்டன்பூரி என்ற ஊரிலிருந்து யாத்திரையை தொடர்ந்தோம்.
வழியில் தேநீர் , காலை குளியல்.
வழிநெடுகிலும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாகவும் குறுகியதாகவும் இருந்தது .
சாலையில் நடப்பது சிரம்மமாகவும் பாதுகாப்பு அற்றதாக வும் இருந்தது .
பிம்பல்குடி, சோனா என்ற ஊர்கள்வழியாக 8.00 மணிக்கு கீளாப்பூர் என்ற ஊர் வந்து சேர்ந்தோம் .
செகதாம்பாள் கோயிலில் தங்கல் .
8.30 க்கு காலை உணவு .
ஓய்வு .
இந்த ஊரில் உள்ள கரூர்தமிழ் அன்பர் வந்து அடியார்களை வரவேற்று உதவிகள் செய்தார் .
ஊர்ப் பெரியோர்கள் சிலர் வந்து குருஜி யிடம் ஆசி பெற்று ச் சென்றனர் .
பயண தூரம் 16 கி.மீ.
செகதாம்பாள் கோயில் உயரமான கருவறை விமானம் .
பெரிய மண்டபம் .
திருவிழாக் காலங்களில் அடியார்கள் வந்து தங்கி வழிபடுவதற்கு அனைத்து வசதிகளும் உள்ளன .

































வியாழன், 7 ஜூன், 2018

காசி பாதயாத்திரை, புதுக்கோட்டை, அருள்மிகு ஸ்ரீ ருக்மிணி தாயார் சமேத ஸ்ரீவிட்டல் பாண்டுரெங்கர் ஆலயம்.

இராமேசுவரம் காசி பாதயாத்திரை

அருள்மிகு ஸ்ரீ ருக்மிணி தாயார் சமேத
ஸ்ரீவிட்டல் பாண்டுரெங்கர் ஆலயம்
புதுக்கோட்டை


















புதுக்கோட்டை, அருள்மிகு ஸ்ரீ ருக்மிணி தாயார் சமேத ஸ்ரீவிட்டல் பாண்டுரெங்கர் ஆலயம். ஸ்ரீ காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் இராமேச்சுரம் - காசி (110 நாட்கள்) பாதயாத்திரை மேற்கொண்டிருந்தார்.
பாதயாத்திரையின் போது, 07 சூன் 2014 அன்று இந்தக் கோயிலுக்கு யாத்திரிகர்களுடன் வந்து வழிபாடு செய்து கொண்டார். ராசகோபுரம் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அருகில் உள்ள தெப்பக்குளத்தைத் தூர் எடுத்துச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். இந்தத் தேப்பத்தில் இரண்டு அடி உயரத்திற்கும் மேலாகக் களிமண் தேங்கி இருந்த காரணத்தினால், இதில் குளிக்கும் பலரும் மூழ்கி இறந்தனர். இதில் இறங்கும் ஆடுமாடுகளும் மூழ்கி இறந்துள்ளன. எனவே இந்தத் தெப்பக்குளத்தின் களிமண்ணை முற்றிலுமாக அள்ளி எடுக்கும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

https://goo.gl/maps/vkjpmLwSroM2


அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்