இராமேசுவரம் - காசி பாதயாத்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராமேசுவரம் - காசி பாதயாத்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

05.08.2014 காசி பாதயாத்திரை - 72ஆம் நாள் - ஆடி 20

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.   இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று முன்தினம் இச்சோடா என்ற ஊர் எல்லையில் உள்ள "சார்ப் கார்டன் " என்ற கல்யாண மண்டபத்திற்கு வந்து  தங்கி இருந்தோம்.
நேற்று முழு ஓய்வு.


இன்று 72ஆம் நாள் - ஆடி 20 (05.08.2014) செவ்வாய்க் கிழமை. 
தினவழிபாட்டை முடித்துக் கொண்டு 4.00க்கு இச்சோடா என்ற ஊரிலிருந்து யாத்திரையை தொடர்ந்தோம்.

5.29 am

5.59 am

6.09 am
6.40 am
வாகன ஓட்டிகள் வண்டியில் இருந்தபடியே குடித்துவிட்டுப் பாட்டில்களைச் சாலையோரம் தூக்கியெறிந்து விட்டுச் செல்கின்றனர்.   தமிழ்நாட்டில் இராமேசுவரம் தொடங்கி, ஆந்திராவில் டோன்ரகான் (Dongragaon) வரை சாலையோரம் இது போன்ற மதுப்பாட்டில்களைக் காண முடிந்தது.   

மழை தூரிக் கொண்டிருந்தது.
வழியில்  டோன்ரகான் (Dongragaon) பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து ரொட்டியும் தேநீரும்  சாப்பிட்டுக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.

7.47 am


7.51 am

8.30 am




8.35 am

8.37 am
மலையும் மலை சார்ந்த பகுதியும் , வழி நெடுகிலும் இரண்டு பக்கமும் மலைத் தொடர்கள்.  ஒரு இடத்தில் சுமார் 30 அடி அளவிற்கு சாலை உயர்த்தப்பட்டது இருந்தது.  இரண்டு இடங்களில் புலிகள் நடமாட்டம் உள்ள பகுதி என்ற அறிவிப்பு காணப்பட்டது.

8.40 am

8.43 am

9.05 am

9.19 am
சீதாகுடி என்ற ஊரில் உள்ள சிவன் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.  மழைபெய்து ஈரமாக இருந்த காரணத்தினால் கோயிலில் அமர்ந்து சாப்பிட வசதியாக இடமில்லை. கோயில் வளாகத்திலேயே பள்ளிக்கூடம் இருந்தது. பள்ளிக்கூடம் வராண்டாவில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டோம்.

9.20 am


10.05 am
வழியில் நல்வழி காட்டுதல் -
காலை மணி 10.00 மணிக்கு சீதாகுடி என்ற ஊரிலிருந்து மாவாலா சென்று கொண்டிருக்கும்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த லாரி ஒன்று எங்களைக் கடந்துசென்று நின்றது.  அதிலிருந்த ஓட்டுநர் இறங்கி வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுக் கொண்டார்.  


10.41 am

10.46 am

10.47 am

11.18 am

11.21 am

11.31 am

11.31 am

11.32 am

11.35 am
11.30 க்கு அடிலாபாத் அருகில் மாவாலா என்ற ஊரின் எல்லையில் உள்ள லெட்சுமி கல்யாண மண்டபம் வந்து அடைந்தோம்.  
மதிய உணவு.
ஓய்வு.
வசதியாகப் படுத்துத் தூங்கினோம்.  போர்வை வேட்டி துணிகளைத் துவைத்து உளர்த்திக் கொண்டோம்.

தங்கல்.


https://goo.gl/maps/dEKLhZ3P2nmQq7Fq6
இன்றைய பயணம் சுமார் 29 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

செவ்வாய், 11 செப்டம்பர், 2018

11.09.2014 இராமேசுவரம் காசி பாதயாத்திரை, மீசைக்கார நண்பன்

யாதும் ஊரே யாவரும் தமிழர்....

மீசைக்கார நண்பன்


இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.
109ஆவது நாள் பயணம்.
ஆவணி 26 ( 11.09.2014) வியாழக்கிழமை.

அதிகாலையில் சமோகரா என்ற ஊரிலிருந்து புறப்பட்டு சுனார் என்ற ஊரைநோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.
காலை மணி 8.15 அளவில் ஆற்றின் கரையோரம் உள்ள பட்ரி (PADARI) என்ற ஊர் வழியாகச் சென்று கொண்டிருந்தோம்.
வேகமாக நடப்போர் எல்லாம் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்தனர். ஓரிருவர் எனக்கும் பின்னே வந்து கொண்டிருந்தனர்.

நான் நடந்து செல்வதைச் சாலையோரம் உள்ள கடையில் உட்கார்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த ஒரு மீசைக்காரர் என்னை அவரிடம் வருமாறு சைகை காட்டி அழைத்தார். நான் அவரைப் பொருட்படுத்தாது நடந்து கொண்டிருந்தேன். உடனே அவர் எழுந்து வந்து என்னிடம் ஏதேதோ கேட்டார், ஏதேதோ சொன்னார்.

“இராமேசுவரம் - காசி பாதயாத்திரை. 109ஆவது நாள் பயணம்” என்பதை மட்டும் இந்தியில் சொன்னேன்.
அதைக் கேட்ட அவர் தனது மீசையை முறுக்கிக் காட்டி ஏதேதோ சொன்னார், ஏதேதோ கேட்டார்.
“உடல் பலமும், மனவளமும் மனிதனுக்குத்தேவை, ஆன்மிகம் வழிபாடு தேவையற்றது” எனச் சொல்கிறார் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.

மீசைக்கு மீசைதான் சரியாகும் என்று மனதிற் பட்டது. அதனால், எங்களுடன் பாதயாத்திரை வந்து கொண்டிருந்த காசிஸ்ரீ ‘தொப்பை’ என்ற களியபெருமாள் அவர்கள் வரும் வரை, நின்று அமைதியாக அவரது இந்திப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
அவரும் மீசையை மட்டும் முறுக்கி கொண்டே ஏதேதோ இந்தியில் சொல்லிக் கொண்டே இருந்தார்.
நண்பர் தொப்பைசாமி அவர்கள் எனது அருகில் வந்தும், அவரை அழைத்து அவரது மீசையை முறுக்கிக் காட்டச் சொன்னேன்.

தொப்பைசாமி அவரது மீசையை முறுக்கிக் காட்டியதுதான் தாமதம். அந்த மீசைக்காரர் எங்கள் மீது அளவுகடந்த அன்பு கொண்டார். பெரிதும் மகிழ்ந்து நெகிழ்ந்து ஏதேதோ இந்தியில் சொல்லிக் கொண்டே இருந்தார்.

எங்களைக் காசிக்கு அழைத்துச் சென்ற எங்களது குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அருகே வந்துவிட்ட காரணத்தினால் பத்ரி மீசைக்காரரிடம் விடைபெற்றுக் கொண்டு காசியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். காசி இங்கிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவு.

முறுக்கு மீசைக்கு இவ்வளவு மதிப்பா?






அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்