வியாழன், 29 ஆகஸ்ட், 2019

ஸ்ரீராமர் நடந்து சென்ற பாதை

ஸ்ரீராமர் நடந்து சென்ற பாதை. அலகாபாத் ஆசிரமத்தில் உள்ளபடி...






காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
Kalairajan Krishnan
28 ஆகஸ்ட், 2015 · 

புதன், 28 ஆகஸ்ட், 2019

காசிராசாவின் சின்னம் மீன்சின்னம்




காசிராசா அரண்மனை கோட்டை உச்சியில் பாண்டியரின் மீன்கொடிதான் பறக்கிறது!

பல்லக்கு சிங்காசனம் அந்தப்புறம் எல்லாம் பாண்டியரின் மீன் சின்னமே பொறிக்கப் பட்டுள்ளது!  ஆனால் அந்த அருங்காட்சியகத்தில் படம் எடுக்க அனுமதிக்கவில்லை.  அதனால் பல்லக்கு சிங்காசனம் இவற்றில் பொறிக்கப் பெற்றிருந்த மீன்சின்னங்களைப் படம் எடுக்க இயலாமல் போனது.

28.08.2015, காலை 11.00மணிக்கு,
காசியிலிருந்து கி.காளைராசன்
Kalairajan Krishnan
28 ஆகஸ்ட், 2015

புதன், 7 ஆகஸ்ட், 2019

திருத்தணிக்கு சக்கரைக் காவடி பாதயாத்திரை

தேவகோட்டை நகரத்தார்கள் திருப்பணி செய்த கோயில்கள் அதிகம். முருகனுக்குக் காவடி எடுத்துச் செல்லும் தொன்மையான மரபை இன்றளவும் பெரிதும் மதித்துக் காத்து வருகின்றனர்.
தேவகோட்டையிலிருந்து சென்னை வழியாகத் திருத்தணிக்கு சக்கரைக் காவடி பாதயாத்திரையை துன்மதி ஆண்டு மாசி மாதம் 32ஆவது நாள் (16.03.1982) தொடக்கி சென்னை வழியாக 330 மைல் (528 கி.மீ,) நடந்து 07.04.1982 அன்று வேல் சாத்தி வழிபாடு செய்துள்ளனர்.
இந்தக் காவடி யாத்திரை வரும் ஆண்டுகளில் தொடர வேண்டும். நமது மரபு வழிபாடுகள் காக்கப்பட வேண்டும்.
படத்தில் உள்ள அடியார்கள் யார்யாரென அடையாளம் காண முடிகிறதா?


சனி, 20 ஜூலை, 2019

பொந்த புளி

பொந்த புளி



2014 இராமேசுவரம் காசி புனித பாதயாத்திரை
யாத்திரையின் முதல்நாள்.

இராமேச்சுரம் பேருந்து நிலையத்திற்கு சற்று தொலைவில் சாலையோரம் உள்ள சுமார் 6அடி விட்டமுடைய  "பொந்த புளி" மரம் இருப்பதைப் கண்டேன்.

இந்த மரம் பார்ப்பதற்கு மிகவும் பெரியதாக இருந்தது.  அதன் அடிப்பகுதி இளவம்பஞ்சு மரம்போன்று இருந்து.  புளியமரம் போன்று மரப்பட்டைகள் இல்லை.  மேலும் இலையும் புளியஇலை போன்று இல்லை. பெயரில்தான் ‘புளி‘ உள்ளது. 
மரத்தின் விதைகள் எதையும் என்னால் காண இயலவில்லை.  மரத்தைப்பார்த்தால் புளியமரம் போன்று இல்லை.  மிகவும் பருத்து, வினோதமான ஒரு மரமாக இருந்தது.   ஆனாலும் மரத்தில் எழுதப்பட்டுள்ள “பொந்த புளி மரம்“ என்ற பெயரைக் கொண்டே இது ஒருவகைப் புளிய மரமாக இருக்க வேண்டும் என்று கருதவேண்டியுள்ளது. 

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்


வியாழன், 13 ஜூன், 2019

பிரப்பன்வலசையில் பழமையான பிள்ளையார்

பிரப்பன்வலசையில் பழமையான பிள்ளையார்

Kalairajan Krishnan
13 ஜூன், 2014, பிற்பகல் 8:52 ·

இராமநாதபுரம் இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் மிகமிகப் பழமையான பிள்ளையார் சிலை உள்ளது.  இது ஒருவகையான படிமப்பாறையால் (sedimentary rock) ஆனது.



பழைமையான இந்தப் பிள்ளையார் சிதிலமடைந்துள்ளதால், இதனைத் தூக்கி அரசமரத்தடியில் வைத்துவிட்டுப் புதிதாகக் கோயில் ஒன்று கட்டிப் புதியதொரு பிள்ளையாரை வைத்து வழிபடும் முயற்சியில் உள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு இந்தப் பிள்ளையார் மிகவும் பழைமையான படிகப்பாறையால் செய்யப்பட்டது என்ற தெரியவில்லை.  இந்தப் பிள்ளையார் கோயிலுக்கு அருகே படிமப்பாறை  (sedimentary rock) யால் செய்யப்பெற்ற தூண் ஒன்றும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. 


புதிய கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பழமையான பிள்ளையார் சிலை தொல்லியல் துறையினராலும், இந்து அறநிலையத் துறையினராலும் அவசியம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று .







2014ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரையின் போது நான் பார்த்து வழிபட்ட கோயில்களில் இது முதலாவது கோயிலாகும்.

பிரப்பன்வலசை உள்ளுர் அன்பர்களும், மாவட்ட நிருவாகமும், இந்து அறநிலையத் துறையினரும், தொல்லியல்துறையினரும், புவியியல்துறையினரும் இந்தப் படிமப் பாறையினால் செய்யப்பெற்றுள்ள இந்தப் பழைமையான பிள்ளையாரையும் கோயில்தூணையும் மீட்டெடுத்துப் பாதுகாத்திட வேண்டுமென வேண்டுகிறேன்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

01.08.2017 அறுபடைவீடு பாதயாத்திரை, தெள்ளாறு





தெள்ளாறு கோயிலில் கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. மிகவும் பழமையான பிள்ளையாரும், பெருமாள் சிற்பங்களும் உள்ளன.
அறுபடைவீடு பாதயாத்திரை.
காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் 20 யாத்திரிகர்களும் 60 நாட்கள் அறுபடைவீடு பாதயாத்திரை மேற்கொண்டிருந்த போது, 01.08.2017 அன்று தெள்ளாறு திருக்கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்கி இளைப்பாறிச் சென்றனர். பாதயாத்திரை செய்த அடியார்கள் பலரும் அன்றையதினம் திருக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து கொண்டனர்.






























சனி, 26 ஜனவரி, 2019

01.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை, வலையன்குளம் பெருமாள் கோயில்

வலையன்குளம் பெருமாள் கோயில்


எல்லாச் சமூகத்தாரும் ஒன்றாய் வணங்கும் கோயில்.
திருவிழாவின் தொடர்ச்சியாக 60 நாட்களுக்கும் மேலாக தினமும் நாடகம் நடத்தி வழிபடும் கோயில்.
கோயில் வளாகத்திற்குள் யாரும் காலணி அணிந்து செல்லக் கூடாது எனக் கிராமத்தினரால் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ள கோயில்.
பெண்கள் கோயில் வாலிலேயே நின்று வழிபடும் கோயில்.

மூலவரோ சுயம்பு.
பெயரோ பெருமாள் கோயில்.
விபூதி பிரசாதம்.
வில்வம் தீர்த்தம்.
தேவியர் இல்லாத மூலவர்.
பரிவார தெய்வங்கள் ஏதும் இல்லாத கோயில்.

ஊரார் ஒன்று சேர்ந்து நடத்தும் அன்னதானம்.
உயிர்பலி இல்லாத வழிபாடு.

மதுரை விமானநிலையம் அருகில் உள்ளது வலையங்குளம் அருள்மிகு பெருமாள் கோயில்.

சாதியின் பெயரால் சண்டைகளை வளர்க்கும் பகுத்தறிவாளர்களும்,  கடவுளை நம்பும் காட்டுமிராண்டிகளும் அவசியம் வழிபடவேண்டிய கோயில்.

அறுபடைவீடு பாதயாத்திரை, பிள்ளையார்பட்டியிலிருந்து பாதயாத்திரை புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களிலும் வழிபாடு செய்து கொண்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் 01.07.2017 அன்று இங்கே உள்ள சமுதாயக்கூடத்தில் தங்கியிருந்து கோயில்வழிபாடு செய்து கொண்டோம்.

வலையங்குளம் திரு.மாரியப்பன் செட்டியார் அவர்களும், நகைக்கடை வைத்திருக்கும் நகரத்தார் அன்பர் ஒருவரும் அடியார்களை  அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 11 ஜனவரி, 2019

29.05.2017 அறுபடைவீடு பாதயாத்திரை, திருத்தணி

அறுபடைவீடு பாதயாத்திரை,
திருத்தணி







திருத்தணியில் நகரத்தார் விடுதி. அனைத்து முக்கியமான வழிபாட்டுத் தலங்களிலும் நகரத்தார் விடுதி அமைத்துள்ளனர். குருநாதர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும், அவருடன் 20 அடியார்களும் சேர்ந்து, அறுபடைவீடு 60 நாட்கள் பாதயாத்திரையாக 29 மே 2016 ஞாயிற்றுக் கிழமை யன்று திருத்தணி சென்று அடைந்தோம். திருத்தணி நகரவிடுதியின் சார்பாக நகரத்தார்கள் யாத்திரிகர்களுக்கு மேளதாளம் வைத்து, பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து வரவேற்று நகரவிடுதிக்கு அழைத்துச் சென்று உபசரித்தனர். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் நகரவிடுதியில் இருந்த அனைவரையும் ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார். 2017 ஆம் ஆண்டு இரண்டாவது வருடமும் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் தலைமையிலான அறுபடை பாதயாத்திரையின் போதும் திருத்தணியில் நகரத்தார் விடுதியின் சார்பாக யாத்திரிகர்களுக்கு மிகச் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூகுள் புவிப்படத்தில் https://goo.gl/maps/mfeXbfPhZWs

வியாழன், 10 ஜனவரி, 2019

28.05.2017 அறுபடைவீடு பாதயாத்திரை, அரக்கோணம், குமார ராஜா மஹால்

அரக்கோணம் குமார ராஜா மஹால்








காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் அவரது 20 பாதயாத்திரிகர்களும் அறுபடைவீடு பாதயாத்திரை மேற்கொண்டனர்.  பிள்ளையார்பட்டியில் இருந்து  பாதயாத்திரை புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை முதலான ஐந்து திருத்தலங்களிலும் வழிபாடு செய்து முடித்தனர்.  சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில் 28.05.2017 இன்று  இந்த மண்டபத்தில் தங்கிச் சென்றனர். 
உள்ளூர் இந்துமுன்னனியினர் பலரும் வந்து யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தனர்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்