கோயில்களின் அருகில்
சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்கள்
நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை
(அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:469)
இதனால் நான் இங்கே சொல்ல வருவது யாதெனில் : மெய்யடியார்களே, நல்லோர்களே உங்களது பார்வையில் சீந்துவாரற்றுக் கிடக்கும் யாதேனும் மொரு சமணச் சிற்பங்கள் தென்பட்டால் மாவட்ட ஆட்சியாளருத் தெரிவித்துத் தேவையான பாதுகாப்பு செய்திடுமாறு சொல்லுங்கள். அல்லது அதை அப்படியே அங்கேயே விட்டுவிடுங்கள். அதைப் பார்க்கும் வேறு யாரேனு மொருவர் அதை அரசிடம் தெரிவிப்பார்.

மாறாக, நல்லது செய்வதாக எண்ணிக் கொண்டு சமண சிற்பங்களை அருகில் உள்ள கோயில்களில் கொண்டு வந்து வைக்காதீர்கள். இவ்வாறு கோயில் அருகில் வைக்கப் பட்டதால், தங்களது சமணச் சிற்பம் பாதுகாப்பாக உள்ளது என்று எந்த ஒரு சமணரும் (அல்லது ஆய்வாளரும்) கூறவில்லை !
மாறாக, அருகில் உள்ள ஆலயம் சமண ஆலயம் என்றும், இந்துக்கள் சமண சிற்பத்தை வாயிலில் வைத்துவிட்டு, அதை யொரு இந்து ஆலயமாக மாற்றிவிட்டனர் என்று ஆதாரங்கள் இல்லாமல் பழிச்சொற்களால் இழிவு படுத்துகின்றனர். சுயம்புலிங்கங்களை இடம்மாற்றி வைக்க முடியாது என அறிந்து ஆய்வாளர் சிலரும் தங்களது மேதாவித் தனத்தை நிறுவ முடியாமல் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர்.
இதெல்லாம் இந்துக்களுக்குத் தேவையா யென்ன ?
இதெல்லாம் இந்துக்களுக்குத் தேவையா யென்ன ?
திண்டிவனத்திலிருந்து மேல்மருவத்தூர் செல்லும் வழியில் ஓங்கூர் என்ற ஊரில் சாலையோரம் அருள்மிகு சுந்தரபுரீசுவரர் ஆலயம் உள்ளது. கோயிலுக்கு வெளியே ஒரு தீர்த்தங்கரர் சிற்பத்தைக் கொண்டு வந்து வைத்துள்ளனர். இதைப் பார்த்ததும் என் மனதில் தோன்றிய கருத்தினைப் பதிவு செய்துள்ளேன்.
வள்ளுவர் வழி நின்று இந்துக்களின் வழிபாட்டிற்கு இயைபு உடைய தெய்வச் சிற்பங்களை மட்டுமே இந்து ஆலயங்களின் அருகில் வைத்து வழிபட முற்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். என் கருத்து சரியா ?
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக