இடிக்கப்படும் கோயில்கள்
எப்போதும் அழியாமல் இருக்க வேண்டும் என்று கல்லால் கட்டப்பெற்ற கோயில் இது.
அந்த ஊர் வழியாகச் செல்வோர் அப்படியே கோயிலுக்குச் சென்று வழிபட்டுச் செல்ல வசதியாகக் கோயில் இடத்தில் சாலை அமைத்துக் கொடுத்துள்ளனர் அரசர்கள். அது அந்தக்காலம்.
இந்தக்காலத்தில் காசுபணம் கொடுப்பவர் அதிவேகமாக நிற்காமல் செல்லவேண்டும். அதற்காகக் குறைந்தசெலவில் அதிக இலாபத்தில் வசதியாகச் சாலையை அகலப்படுத்தக் கோயில்களையும் இடித்து அப்புறப்படுத்தி உள்ளனர்.
கோயில்களை இடிப்பது யாரோ பாக்கிசுத்தான் தீவிரவாதி என்று நினைத்து விடாதீர்கள். சுதந்திர இந்தியாவில் மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில்தான் இப்படியெல்லாம் இடிக்கப்படுகின்றன.
பக்திக்காகச் சாலை அமைத்த அரசாட்சிகள் போயி, பணத்திற்காகக் கோயிலை இடிக்கும் மக்களாட்சி முறைமையின் அவலங்களை எண்ணி வருந்த வேண்டியுள்ளது.
படத்தில்
1) மதுரை, கோவில்பட்டி அருகே இராமானுஞ்சபுரத்தில் சாலையின் ஓரத்தில் இருந்த கற்கோயில் ஒன்றை சாலையின் விரிவாக்கத்திற்காக இடித்துத் தள்ளப்பட்டுள்ள கோயில்.
1) மதுரை, கோவில்பட்டி அருகே இராமானுஞ்சபுரத்தில் சாலையின் ஓரத்தில் இருந்த கற்கோயில் ஒன்றை சாலையின் விரிவாக்கத்திற்காக இடித்துத் தள்ளப்பட்டுள்ள கோயில்.
2) சிவகங்கை மாவட்டம் மணலூரில் இடிக்கப்பட்டு விட்ட மசூதியும். இப்போது இந்த மசூதி மணலூரில் இல்லை. இந்த மசூதியை அகற்றி விட்டுச் சாலையை அகலப்படுத்தி உள்ளனர்.
3) வேடசந்தூரில் இருந்த திருச்சி செல்லும் வழியில், வையம்பட்டி அருகே சாலையோரம் கோயில் ஒன்று இடிக்கப்பட்டு கிடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக