இராமேசுவரம் - காசி பாதயாத்திரை
103ஆவது நாள்.
ஆவணி 20 (06.09.2014)
சொட்டாங்காய் அல்லது சொட்டாங்கல் விளையாட்டு. தமிழகத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் விளையாடும் விளையாட்டு. இதை மத்தியப்பிரதேசம் ரீவா நகரத்திலிருந்து காசி செல்லும் வழியில் உள்ள “கற்சுழியன்” என்ற ஊர் உள்ளது. இந்த ஊரின் பெயர் தமிழ்ப் பெயர்போன்று உள்ளது.
மேலும் இந்த ஊரில் உள்ள குழந்தைகள் “சொட்டாங்காய்” விளையாடுகின்றனர். இந்தக் காரணங்களால் இந்த ஊர் பண்டைக்காலத்தில் தமிழரது ஊராக இருந்திருக்குமோ என்ற எண்ணம் எனக்கு.
இந்த ஊரின் சாலையோரம் காலைநேரத்தில் தேநீரும் ரொட்டியும் சாப்பிட்டோம்.
சாலையோரம் இருந்த வீட்டின் வாயிலில் இருந்த மரத்தின் அடியில் நடனம் இசை இவற்றுடன் தொடர்புடைய கற்சிற்பத் தூண் ஒன்றின் ஒரு சிறு பகுதி கிடந்தது.
Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan |
karchuliyan, கற்சுழியன் என்ற ஊரில் கிடக்கும் சிற்பத்தூண் |
Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan |
Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan |
Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan |
Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan |
Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan |
Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan |
இந்த ஊரின் பெயரானது கற்சுழியன் என்று உள்ள காரணத்தினாலும்,
இந்த ஊரின் குழந்தைகள் சொக்கட்டாங்காய் விளையாடுகின்ற காரணத்தினாலும்,
இந்த ஊரில் நாட்டியமுத்திரைகள் கொண்ட தூண்சிற்பம் கிடப்பதாலும்,
இந்த ஊரானது பண்டைக்காலத்தில் தமிழரின் ஊராக இருந்திருக்குமோ?
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக