திங்கள், 10 செப்டம்பர், 2018

09.09.2014, இராமேசுவரம் காசி பாதயாத்திரை

09.09.2014, ஆவணி 24, செவ்வாய் கிழமை.
இராமேசுவரம் - காசி பாதயாத்திரை,
107ஆவது நாள்.
மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஹனுமானா என்ற ஊரில் இருந்து புறப்பட்டோம். ஊரின் எல்லையின் உத்திரப்பிரதேசம். அதிகாலையில் விடியும் நேரம் உத்திரப்பிரதேசத்திற்குள் நுழைந்தோம்.
மலைத் தொடரின் அடிவாரத்தில் மோகோரை (Mahugari) என்ற ஊரில் ஆற்றின் தென்கரையில் உள்ள Dramandganj துர்கை, அனுமன் கோயிலில் தங்கி இளைப்பாறினோம்.
மாலை நேரம் இங்கிருந்து புறப்பட்டு பரோதா (Belan Baraudha), லால்கஜ் (Lalganj) ஊரிகளின் வழியாகச் செண்பத்பள்ளி என்ற ஊருக்குச் சென்று தங்கினோம்.
நவராத்திரி விழாவிற்காக குச்சியில் வைக்கோல் சுற்றிக் களிமண்ணால் பூசித் துர்க்கை பொம்மைகள் செய்து கொண்டிருந்தனர்.






















































ஹனுமானா ஊரைச் சேர்ந்த அன்பர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் மலைப் பாதையில் Bhairo Baba Mandir அருகே சென்று கொண்டிருந்த போது யாத்திரிகர்களைக் கண்டு, வண்டியை நிறுத்தி, இறங்கி வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களின் ஆசி பெற்றனர். 
லால்கஞ் ஊரின் எல்லையில் கோலிக்குண்டு விளையாடும் குழந்தை ஒன்றைப் பார்த்தோம்.
இங்கு ஆற்றின் அருகே சிமிண்ட் கால்வாய் கட்டி மிகப் பெரிய அளவில் நீர்ப்பாசனம் செய்து வருகின்றனர்.
https://goo.gl/maps/zF1FQJh6gnE2

சனி, 8 செப்டம்பர், 2018

நாட்டு ஓடு போட்ட வீடு

மத்தியப்பிரதேசம் அனுமானா ஊர் அருகே நாட்டுஓடு போட்ட வீடு.

07.09.2014 இராமேசுவரம் காசி பாதயாத்திரை

ஆவணி 22 (07.09.2014) ஞாயிற்றுக் கிழமை
இராமேசுவரம் காசி பாதயாத்திரை
105ஆவது நாள்

மத்தியப்பிரதேசம் ரகுநாத்கஞ்ச் (Raghunath Ganj) என்ற ஊரில் இருந்து புறப்பட்டு பன்னி (Panni) என்ற ஊர் வழியாக மௌகஞ் (Mauganj) என்ற ஊரை அடைந்தோம்.
மௌகஞ் ஊராரின் சார்பாக மருத்துவர் இராஜேந்திரன் (பூர்வீகத் தமிழர், இப்போது இவரது பெயர் மட்டும் தமிழில் உள்ளது) அவர்களும் அவர நண்பர்களும் எங்களை ஊரின் எல்லையில்  நின்று வரவேற்றனர்.
கிருஷ்ணர் கோயிலில் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுத்தனர்.
ஊரார் பலரும் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றனர்.

இன்றைய பயணத் தூரம் 24 கி.மீ.
சாலைகளை அகலப்படுத்தி நான்குவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.  செம்மண் பரப்பிச் சாலைகளை உயர்த்திக் கொண்டிருந்தனர்.  மழை பெய்திருந்த காரணத்தினால்  இன்றைய பயணம் முழுவதும் ஒரே சேரும் சகதியுமாக இருந்தது. 

வழியில் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.  தமிழ்நாட்டில் விளையாடும் அதே விளையாட்டு மத்தியப்பிரதேசத்திலும் விளையாடப்படுகிறது.  இது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. 
மௌகஞ் ஊரில் சிறுவர்கள் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.

https://goo.gl/maps/mH7eBKs3wiR2

வியாழன், 6 செப்டம்பர், 2018

சொட்டாங்காய் அல்லது சொட்டாங்கல் விளையாட்டு

இராமேசுவரம் - காசி பாதயாத்திரை




103ஆவது நாள்.
ஆவணி 20 (06.09.2014) 

சொட்டாங்காய் அல்லது சொட்டாங்கல் விளையாட்டு. தமிழகத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் விளையாடும் விளையாட்டு. இதை மத்தியப்பிரதேசம் ரீவா நகரத்திலிருந்து காசி செல்லும் வழியில் உள்ள “கற்சுழியன்” என்ற ஊர் உள்ளது.  இந்த ஊரின் பெயர் தமிழ்ப் பெயர்போன்று உள்ளது.

மேலும் இந்த ஊரில் உள்ள குழந்தைகள் “சொட்டாங்காய்” விளையாடுகின்றனர். இந்தக் காரணங்களால் இந்த ஊர் பண்டைக்காலத்தில் தமிழரது ஊராக இருந்திருக்குமோ என்ற எண்ணம் எனக்கு.





இந்த ஊரின் சாலையோரம் காலைநேரத்தில் தேநீரும் ரொட்டியும் சாப்பிட்டோம்.

சாலையோரம் இருந்த வீட்டின் வாயிலில் இருந்த மரத்தின் அடியில் நடனம் இசை இவற்றுடன் தொடர்புடைய கற்சிற்பத் தூண் ஒன்றின் ஒரு சிறு பகுதி கிடந்தது.
Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan


karchuliyan, கற்சுழியன் என்ற ஊரில் கிடக்கும் சிற்பத்தூண்








Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan
Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan

Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan


Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan



Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan

Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan

இந்த ஊரின் பெயரானது கற்சுழியன் என்று உள்ள காரணத்தினாலும்,  
இந்த ஊரின் குழந்தைகள் சொக்கட்டாங்காய் விளையாடுகின்ற காரணத்தினாலும், 
இந்த ஊரில் நாட்டியமுத்திரைகள் கொண்ட தூண்சிற்பம் கிடப்பதாலும்,
இந்த ஊரானது பண்டைக்காலத்தில் தமிழரின் ஊராக இருந்திருக்குமோ?

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்