வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

21.08.2015 காசி பாதயாத்திரை

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 12ஆவது வருட இராமேசுவரம் காசி பாதயாத்திரை.

இன்று 21.08.2015 

யாத்திரிகர்கள் சமோகரா என்ற ஊரில் உள்ள அருள்மிகு கிருஷ்ணர் கோயிலில் தங்கி இருந்தோம். 

அங்கிருந்த நதியில் யாத்திரிகர் அனைவரும் நீராடி மகிழ்ந்தனர். 

கிராமத்தினர் பலரும் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.

கிருஷ்ணர் கோயிலுக்கு அருகே, வயலில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனர்.  அங்கே ஒரு கிணறும் அதன் அருகே ஒரு மரத்தடியில் பீடத்தில் வழிபாடும் செய்து வருகின்றனர்.

அந்தப் பீடத்தில், பார்வதி பரமேசுவரர் ஒன்றாக இருக்கும் சிற்பமும், அருகே நந்தி சிற்பமும் ஒன்றும் சிதைந்த நிலையில் உள்ளன.   இந்த இடத்தில் முன்பு ஒரு பழமையான சிவாலயம் இருந்திருக்க வேண்டும்.






ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

தென்காசி பாண்டியர் யார்?

 Balarajeswari Nachiar மற்றும் 

5 பேருடன்

 Muniraj Vanathirayar இருக்கிறார்.

14 ஆகஸ்ட், 2019  · 

தென்காசி பாண்டியர் யார்?.2

•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

அன்பு நண்பர்களே மற்றும் உறவினர்களே தென்காசி பாண்டியரில் ஒரு கிளையார் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் தாலுகாவிற்கு உட்பட்ட கரிவலம்வந்தநல்லூரில் ஆட்சி செய்து வந்தனர். அவர்களைப் பற்றி அறிய அதே ஊரிலுள்ள பால்வண்ணநாத ஸ்வாமி கோயிலின் சாசனங்கள் உதவுகின்றன. அவற்றை ஆண்டு வாரியாக தற்போது காண்போம்.  

•சாசனங்களில் கரிவலம்வந்தநல்லூரும் பிற ஊர்களும்•

அருள்மிகு ஸ்ரீ.பால்வண்ணநாதர் கோயில் கல்வெட்டுகளில் கரிவலம்வந்தநல்லூரானது,

"ஆரிநாட்டு நிக்ஷேபநதி தெக்ஷணதீரத்து தாவர நல்லூர" -என்றும்,

"ஆரிநாட்டுக் கரிவரநல்லூர்" -என்றும்,

"கருவரைநல்லூர்" -என்றும்,

"ஆரினாடு கரிவரநல்லூர்"-என்றும், பயின்று வந்துள்ளது.  ஆக கரிவரநல்லூர் எனும் பெயரே இன்று மாறி கரிவலம் வந்த நல்லூர் என்று விளங்குவதை அறியமுடிகிறது. 

மேலும் வாசுதேவநல்லூர் எனும் புகழ்பெற்ற பூலித்தேவர் கோட்டை அமைந்திருந்த ஊரானது "ஸ்ரீவாஸூதேவநல்லூர்" என்றும், மணலூரானது, அன்றும் மணலூர் என்றும், பெரும்பத்தூரானது "பெரும்புத்தூர்" என்றும் வழங்கி வந்திருப்பதை அறியமுடிகிறது. 

இந்த சாசனத்தில் தற்போது பெருங்கோட்டூர் என வழங்கப்பெறும் ஊரானது, "கொட்டூர்நாடு" என குறிப்பிடப்பட்டுள்ளது. இது, ..

"கொட்டுர்னாட்டு இராச உத்தம நல்லூர்" என்று வழங்கப்படுகிறது. 

இதில் "ஆரியநாடு மல்லயம்பட்டு சயங்கொண்டையான் திருவீதி"- எனும் வாசகமானது இன்றைய ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள  மல்லி எனும் ஊரைக் குறிப்பிடுகிறது. சயங்கொண்டையான் என்பது இங்கு மறவரின் கிளைப்பெயராக அறியப்படுவதாகும் இது ஒரு வீதியின் பெயராக சாசனத்தில்  விளங்குகிறது .

•தேவன்-தேவனார்-தேவநந்தனார்•

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இக் கோயில் கல்வெட்டுகள் இதுவரை பதிப்பிக்கப்பட்டுள்ளபடி,கோச்சடில வர்மனான திரிபுவனச் சக்கரவர்த்தி  குலசேகரத்தேவர் காலமான கி.பி.1402லிருந்து துவங்கி, கி.பி.1652ல் கரிவலம்வந்தநல்லூரின் இறுதி பாண்டியராகக் கருதப்படும் "சீவல மாறவர் குணராமனான பாண்டிய குலசேகர தீட்ஷகர்" காலம் வரையிலும் காணப்படுகின்றன. இவற்றில் பாண்டியர்கள் தங்களது பட்டமான "தேவர்" எனும் பெயரில் தொடர்ச்சியாக 15ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கி 17ம் நூற்றாண்டின் இறுதிவரை இக் கோயிற் சாசனங்களின் வழி அறியப்படுகின்றனர். 

கி.பி. 1402 ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில், 

"கோச்சடில வன்மரான ஸ்ரீ குலசேகர தேவர்" -என்றும், 

கி.பி.1471ம் ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில்,

"நம் 

குமாரன் [அழகன் பெருமாள்] -

ஸ்ரீ வல்லபதேவன்"- என்றும்,

{தென்காசி பராக்கிரம பாண்டியன் மகனாக இருக்கலாம்} காணப்படுகிறது. 

மேலும்,..

கி பி.1544 ம் ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில்,

ஸ்வஸ்திஸ்ரீ 

கோஜடில வன்மரான திரிபுவன-

சக்கரவர்த்தி கோநேரிமை

 கொண்டான் இறந்தகாலம் எடுத்த- பெருமாள் ஸ்ரீ

வல்லபதேவர்க்கு" எனத்தொடங்கி,

"அபிராம பராக்ரம பா[ண்டிய]தேவநந்தநாராந திருநெல்வேலிப் பெருமாளாய நாம்" -எனத் தொடர்ந்து , தேவர் எனவும், தேவநந்தனார் எனவும் பாண்டியன் பட்டம் பயின்று வந்துள்ளது.  இதே கல்வெட்டில்,

"பொன்னன் விகிரமபாண்டிய கொன்"-

"சடையக் கொன்"- அழகன் பெரியான் நல்லான் கொன்" என இடையர்கள் கோன் எனும் சொல்லால் குறிக்கவும் பெறுகின்றனர்.  

பால்வண்ணநாத ஸ்வாமி கோயிலின் முதல் பிரகாரத்தின் வடக்குச்சுவரிலுள்ள,

கி.பி.1547 ம் ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில் நாம் சமீபத்தில் வெளியிட்ட சின்னனேந்திர பாண்டியன் செப்பேட்டில் காணப்பெறும் சில வரிகள் அச்சு அசலாக அப்படியே இந்த கோயிலின் சில கல்வெட்டுகளில் படிக்கப்பெறுகின்றன, பெருமாள் பராக்கிரம பாண்டியனின் சாசனமாகக் கருதப்படும் இக்கல்வெட்டு , கீழ்கண்டவாறு பாண்டியன் விருதாவளிகளைப் பயின்று வருகிறது,

"ஸ்ரீ புவனேகவீர சந்த்ரகுலப் பிரதீப ஜெயந்த மங்கலப் புரவராதீஸ்வர க்ஷோமஸூர நாரஸிம்ஹ கேரள தாமோதிவாகர போஜ சுந்ர வட்டவாநல்ல ஸாஹிதம் ஸார்வ பௌம தேவ" -என அவை வருகின்றன. 

இதே ஆண்டிற்குரியதாக அறியப்படும் மற்றொரு  கல்வெட்டில்,

"நம் குமாரன் பெருமாள் பராக்கிரம பாண்டிய தேவருக்கு" -என்றும்,

"வடமுட்ட நாட்டு அள்ளி குன்ற மா[ர்]த்தானூருடையான் பெருந்தெருவில் 

ஆண்டு கொண்ட நயினான் கடையோக காத்தானுக்கு திருவிலாஞ்சினையும் [கருவெலமும்] காணியாட்சியாகக்  கொ[ண்]டுக் கற்பித்து நம் குமாரன் 

ஸ்வஸ்திஸ்ரீ புவனேகவீர சந்த்ரகுல ப்ரதிவி மதுராமஹேந்த்ர ஜெயந்த மங்கள புரவராதீஸ்வர க்ஷோமஸூர நாராஸிம்ஹ கேரளமோதிவாகர ஸாஹிதம் ஸார்வ பௌம தெய்வப் பிராஹ்மண ஸாபநாசாரிய -

அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியதேவ னந்தன் கோஜட்டில்ல வன்மநரான திரிபுவனச் சக்கரவர்த்தி கோ[னேரின்மை கொ]ண்டான்" -என  பாண்டியன் விருதாவளிகளைக்கூறி அவனைத் "தேவநந்தன்" என்கிறது. 

மேலும்,

"ஆண்டு கொண்ட நயினான் கடையோக காத்தான்"  என்று வரும் ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்கள் பற்றியும் இதில் அறிய முடிகிறது.  இவர்களின் நாட்டுப்பகுதி "வடமுட்ட நாட்டு அள்ளி குன்றம்" என வழங்கப்பட்டுள்ளதையும் நம்மால் அறியமுடிகிறது.  

கி.பி.1550 ம் ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில், 

"ஸ்ரீபெருமாள் குலசேகரத்தேவர்"- என்றும்,

கி.பி.1553வது ஆண்டிற்குரியதாக அறியப்படும் கல்வெட்டில்,

"ஸ்ரீபெருமாள் தன்மப் பெருமாள் குலசேகர தேவர்"- என்றும், பாண்டியன் வழங்கப்பெறுகிறான்.  மேலும் இந்த சாசனத்தில், ..

"குலசேகர மழவராயன்" மற்றும்,

"வாணன் அடைக்கலங்காத்தான்" என இருவர் வருகின்றனர்.  இவர்களும் மறவர் குலத்தவரே என்பதும் உறுதியாகும்.  ஏனெனில் இதே பகுதியில் இன்றும் அம்பாசமுத்திரம் பகுதியில் மழவராயர் என்றும், சங்கரன்கோயில் பகுதியில் வாணாதிராயத்தேவர் என்றும் மறவர்கள் பட்டங்கள் கொண்டு விளங்கிவருகின்றனர். 

கி.பி.1558 மற்றும் 1588,-1595 ம்ஆண்டிற்குரியதான அபிராம வரதுங்கராம வீரபாண்டியத்தேவர் காலத்திலானதென அறியப்படும் கல்வெட்டுகளில், 

நாம் மேற்சொன்ன பாண்டியர் விருத்தாவளிகளுடன்..

 "அபிராம வரதுங்க வீரபாண்டிய 'தேவநாராந' ஸ்ரீபெருமாள் தன்மப் பெருமாள் குலசேகர தேவர்" - என்று பயின்று வருவதைக் காணமுடிகிறது.  மேலும், மறவரில் கண்டித்தேவர் வகையறாக்களைப் பற்றி தென்காசி வட்டாரத்தில் அறிந்து கொண்டுள்ளோம். இந்த சாசனத்தில் குறிக்கப்பெறும் இரவிமாக்குட்டி கண்டி தேவன் அவர்களைச் சேர்ந்தவனாக இருக்கலாம். 

கி.பி.1652ம் ஆண்டிற்குரியதான 17ம் நூற்றாண்டின் காலமாக அறியப்படும் கல்வெட்டில் ,.. 

"சிவல மாறவர் குணராமனான பாண்டிய குலசேகர தீட்ஷகர்" என இதுவரையில் அறியப்பட்ட இறுதிப் பாண்டியன் குறிப்பிடப்படுகிறான்.  இக்கல்வெட்டில் உள்ள மற்றொரு செய்தி, இதில் "வரராம விக்கிறமபாண்டியமூர்த்தி சேர்வைக்காறன்" என்பான் குறிப்பிடப்படுகிறான். இந்த வட்டாரத்தில் சேர்வைக்காரர் என வழங்கியோர் மறவர்களாகவே உள்ளனர். 

பாண்டியன் தனது பட்டமாக இந்த சாசனங்களில்  தொடர்ச்சியாக தேவர்- தேவனார்- தேவனந்தனார் - என,15ம் நூற்றாண்டின்  ஆரம்பத்திலிருந்து 17ம் நூற்றாண்டின் இறுதிவரை  வழங்கி வந்தமையைக் காணும்பொழுது அவனை தேவர் சமூகமாகிய மறவரினத்தவன் என்பதையே இங்கு நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. மேலும் திரு.நடன.காசிநாதன் அவர்களால் பதிப்பிக்கப்பெற்ற அரியலூர் பள்ளி வில்லி படையாண்டவர் கதை ஓலை ஆவணத்திலும் பாண்டியனை "கொண்டம கோட்டற் குலம் " என மறவரின் கொண்டையன் கோட்டை  பிரிவைச் சேர்ந்தவனாகத் தெரிவிக்கிறது.  

{ https://m.facebook.com/story.php?story_fbid=2374155959467026&id=100006179355297}

தென்காசி மேலகரத்தில் கண்டறியப்பட்டு திரு. சந்திரவாணன் அவர்களால் படிக்கப்பெற்ற சின்னனேந்திர பாண்டியன் செப்பேடு நகலும்

{ https://m.facebook.com/story.php?story_fbid=2295330060682950&id=100006179355297 }

 பாண்டியனை வடகரைப் பாளையக்காரர் உறவினனாகவும்  மறவர்குலத்தவனாகவும் கூறிச் செல்கிறது. 

திருக்குற்றாலநாதர் சன்னதியில் வடகரைப் பாளையக்காரர் பாண்டியருக்கேயுரிய முத்துப்பூணூல் பூண்ட கோலத்தில் சிலையாக இருக்கின்ற காட்சியைக் காணுங்கால் அவர்கள் பாண்டியக் கூட்டத்தவரே என்பதை எளிதாக எவரும் உணரலாம். 

நன்றி!

அன்பன். கி.ச.முனிராஜ் வாணாதிராயன்





















சனி, 14 ஆகஸ்ட், 2021

காஞ்சி மகாப் பெரியவரின் காசி பாதயாத்திரை, இராமேசுவரத்தில் கங்கா அபிஷேகம்,

தண்டவாளத்தில் நடந்த தண்டபாணி

முகநூலில் நண்பர் Anbudan Balaji  · 14.08.2021 காலை மணி 10.00

அவர்களின் பதிவு இது.

தண்டவாளத்தில் நடந்த தண்டபாணி

நன்றி மறவாமை மஹாபெரியவாளின் சிறப்பு

காசி யாத்திரை செல்ல வேண்டிய சம்பிரதாயங்களைச் செய்து முடித்துவிட்டு,1918 மார்ச் மாதம் ,முறையான யாத்திரையைத் தொடங்கினார்கள் பெரியவா.

இருப்பத்தோரு ஆண்டுகள் புனிதப் பயணத்தைத் தொடர்ந்து நடத்திவிட்டு 1939 ஆம் ஆண்டு தமிழ்நாடு திரும்பினார்கள் ஸ்வாமிகள்.

காசியிலிருந்து கொண்டுவந்த கங்கா தீர்த்தத்தால் ராமேஸ்வரம் ராம நாதஸ்வாமியை அபிஷேகம் செய்து வைத்தால்தான் அந்த யாத்திரை நிறைவேறும்.

மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் அடைய பாம்பன் கால்வாயை கடக்க வேண்டும். அப்போது பாம்பன் மேல் செல்ல பேருந்து பாலம்கிடையாது. ரயில்வே பாலம் வழியாக நடந்து செல்ல உரிய உயர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும். குப்புஸ்வாமி என்பவரை தென்னிந்திய ரயில்வே தலைமை ஸ்தானமாக விளங்கிய திருச்சிக்கு அனுப்பினார்கள்.

இம்பீரியல் வங்கி அதிகாரி நாராயணஸ்வாமியும் ரயில்வே ஏஜண்டைச் சந்தித்து மடத்தின் சார்பில் ஓர் விண்ணப்பம் கொடுத்தார். இவர் பெரியவாளிடம் அபார பக்தி பூண்டவர். பூஜைப் பெட்டிகளை எடுத்துச் செல்ல தனி ட்ராலி தேவை, பாம்பன் ரயில் பாலத்தின் மீது நடந்து செல்ல அனுமதி

தேவை.....இவைதான் மனுவில் இடம் பெற்றிருந்தன.

இரண்டு தினம் சென்று ரயில்வே அதிகாரியிடமிருந்து பதில் வந்தது.

ஒரு நாற்காலி சுத்தம் செய்யப்பட்டு நான்கு சீடர்களுடன் பூஜைப் பெட்டி பயணம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாகவும், ஸ்வாமிகளும் பத்து சீடர்களும் ரயில்வே பாலத்தின் வழியாக நடந்து செல்ல வசதியாக பலகைகள் பொருத்தித் தரப்படும்என்றும் அதில் கண்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் காலை ஒன்பது மணிக்கு மண்டபம் ரயில் நிலையம் வந்து , பத்தரை மணிக்குள் கடந்து சென்றுவிட வேண்டுமென அதில் கண்டிருந்தது.

திட்டமிட்டபடி அக்கரை சேர்ந்த ஸ்வாமிகளுக்கும் சீடர்களுக்கும் ஓர் அதிசயம்!

தலைமை போக்குவரத்து அதிகாரியான ஆங்கிலேயர் பழத் தட்டுடன் ஸ்வாமிகளை வரவேற்று சமர்ப்பித்தார்.

''எல்லாம் சௌகர்யமாகவும் சரியாகவும் நடந்ததா'' என ஆங்கிலத்தில் வினவினார்! அவருக்கு நன்றி சொல்லும்படி குப்புஸ்வாமி ஐயரைப் பணித்தார்கள்.

இப்படி சங்கல்பித்தப் புனிதப் பயணம் வெற்றிகரமாக நிறைவேறியதும், ஸ்வாமிகள் குப்புஸ்வாமி அவர்களிடம் இரண்டு பட்டுத்துணிகளும், பழ வகைகளும் கொடுத்து, ''இந்தப் ப்ரசாதங்களை மண்டபம் ஸ்டேஷன் மாஸ்டருக்கும் திருச்சி அதிகாரிக்கும் கொடுத்துவிட்டுவா'' என்றார்கள்.

நன்றி மறவாமை என்பது பெரியவாளின் ஓர் அங்கம்!

பெரியவாளைப் பற்றி பேசுவதற்கு கூட அவரோட அனுக்ரஹம் இருக்க வேண்டும்.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

காலடி சங்கர காஞ்சி சங்கர 

காமாஷி சங்கர காமகோடி சங்கர

சதாசிவ சங்கர சந்திரசேகர சங்கர

மதுரகாளிதாசன்

சனி, 7 ஆகஸ்ட், 2021

காசியில் சாட்சி கணபதி

சாட்சி கணபதி



Elangovan Ks  அவர்களின் முகநூல் பதிவு இது. 7 ஆகஸ்ட், 2020  · 

காசியில் பிரதானமாக  56 விநாயகர் கோயில் உள்ளது. காசிக்கு செல்பவர்கள் இந்த விநாயகரை அவசியம் தரிசிப்பார்கள். ஏனெனில் இந்த சாக்ஷி கணபதி கோயில் விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. நாளை சித்ரகுப்தன்   புண்ணிய கணக்கு போடுகையில்  நம்மை ஆம் இவர் சுவாமியை தரிசனம் செய்ய காசிக்கு வந்தார் என்று சாக்ஷி சொல்வாரம் ஆதலால் இவருக்கு சாக்ஷி கணபதி  என்று சொல் வழக்கு... நன்றி சந்திரசேகர் ஸ்வாமி,காசி ...