உ
முழுமுதற் கடவுள் ஆனைமுகத்தான் அருள்.
ஸ்ரீ காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின்
அறுபடைவீடு பாதயாத்திரை
ஹேவிளம்பி 2017 வருடம்
இந்தியப் பெருநாட்டில் உள்ள அனைத்து மக்களின் நலம்காக்க, நாட்டுக்கோட்டை நகரத்தார் நலம்காக்க, பனிரெண்டு முறை இராமேச்சுரம் காசி பாதயாத்திரை சென்று ஆண்டவனின் அருள் பெற்ற வலையபட்டி பச்சைக்காவடி அவர்களின் அறுபடைவீட்டிற்கான இரண்டாம் ஆண்டு ஆன்மிகப் பாதயாத்திரை.
பாதயாத்திரை துவக்க நாளான இன்று வைகாசி 25 (08.06.2017) வியாழன் காலை வைரவன்பட்டியில் வழிபாடு.
வழிபாடு முடிந்து, காலை மணி 8:10க்கு பிள்ளையார்பட்டி சேதுஅம்பலம் வீட்டில் வரவேற்பு, பாதபூசை, காலை உணவு.
பாதயாத்திரை துவக்க நாளான இன்று வைகாசி 25 (08.06.2017) வியாழன் காலை வைரவன்பட்டியில் வழிபாடு.
வழிபாடு முடிந்து, காலை மணி 8:10க்கு பிள்ளையார்பட்டி சேதுஅம்பலம் வீட்டில் வரவேற்பு, பாதபூசை, காலை உணவு.
மாலை பிள்ளையார்பட்டியில் வழிபாடு. பாதயாத்திரை துவங்கியது. வழியில் ஐயா பிச்சக்குருக்கள் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டு திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் ஓய்வு, இரவு தங்கல்.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்