வியாழன், 30 ஜூலை, 2020

31.07.2015 காசி யாத்திரை

31.07.2015 காசி யாத்திரை



31.07.2014 காசி பாதயாத்திரை - 67ஆம் நாள் - ஆடி 15

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  
நேற்று முன்தினம் சதாசிவநகரில் உள்ள “ஸ்ரீ வாணி வித்யாலயம்” வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.
நேற்று முழுதும் ஓய்வு.

இன்று 67ஆம் நாள் - ஆடி 15 (31.07.2014) வியாழக் கிழமை. 

அதிகாலை 2.10 மணிக்கு யாத்திரைக்குத் தயார் ஆனோம்.   வழக்கம்போல் காலை வழிபாடு முடித்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு நடக்கத் தொடங்கினோம்.

5.32 am

அதிகாலை மணி 5.34 அளவில் சாலையோரம் இருந்த காளி கோயிலைக் கண்டு வணங்கிக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம். 
(கோயில் இருப்பிடம் https://goo.gl/maps/RdvuiNYqjni6Ht1dA)

காலை 7.50 அளவில் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றோம்.



8.49 am

8.51 am

8.53 am

9.08 am

9.22 am

9.23 am

9.29 am
காலை 9.30 மணிக்கு டிச்பள்ளி ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.

9.39 am
நான்குவழிச்சாலை அமைக்கப்படுவதற்கு முன்பு,  இந்தக் கோயிலில் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்குமாம்.   இந்தக் கோயிலைக் கடந்து செல்லும் அனைத்து வாகனங்களும் இங்கே நின்று செல்லுமாம்.  இப்போது ஒருவழிச் சாலையாக ஆகிவிட்டபடியால், கோயிலுக்கு என வருபவர்கள்கூட நெடுந்தொலைவு சுற்றி வரவேண்டியுள்ளது. எனவே இருசக்கர வாகனங்களில் வருவபர்கள் மட்டுமே கோயிலுக்கு வந்து செல்கின்றனராம்.


12.09 pm

12.10 pm

4.09 pm
மாலை நேரத்தில் நல்ல மழை பெய்தது.

https://goo.gl/maps/bRpJV7mbba8usSAq9
இன்றைய பயணம் சுமார் 23 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

30.07.2015 காசி யாத்திரை


On his way to Varanasi from Rameswaram, 
Guru Magaraj, Kasi Sri, Batchaikavadi, is at Gorakhpur Gram Panchayat  (गोरखपुर ग्राम पंचायत), Madhya Pradesh 480882 
on 30 july 2015 ·


google map : https://goo.gl/maps/niLTwSgFvqKBe6t46


Kasi Sri, Dr. K. Kalairajan Krishnan  with his friends.


(Chaparakala 717)


31.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 54 ஆவது நாள், ஆடி 15

அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர்  4) பழனி 5) சுவாமிமலை  ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.  
சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில், வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் வழிபாடு செய்து கொண்டு 
நேற்று தைலாபுரம் வந்து தங்கி இருந்தோம்.

இன்று 54 ஆவது நாள், ஆடி 15 ( 31.07.2017) வியாழக் கிழமை.
இன்று அதிகாலை 3.00 மணிக்கு எழுந்து   வழிபாடு முடித்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.
யாத்திரை தொடங்கியது.
சிறு தூரல் விழுந்து கொண்டிருந்தது.
குடை பிடித்துக் கொண்டு நடந்தோம்.
பெரியதாக மழை வரவில்லை.




திண்டிவனம் எல்லையில் வடை தேநீர் சாப்பிட்டுக் கொண்டு நடந்தோம்.






காலை 8.10 மணிக்கு திண்டிவனம் மணக்குளவிநாயகர் திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தோம்.



திண்டிவனம் சிவனடியார் கூட்டத்தினர் ஒருவர் வந்து வரவேற்றார்.

9.10க்கு காலைச் சிற்றுண்டி.
ஓய்வு.
மதியம் 2.00 மணிக்கு உணவு
மாலை 4.20 மணிக்கு வழிபாடு
அல்வா ரொட்டி தேநீர்.

மாலை 4:30க்கு அருள்மிகு மரகதாம்பிகை உடனாய திந்திரிணீசுவரர் ஆலய வழிபாடு. 





திந்திரி என்றால் புளி.
“ திந்திரிணீசுவரர் என்றால்  புளியமரங்களால் ஆன காட்டில் உள்ள ஈசுவரன் (புளியமரம் படிமம் ஆகிச் சிவலிங்கமாகி உள்ளது) எனப் பொருள் கொள்ளலாம்” என்பது எனது கருத்து.  திந்திரிணீசுவரர் தலபுராணம் கிடைத்தால் இந்தக் கருத்தை உறுதி செய்யலாம்.










சிவவழிபாட்டை முடித்துக் கொண்டு அருகில் உள்ள லெட்சுமி நரசிம்மர்கோயிலுக்குச் சென்றோம்.   அருள்மிகு கனகவல்லித்தாயார் லெட்சுமிநரசிம்மர் வழிபாடு.








இரவு 7.00 மணிக்கு வழிபாடு
ஓய்வு


https://goo.gl/maps/eC9S2KpF8HK5haBw8

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்