கீரனூர் சிவன்கோயில்
சாமியின் பெயர் - உத்தமநாதர்
அம்மன் – பிரகதம்பாள்.
நந்தி மிகவும் பழமையானதாக அழகான தோற்றத்துடன் காணப்படுகிறது.
“கீரனூர் 11ஆம் நூற்றாண்டில் கட்டப் பெற்றுள்ளது என்றும். கீரனூருக்கு உத்தமநாதபுரம் என்றும் சுகபுரி என்றும் பெயர்கள் உண்டு என்றும், சுகர் என்ற முனிவர் தவம் செய்த்தாகவும் வேட்டைக்கு வந்த ஓர் அரசனது அம்பு ஒன்று இவர் மீது பட்டு இவர் தவம் கலைந்த்தாகவும் அதற்கு பிராயசித்தமாக ஒரு கோயில் கட்டும்படி அவர் ஏவி கோயில் கட்டப்பட்டதாகவும் புராண வரலாறு“ என்று கோயிலில் எழுதி வைத்துள்ளனர்.
கல்வெட்டுகளில் உத்தநாதபுரம் என்று கண்டிருக்கிறது. கோயில் உள்பிரகாரதம் மற்றும் வெளிப்பிரகாரம் எங்கும் கல்வெட்டுகள் மிகவும் நிறைந்து காணப்படுகின்றன.
மிகவும் பழமையான ராசகோபுரம்.
“கீரனூர் 11ஆம் நூற்றாண்டில் கட்டப் பெற்றுள்ளது என்றும். கீரனூருக்கு உத்தமநாதபுரம் என்றும் சுகபுரி என்றும் பெயர்கள் உண்டு என்றும், சுகர் என்ற முனிவர் தவம் செய்த்தாகவும் வேட்டைக்கு வந்த ஓர் அரசனது அம்பு ஒன்று இவர் மீது பட்டு இவர் தவம் கலைந்த்தாகவும் அதற்கு பிராயசித்தமாக ஒரு கோயில் கட்டும்படி அவர் ஏவி கோயில் கட்டப்பட்டதாகவும் புராண வரலாறு“ என்று கோயிலில் எழுதி வைத்துள்ளனர்.
கல்வெட்டுகள்
கீரனூர் கல்வெட்டு 1 (உள்பிரகாரம்) |
கீரனூர் கல்வெட்டு 2 (உள்பிரகாரம்) |
கீரனூர் கல்வெட்டு 3 (உள்பிரகாரம்) |
கீரனூர் கல்வெட்டு 4 (உள்பிரகாரம்) |
கீரனூர் கல்வெட்டு 5 (உள்பிரகாரம்) |
கீரனூர் கல்வெட்டு 6 (உள்பிரகாரம்) |
கீரனூர் கல்வெட்டு 7 (உள்பிரகாரம்) |
கீரனூர் கல்வெட்டு (வெளிப்பிரகாரம்) |
கீரனூர் கல்வெட்டு (வெளிப்பிரகாரம்) |
எத்தனையோ முறை திருச்சிராப்பள்ளி சென்று வந்துள்ளேன். அத்தனை முறையும் கீரனூர் வழியாகத்தான் பேருந்து செல்லும். சாலையின் நடுவே இருக்கும் காந்திசிலையைப் பார்த்து வணங்கிக் கொள்வேன். நானறிந்தவகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் பேருந்துநிலையம், மருத்துவமனை, பாடசாலைகள், அரசு அலுவலகங்கள், மற்றும் அனைத்துப் பொது இடங்களும் கோயில் இடங்களிலேயே அமைந்திருக்கின்றன.
பொன்னமராவதி வலையபட்டி குருசாமி காசிஸ்ரீ. பச்சைக்காவடி அவர்கள் அவரது 11ஆவது வருட பாதயாத்திரையைக் கடந்த 2014ஆம் ஆண்டு இராமேச்சுரம் காசி பாதயாத்திரை மேற்கொண்டார். அந்தப் பாதயாத்திரையில் என்னையும் ஒரு யாத்திரிகனாகச் சேர்த்துக் கொண்டார். காசிக்கான எங்களது பாதயாத்திரையானது கீரனூர் வழியாகவே சென்றது. அப்போது கீரனூர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் எங்களைக் கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்கான நேரம் கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு 9 மே 2015 அன்று குருசாமி பச்சைக்காவடி அவர்களது 12ஆவது வருட இராமேச்சுரம் காசி யாத்திரையும் கீரனூர் வழியாகவே சென்றது. யாத்திரிகர்களைப் பார்த்து வருவதற்காக, நான் காரைக்குடியிலிருந்து பேருந்து மூலமாகக் கீரனூர் சென்றேன். கீரனூருக்குச் சற்று முன்னதாகவே யாத்திரிகர் நடந்துவருவதைக் கண்டு, அந்த இடத்திலேயே பேருந்திலிருந்து இறங்கி யாத்திரிகர்களுடன் சேர்ந்து கொண்டு நானும் நடந்தே கீரனூர் சென்றேன்.
இந்த 2015ஆம் ஆண்டு இறைவனது திருவருளால் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் கீரனூர் கோயிலுக்குச் சென்றார்கள். குருசாமி பச்சைக்காவடியுடனும் மற்றைய யாத்திரிகர்களுடனும் கீரனூர் கோயிலுக்குச் சென்று வழிபடும் பெரும்பேறு கிடைக்கப் பெற்றேன்.
குருசாமி பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்து ஆசிகள் பெறவேண்டிக் கோயில் வளாகத்தில் ஏராள பக்தர்கள் காத்திருந்தனர். அவர்களை யெல்லாம் குருசாமி அவர்கள் ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார்.
திருச்சி திருஎறும்பியூர் காசிஸ்ரீ அங்கமுத்து சாமிகள் நந்தியின் அருகே நிற்கிறார்.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்