சனி, 8 செப்டம்பர், 2018

நாட்டு ஓடு போட்ட வீடு

மத்தியப்பிரதேசம் அனுமானா ஊர் அருகே நாட்டுஓடு போட்ட வீடு.

07.09.2014 இராமேசுவரம் காசி பாதயாத்திரை

ஆவணி 22 (07.09.2014) ஞாயிற்றுக் கிழமை
இராமேசுவரம் காசி பாதயாத்திரை
105ஆவது நாள்

மத்தியப்பிரதேசம் ரகுநாத்கஞ்ச் (Raghunath Ganj) என்ற ஊரில் இருந்து புறப்பட்டு பன்னி (Panni) என்ற ஊர் வழியாக மௌகஞ் (Mauganj) என்ற ஊரை அடைந்தோம்.
மௌகஞ் ஊராரின் சார்பாக மருத்துவர் இராஜேந்திரன் (பூர்வீகத் தமிழர், இப்போது இவரது பெயர் மட்டும் தமிழில் உள்ளது) அவர்களும் அவர நண்பர்களும் எங்களை ஊரின் எல்லையில்  நின்று வரவேற்றனர்.
கிருஷ்ணர் கோயிலில் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுத்தனர்.
ஊரார் பலரும் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றனர்.

இன்றைய பயணத் தூரம் 24 கி.மீ.
சாலைகளை அகலப்படுத்தி நான்குவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.  செம்மண் பரப்பிச் சாலைகளை உயர்த்திக் கொண்டிருந்தனர்.  மழை பெய்திருந்த காரணத்தினால்  இன்றைய பயணம் முழுவதும் ஒரே சேரும் சகதியுமாக இருந்தது. 

வழியில் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.  தமிழ்நாட்டில் விளையாடும் அதே விளையாட்டு மத்தியப்பிரதேசத்திலும் விளையாடப்படுகிறது.  இது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. 
மௌகஞ் ஊரில் சிறுவர்கள் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர்.

https://goo.gl/maps/mH7eBKs3wiR2

வியாழன், 6 செப்டம்பர், 2018

சொட்டாங்காய் அல்லது சொட்டாங்கல் விளையாட்டு

இராமேசுவரம் - காசி பாதயாத்திரை




103ஆவது நாள்.
ஆவணி 20 (06.09.2014) 

சொட்டாங்காய் அல்லது சொட்டாங்கல் விளையாட்டு. தமிழகத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் விளையாடும் விளையாட்டு. இதை மத்தியப்பிரதேசம் ரீவா நகரத்திலிருந்து காசி செல்லும் வழியில் உள்ள “கற்சுழியன்” என்ற ஊர் உள்ளது.  இந்த ஊரின் பெயர் தமிழ்ப் பெயர்போன்று உள்ளது.

மேலும் இந்த ஊரில் உள்ள குழந்தைகள் “சொட்டாங்காய்” விளையாடுகின்றனர். இந்தக் காரணங்களால் இந்த ஊர் பண்டைக்காலத்தில் தமிழரது ஊராக இருந்திருக்குமோ என்ற எண்ணம் எனக்கு.





இந்த ஊரின் சாலையோரம் காலைநேரத்தில் தேநீரும் ரொட்டியும் சாப்பிட்டோம்.

சாலையோரம் இருந்த வீட்டின் வாயிலில் இருந்த மரத்தின் அடியில் நடனம் இசை இவற்றுடன் தொடர்புடைய கற்சிற்பத் தூண் ஒன்றின் ஒரு சிறு பகுதி கிடந்தது.
Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan


karchuliyan, கற்சுழியன் என்ற ஊரில் கிடக்கும் சிற்பத்தூண்








Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan
Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan

Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan


Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan



Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan

Rameswaram Kasi PathyaYathra, Pedestrians at karchuliyan

இந்த ஊரின் பெயரானது கற்சுழியன் என்று உள்ள காரணத்தினாலும்,  
இந்த ஊரின் குழந்தைகள் சொக்கட்டாங்காய் விளையாடுகின்ற காரணத்தினாலும், 
இந்த ஊரில் நாட்டியமுத்திரைகள் கொண்ட தூண்சிற்பம் கிடப்பதாலும்,
இந்த ஊரானது பண்டைக்காலத்தில் தமிழரின் ஊராக இருந்திருக்குமோ?

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

குனேருமோசாம் கிராமத்தினருக்கு இது முழு நம்பிக்கை

பகூத்அறிவாளிகளுக்கு
இது ஒரு மூட நம்பிக்கை.
ஆனால், குனேருமோசாம் கிராமத்தினருக்கு இது முழு நம்பிக்கை.








குனேருமோசாம் - மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓர் ஊர். தேசிய நெடுஞ்சாலை எண் 7, சபல்பூர் - டியோரி க்கு இடையே, சாலையிலிருந்து மேற்கே உள்ளது. புவிப்படத்தை இணைத்துள்ளேன்.

ஊரில் தினம் ஒரு சாவு. விடிந்ததும் யாரும் வெளியில் வரவே மனம் வருந்தினர். வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தால் யார் வீட்டில் யார் செத்தார் என்ற செய்தியே தினமும் காதில் விழுந்து கொண்டிருந்தது. ஊரால் ஒன்றுகூடிப் பேசி, ஊரைவிட்டுக் காலிசெய்து வேறு எங்காவது போய்விடலமா? என ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
இவ்வாறான நாட்களில் ஊரார் சிலர் தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை மேற்கொண்டிருந்த காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்துத் தங்களது ஊரின் நிலைமையை எடுத்துக் கூறினர். காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் குனேருமோசாம் கிராமத்திற்கு அவருடன் வந்து பாதயாத்திரை அடியார்களுடன் சென்று தங்கினார். கோயில் வாசலில் உள்ள குளத்தைச் சுற்றி வந்தார். அங்கே ஒரு அடர்ந்த மூங்கில் புதர் இருந்தது. அதனுள்ளே யாரோ சிலர் தங்கி யிருந்த அடையாளங்கள் இருந்தன. காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்கள் அந்த இடத்தில் தனது கையில் இருந்த திருநீற்றைத் தூவி விட்டுள்ளார். அதன் பின்னர் காசியாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

சில நாட்களில் அந்தக் கிராமத்தினர் அந்த மூங்கில் புதருக்குள் மந்திரவாதி ஒருவன் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். அந்த நாள் தொடர்ந்து அந்தக் கிராமத்தில் எந்தவொரு உயிர் இழப்பும் இல்லாமல் போனது.

இதனால் இந்த ஊரார் ஒவ்வொரு ஆண்டும் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்கள் இராமேசுவரம் - காசி பாதயாத்திரை மேற்கொள்ளும் போது, தங்களது ஊருக்கு அழைத்துச் சென்று தங்கவைத்து உபசரிக்கின்றனர்.

ஊர்க் கோயிலின் உள்ளேயும், கிராமத்தினரின் ஒவ்வொரு வீட்டின் பூசையறையிலும் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் படத்தை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். யாத்திரிகர்கள் இந்தக் கிராமத்தில் தங்கி யிருந்த இரண்டு நாட்களிலும் ஒவ்வொருவர் வீட்டிற்கும் அழைத்துச் சென்று விருந்து உபசரித்தனர்.

ஆவணி 12 மற்றும் 13 (28, 29.08.2014) ஆகிய இரண்டு தினங்கள் யாத்திரிகர்கள் இங்கே தங்கிச் சென்றோம்.

G479+G4 Gunahru, Madhya Pradesh

https://goo.gl/maps/BcbDnqewk512









அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

குஷ்தி, மல்யுத்தம், மற்போர்,



குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டோம்.
....
ஆவணி 12 (28.08.2014) யாத்திரையின்
95 ஆம் நாள்.
மத்தியப்பிரதேச ம் சிகோரா நகரின் அருகில் உள்ள குனேறுமோசாம் (gunahru) குஸ்திஎன்ற கிராமத்தில் தங்கல் .
ஓய்வு .
விடிந்தால் விநாயகர் சதுர்த்தி . கிராமத்தில் நிலத்தை கிளறி விளையாட்டு மைதானம் அமைத்திருந்தனர்.


















































































































































பார்ப்பதற்கு கபடி விளையாட்டு மைதானம் போல் இருந்தது.
என்ன விளையாட்டு என் விசாரித்த போது "அஹாடா" (aakhada ) என்றனர் .
மாலை 4.00 மணிக்கு கூட்டம் கூட ஆரம்பித்தது .
யாத்திரிகர்களும் வேடிக்கை பார்க்கச் சென்றோம் .
ஊரார் எங்களை வரவேற்று அமரச் செய்து வெற்றி வீரர்களுக்கான பரிசுகளை எங்கள் கைகளால் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர் .
போட்டி ஆரம்பம் ஆன போதுதான் அது "மல்யுத்தம்" என்று தெரிந்தது .
7 வயது சிறுவர் முதல் 30 வயது இளைஞர் வரை பங்கேற்றனர் .
முதலில் பயிற்சியின் போது பயன் படுத்தும் பொருட்களை வைத்து பூஜை செய்து அவரவர் ஆசான்களை வணங்கிக் கொண்டனர் . பரிசு பொருளை கூட்டத்தினரிடம் காட்டி ,  பரிசை வென்றிட வருமாறு அழைப்பு விடுக்கின்றனர் . போட்டியாளர் (முதல் இருவர் ) களத்தில் இறங்கிய உடன் போட்டி துவங்கி விடுகிறது . போட்டிக்கு
2, 3, 5 நிமிடங்கள் என நேரம் ஒதுக்கப் படுகிறது .
முதுகில் மண் ஒட்டுமாறு எதிராளியை கீழே தள்ள வேண்டும் . முதுகில் மண் ஒட்டியவர் தோற்றவர் ஆவார்.
குறிப்பிட்ட நேரத்திற்குள் யாரும் வெற்றி தோல்வி அடைய வில்லை என்றால் , போட்டி சமன் என்று அறிவிக்கப்படுகிறது. போட்டியாளர் இருவரும் விருப்பம் தெரிவித்தால் போட்டி மீண்டும் நடை பெறுகிறது .
போட்டிகள் மிகவும் கடுமையாகவும் விறுவிறுவுப்பாக இருந்தன.
வெற்றி வீரர்களுக்கு யாத்திரிகர் பரிசுகளை வழங்கினர் . வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பணப்பரிசு களும் யாத்திரிகர்களால் வழங்கப்பட்டன.
நடுவர் மற்றும் ஆசான்களை வணங்கி போட்டிகள் நிறைவடைந்தன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் குஸ்தி போட்டி களை கிராமத்தினர் சிறப்பாக நடத்துவது பெருமை யாக இருந்தது .
இந்தியாவின் ஆன்மிகம் வீரம் வளமை கிராமங்களில் உள்ளன .

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்