சனி, 8 செப்டம்பர், 2018

07.09.2014 இராமேசுவரம் காசி பாதயாத்திரை

ஆவணி 22 (07.09.2014) ஞாயிற்றுக் கிழமை
இராமேசுவரம் காசி பாதயாத்திரை
105ஆவது நாள்

மத்தியப்பிரதேசம் ரகுநாத்கஞ்ச் (Raghunath Ganj) என்ற ஊரில் இருந்து புறப்பட்டு பன்னி (Panni) என்ற ஊர் வழியாக மௌகஞ் (Mauganj) என்ற ஊரை அடைந்தோம்.
மௌகஞ் ஊராரின் சார்பாக மருத்துவர் இராஜேந்திரன் (பூர்வீகத் தமிழர், இப்போது இவரது பெயர் மட்டும் தமிழில் உள்ளது) அவர்களும் அவர நண்பர்களும் எங்களை ஊரின் எல்லையில்  நின்று வரவேற்றனர்.
கிருஷ்ணர் கோயிலில் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுத்தனர்.
ஊரார் பலரும் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றனர்.

இன்றைய பயணத் தூரம் 24 கி.மீ.
சாலைகளை அகலப்படுத்தி நான்குவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.  செம்மண் பரப்பிச் சாலைகளை உயர்த்திக் கொண்டிருந்தனர்.  மழை பெய்திருந்த காரணத்தினால்  இன்றைய பயணம் முழுவதும் ஒரே சேரும் சகதியுமாக இருந்தது. 

வழியில் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.  தமிழ்நாட்டில் விளையாடும் அதே விளையாட்டு மத்தியப்பிரதேசத்திலும் விளையாடப்படுகிறது.  இது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. 
மௌகஞ் ஊரில் சிறுவர்கள் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.

https://goo.gl/maps/mH7eBKs3wiR2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக