காசிஸ்ரீ பட்டம் பெற்றது
காசிஸ்ரீ கி.காளைராசன் |
காசிஸ்ரீ பட்டம் பெற்ற பாதயாத்திரிகர் 19.09.2014 |
வணக்கம்.
இன்று 19.09.2014 ஶ்ரீ காசி விசுவநாதர் ஆலயத்தின் உதவி நிர்வாக அலுவலர் அவர்கள், குருஜி பச்சைக்காவடி அவர்களது தலையில் இராமேஸ்வரம் காசி பாத யாத்திரிகர் அனைவருக்கும் "காசி ஶ்ரீ" பட்டம் வழங்கினார்.
திருப்பூவணக் காசி, திருப்பூவணம் |
திருப்பூவணக் காசி, திருப்பூவணம் |
திருப்பூவணக்காசி ‘நூல் வெளியீட்டு விழா’ |
திருப்பூவணக்காசி ‘நூல் வெளியீட்டு விழா’ |
பேராசிரியர் இராம. திண்ணப்பன் செட்டியார் அவர்கள் நல்லாசி வழங்குகிறார் |
“காசியைக் கண்ணால் பார்த்ததுகூடக் கிடையாது. திருப்பூவணக் காசி என்று எழுதி வெளியிட்டுள்ளேன். அடியேன் காசிக்குச் சென்று வழிபட அருள் செய்திட வேண்டும்” எனத் திருப்பூவணனிடம் வேண்டிக் கொண்டேன். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி ஓடிக் கொண்டிருந்தன. 2014ஆம் ஆண்டு சித்திரை வளர்பிறை பிரதோசம் அன்று திருப்பூவணத்தில் அன்னதாசம் நன்முறையில் சிறப்பாக நடைபெற்று முடிந்திருந்தது. மானாமதுரை சுவாமிஜி அவர்களும், திருப்பூவணம் ஸ்ரீ பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளையின் தலைவர், மனிதருள் புனிதர் பேராசிரியர் இராம.திண்ணப்பன் ஐயா அவர்களும் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவர் அருகிலும் போய் நின்று கொண்டிருந்தேன். இருவரும் என்னை அருகில் அழைத்து அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். அப்போது, சுவாமிஜி அவர்ளையும், ஐயா திண்ணப்பன் அவர்களையும் பணிந்து வணங்கிக் “காசிக்கு நடந்து செல்ல விரும்புகிறேன்”, எனக்கு அருளுங்கள் என வேண்டிக் கொண்டேன். ஐயா திண்ணப்பன் அவர்கள், பொன்னமராவதி வலையபட்டியைச் சேர்ந்த காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்கள் காசிக்குப் பாதயாத்திரை செல்லும் போது சொல்கிறேன். நீங்களும் அவருடன் காசிக்குப் போய் வாருங்கள் என அருளிச் செய்தார்கள்.
ஐயா திண்ணப்பன் அவர்கள் சொன்னபடியே, காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களுடன் தொடர்பு கொண்டு என்னையையும் அவர்களுடன் காசிக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
24.05.2014 பொன்னமராவதி வலையபட்டி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது வீட்டிற்குச் சென்று,
25.05.2014 அன்று பொன்னமராவதியில் வழிபாடு செய்து கொண்டு, பிள்ளையார்பட்டியில் வழிபாடு செய்து கொண்டு இராமேசுவரம் சென்று சேர்ந்தோம்.
26.05.2014 அன்று இராமேசுவரத்தில் காலையில் வழிபாடு செய்து கொண்டு, மாலை நேரத்தில் இராமேசுவரம் தெற்குக் கோபுரம் அருகில் இருந்து காசி பாதயாத்திரையைத் துவக்கினோம்.
12.09.2014 அன்று காசி மாநகர் சென்று சேர்ந்தோம்.
19.09.2014 அன்று “காசிஸ்ரீ” என்ற பட்டத்தை, அருள்மிகு காசி விசுவநாதர் ஆலய நிருவாகி எங்களுக்கு வழங்கிச் சிறப்புச் செய்தார்.
அருள்மிகு திருப்பூவணன் மின்னாள் திருவருளாலும்,
அருள்மிகு சக்குடி ஆதிமீனாட்சி உடனாய ஆதிசொக்கநாதர் திருவருளாலும்,
அருள்மிகு புலிக்கரை ஐயனார் திருவருளாலும்,
மற்றும் நான் வழிபடும் தெய்வங்களின் திருவருளினாலும்,
மானாமதுரை சுவாமிஜி அவர்களது நல்லாசியினாலும்,
பேராசிரியர் ஐயா திண்ணப்பன் அவர்களது நல்லாசியினாலும்,
மற்றும் நான் வழிபடும் தெய்வம் நிகர் நல்லோர்களின் ஆசியினாலும்
“காசிஸ்ரீ காளைராசன்” என்ற பட்டம் இன்று (19.09.2014) எனக்குக் கிடைத்தது.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக