புதன், 16 செப்டம்பர், 2020

17.09.2014 காசி யாத்திரை - 115 ஆம் நாள், புரட்டாசி 1

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி நேற்று முன்தினம் 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.

இன்று 115 ஆம் நாள் - புரட்டாசி 1 (17.09.2014) புதன் கிழமை.

காலையில் அருள்மிகு காசிவிசுவநாதர் வழிபாடு.  கூட்டம் கூடுதலாக இருந்தது.  யாத்திரிகர்கள் கூடுதலாகச் சிறிது நேரம் சந்நிதியில் நின்று வழிபாடு செய்ய அனுமதித்தனர்.  குருசாமி பச்சைக்காவடி அவர்களும் யாத்திரிகர்களும் அருள்மிகு காசிவிசுநாருக்கு அவரவர் கைகளால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்துகொண்டனர்.

மதிய உணவிற்குப் பின்னர் பலரும் காசியில் பொருட்கள் வாங்குவதற்குச் சென்றனர்.  தீர்த்தம் உத்திராட்சம் சிறியவிக்கிரகங்கள் மற்றும் பல வழிபாட்டுப் பொருட்களும், காசியில் செய்யப்படும் தோசைக்கல் முதலான பொருட்களும் நகரத்தார் சத்திரத்திரத்திலும் தரமாகவும் விலைகுறைவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

யாத்திரிகர்களும் யாத்திரிகர்களின் உறவினர்களும் நகரத்தார் சத்திரத்திற்கும், கடைவீதிக்கும்  சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டனர்.







காசியில் துணிமணிகள் விலை மலிவு.  நுணுக்கமாக விலை விசாரித்து வாங்கினால் மிகவும் இலாபம்.   காசியிலிருந்து தொடர்வண்டி புறப்படும் நேரத்தில் ஒருவர் வேகவேகமாக வந்து இரண்டு 5அடி உயர சூட்கேஸ்களை ஏற்றினார்.  நல்லவேளை வண்டி நகரும்போதே அவரும் ஏறிவிட்டார்.  அவருக்கு உதவி செய்த காரணத்தினால்  என்னுடன் நட்புடன் பேசினார்.  அவர் கும்பகோணம் என்றும் காசிக்கு வந்து சேலைகள் வாங்கிச் செல்வதாவும் கூறினார்.  ஏ.சி. வண்டியில் பயணம் செய்து இவற்றை வாங்கிச் செல்கின்றீர்களே? உங்களுக்கு இலாபம் கிடைக்குமா? என்று கேட்டேன்.  காசியில் சேலைகள் மிகவும் விலை மலிவு,  இந்த இரண்டு சூட்கேஸ்களில் உள்ள சேலைகளை விற்றால் போதும், ஒரு வருட வியாபரத்திற்குச் சமம் என்றார்.   கடைகள் தெரிந்து, துணிகளின் தரம் தெரிந்து, அவற்றின் விலை தெரிந்து வாங்கினால், காசியில் சேலைகள் மிகமிக விலை மலிவு.  ஏ.சி.யில் பயணம் செய்தால் பொருட்கள் பாதுகாப்பாக இருக்கும் என்றார்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவேசுவர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக...

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


செவ்வாய், 15 செப்டம்பர், 2020

16.09.2014 காசி யாத்திரை - 114 ஆம் நாள், ஆவணி 31

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி நேற்று முன்தினம் 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.

இன்று 114 ஆம் நாள் - ஆவணி 31 (16.09.2014) செவ்வாய்க் கிழமை.

குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்களை காசி அருள்மிகு விசாலாட்சி கோயிலுக்கு அழைத்துச் சென்றார். யாத்திரிகர்கள் அனைவரும் அன்னையை வழிபட்டு உய்வு அடைந்தோம். 

இக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் திருப்பணி செய்யப் பெற்றது.  திருப்பணிகள் மற்றும் கும்பிஷேகம் தொடர்பான கல்வெட்டுகள் கோயிலில் உள்ளன.



4.47 pm

4.52 pm

4.53 pm


நாட்டுக்கோட்டை நகரத்தார் ஸ்ரீலஸ்ரீ விசாலாட்சி கோயில்த் திருப்பணி செய்து பிலவங்க வருடம் தை மாதம் 25ஆம் நாள் கும்பாஅபிஷேகம் நடத்தியது.

(குறிப்பு - நாட்டுக்கோட்டை நகரத்தாரால் காசி விஸ்வநாதர் கோயில் அருகே புதிய இடம் வாங்கி தமிழக கட்டிடகலையில் கி.பி1893இல் விசாலாட்சி கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு பிலவ ஆண்டு தை மாதம் 25ஆம் நாள்(கி.பி1908இல்) நாட்டுக்கோட்டை நகரத்தாரால் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வாகத்தில் உள்ளது.  சோமலெ (1963). ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர வரலாறு. பக். 40.)



ஸ்ரீ காசி விசாலாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
விரோதகிருது ஆண்டு ஐப்பசித் திங்கள் 15ஆம் நாள் (01.11.1971) திங்கள் கிழமை நடைபெற்றுள்ளது.


குரோதன ஆண்டு கார்த்திகைத் திங்கள் 7ஆம் நாள் (22.11.1985)இல்  கும்பாபிஷேகம் செய்யப் பெற்றுள்ளது.



பிரமாதி வருடம் ஐப்பசி மாத்ம் 24ஆம் நாள் (10.11.1999) புதன் கிழமை திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.

4.54 pm


ஸ்ரீ விஜய ஆண்டு சித்திரை மாதம் 4ஆம் நாள் (17.04.2013) புதன்கிழமை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.













மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவேசுவர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக...

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

திங்கள், 14 செப்டம்பர், 2020

15.09.2014 காசி பாதயாத்திரை - 113 ஆம் நாள், ஆவணி 30

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி நேற்று முன்தினம் 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.

இன்று 113 ஆம் நாள் - ஆவணி 30 (15.09.2014)  திங்கள் கிழமை.

இராமேசுவரம் காசி பாதயாத்திரை செய்த யாத்திரிகர்கள் அனைவருக்கும் காசிஸ்ரீ பட்டம் பெறுவதற்காகக் காசி தேவஸ்தானம் அலுவலகத்திற்குச் செல்வதற்குத் தயாராக இருந்தோம்.

காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களால் யாத்திரிகர்களது பெயரும் வயதும் முகவரியும் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டது.

குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அவருக்கு ஏற்கனவே வழங்கப்பெற்றுள்ள காசிஸ்ரீ பட்டங்களைக் காசி தேவஸ்தான அலுவலரிடம் காண்பிப்பதற்கான  எடுத்து வைத்துக் கொண்டார்.






மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவேசுவர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக...

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

14.09.2014 திருவேணி சங்கமம் - புனிதத் தீர்த்தமாடுதல்

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
14.09.2014 திருவேணி சங்கமம் புனிதத் தீர்த்தமாடுதல் .....

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி நேற்று முன்தினம் 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.

இன்று 112 ஆம் நாள் - ஆவணி 29 (14.09.2014)  ஞாயிற்றுக் கிழமை.

அதிகாலை 5.00 மணிக்குக் குருசாமி பச்சைக்காவடி அவர்களது  தலைமையில் யாத்திரிகர் அனைவரும் வாடகை வாகனங்களில் அலகாபாத் பயணம் ஆனோம்.  

4.45 am


7.35 am

அலகாபாத் செல்லும் வழியில் காலை 7.30 மணிக்கு அனைவரும் தேநீர் சாப்பிட்டுக் கொண்டோம்.


9.07 am

9.20 am

காலை 9.30 மணிக்கு பிரயாகை நகரத்தார் சத்திரம் சென்று சேர்ந்தோம்.

9.24 am

9.43 am
சத்திர நிர்வாகிகள் குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் யாத்திரிகர்களையும் வரவேற்று உபசரித்தனர்.  குருசாமி அவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார்.


9.44 am
அனைவருக்கும் சத்திரத்தில் காலை உணவு.

10.45 am




10.45 am

11.06 am

திரிவேணி சங்கமம் - மூன்று படகுகளில் ஏறி மூன்றுநதிகளும் சேரும் இடத்திற்குச் சென்று  தீர்த்தம் ஆடினோம்.   கங்கையில் புதுப்புனல் வந்து கொண்டு இருந்தது.   யமுனையில் பச்சை நிறத்தில் தண்ணீர் ஓடியது. சரசுவதி பூமிக்குள்ளே இருந்து வெளிவந்து கங்கை யமுனையுடன் இங்கே ஒன்று சேர்கிறது.  அந்த இடத்தில் படகுகளை நிறுத்தி, படகுகளுக்கு இடையே கயிற்றைக்கட்டி, அதில் பலகை ஒன்றை இணைத்து, அந்தப் பலகையில் நம்மை நிற்கச் செய்து, திரிவேணி சங்கமத்தில் இறக்கி விடுகின்றனர்.  பலகையில் நின்றுகொண்டு கயிறைப் பிடித்தபடி  மூழ்கித் தீர்த்தமாடினோம்.   நீரின் அடிப்பகுதியில் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது.  அந்தக் குளிர்ச்சியான தண்ணீரானது பூமிக்குள் இருந்து மேலே வரும் சரசுவதி நதியின் நீராகும் என்று கூறினர்.  எல்லோருக்கும் இது போன்று திரிவேணி சங்கமத்தில் தீர்த்தமாடினோம்.

குருசாமி அவர்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு தீர்க்கக் குடுவைகளை (plastic cane) வாங்கிக் கொடுத்திருந்தார்.   அதில் கங்கா தீர்த்தம் பிடித்து வைத்துக் கொண்டோம்.


12.54 pm


12.54 pm

12.54 pm
யாரே தெரியவில்லை, பார்ப்பதற்கு மதுரைக்காரர்கள் போன்று தெரிந்தது.  அவர்களும் தீர்த்தமாடித் திருப்பிக் கொண்டிருந்தனர்.

1.48 pm
காசிஸ்ரீ சின்னக்கருப்பன் செட்டியார் அவர்களது மூத்த மகன் திரு.சி. ஐயப்பன் அவர்கள்  அலகாபாத் நகரில் வசித்து வருகிறார்.  அவர் யாத்திரிகர்களை அவரது இல்லத்திற்கு வருமாறு அழைத்தார். அவரது அழைப்பைக் குருஜி அவர்கள் ஏற்றுக் கொண்டு, யாத்திரிகர்களை  அவரது இல்லத்திற்கு சென்றார்.

ஆச்சி திருமதி சின்னக்கருப்பன் அவர்களும், காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களது மகன் திரு ஐயப்பன் அவர்களும், திருமதி சாந்தி ஐயப்பன் அவர்களும் தம்பதி சமேதராக அவர்களது இல்லத்தின் வாயிலில் நின்று வரவேற்றனர். 

 திரு ஐயப்பன் அவர்களும், திருமதி சாந்தி ஐயப்பன் அவர்களும் தம்பதி சமேதராகக் குருசாமி அவர்களுக்குப் பாதபூஜை செய்து வழிபட்டு வரவேற்றனர்.  


குருசாமி அந்தத் தம்பதியரையும் அவரது குடும்பத்தினரையும் ஆசிர்வதித்தார்.     




2.11 am

மதிய உணவு சிறப்பாக சுவையாக இருந்தது. குடும்பத்தினர் அனைவரும் அன்புடன் உணவு பரிமாறினர்.

அலகாபாத்தில் திரு.சி. ஐயப்பன் அவர்களது இல்லத்தில் இருந்து மாலை 3.20 க்கு புறப்பட்டோம். 

5.19 am

5.20 am

வழியில் மாலை 5.20க்கு தேநீர் சாப்பிட்டோம்.  அந்த தேநீர்க் கடையருகே சாலையோரம் மரத்தடியில் பிள்ளையாரையும் சாலக்கிராமக் கற்களைப் போன்ற சில கற்களையும் வைத்து வழிபாடு செய்திருந்தனர்.

இரவு 8.00 மணிக்கு காசி மாநகர் வந்து சேர்ந்தோம்.
காசியில் நல்ல மழை பெய்து தெருவில் தண்ணீர் நிறைந்து ஓடிக் கொண்டிருந்தது.

சத்திரத்தில் இரவு உணவு.

இரவு 10.40 மணிக்கு அருள்மிகு விசுவேசுவர் அர்த்தசாம வழிபாடு நிவேத்திய பிரசாதம் கொண்டு வந்து குருசாமி அவர்களிடம் வழங்கினார்கள்.  குருசாமி அவர்களும், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் " என்று அந்தப் பிரசாதத்தை யாத்திரிகர்களுக்கும் பகிர்ந்து அளித்தார்.  எல்லாம் அருள்மிகு காசி விசுவேசுவர் திருவருள் மேன்மை.

மெய்யப்பர் அனைவருக்கும் அருள்மிகு காசி விசுவேசுவர், விசாலாட்சி, அன்னபூரணி, காலபைரவர் மற்றும் காசி உறை தெய்வங்களின் திருவருளும், குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும் சித்திப்பதாக...

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்