குருசாமி பச்சைக்காவடி அவர்களது தலைமையில்
அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம்.
பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி ஆகிய
நான்கு தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு
சுவாமிமலை சென்று கொண்டிருந்தோம்.
துன்முகி வைகாசி – 3 (16.05.2016) திங்கள் கிழமை
இன்று தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு தேர்தல் வாக்குப்பதிவு நாள்.
யாத்திரிகர்கள் காலை 02.30 மணிக்கு குத்தாலத்தில் இருந்து புறப்பட்டு 26 கி.மீ. நடந்து வைத்தீசுவரன் கோயில் சென்று அங்குள்ள PL.A. மண்டபத்தை 8.30 அடைந்து அங்கு தங்கினோம்.
இந்த மண்டபத்தை குருசாமி பச்சைக்காவடி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.
வழியில் காலை 6.30 மணியளவில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.
யாத்திரிகர் அனைவரும் மண்டபத்தை வந்தடைந்த சிறிது நேரத்தில் மிகவும் பலத்த மழை பெய்தது. இன்று முழுநாளும் விடாது மழை பெய்தது. சாலைகள் எல்லாம் மழைநீர் ஆறுபோல் ஓடியது.
யாத்திர்கள் அனைவரும் மாலை 5.00 மணிக்கு வைத்தீசுவரன் கோயில் சென்று அருள்மிகு தையல்நாயகி உடனாய வைத்தியநாதர் மற்றும் முத்துக்குமாரசாமி, அங்காரகன், தன்வந்திரி, பிள்ளையார் வழிபாடு செய்தோம்.
இங்குள்ள தீர்த்தம் மிகவும் பிரசித்தம். தவளை ஏதும் இதில் இருக்காது. இந்தத் தீர்த்தத்தில் உள்ள மண்ணை எடுத்துச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி உடற்பிணிக்கு மருந்தாகக் கொடுக்கின்றனர்.
குருசாமி பச்சைக்காவடி அவர்களது தொடர்பு எண் - 97 8787 2121.
குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,
அன்பன் காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக