பகூத்அறிவாளிகளுக்கு
இது ஒரு மூட நம்பிக்கை.
குனேருமோசாம் - மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓர் ஊர். தேசிய நெடுஞ்சாலை எண் 7, சபல்பூர் - டியோரி க்கு இடையே, சாலையிலிருந்து மேற்கே உள்ளது. புவிப்படத்தை இணைத்துள்ளேன்.
ஊரில் தினம் ஒரு சாவு. விடிந்ததும் யாரும் வெளியில் வரவே மனம் வருந்தினர். வீட்டிற்குள் இருந்து வெளியே வந்தால் யார் வீட்டில் யார் செத்தார் என்ற செய்தியே தினமும் காதில் விழுந்து கொண்டிருந்தது. ஊரால் ஒன்றுகூடிப் பேசி, ஊரைவிட்டுக் காலிசெய்து வேறு எங்காவது போய்விடலமா? என ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
இவ்வாறான நாட்களில் ஊரார் சிலர் தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை மேற்கொண்டிருந்த காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்துத் தங்களது ஊரின் நிலைமையை எடுத்துக் கூறினர். காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் குனேருமோசாம் கிராமத்திற்கு அவருடன் வந்து பாதயாத்திரை அடியார்களுடன் சென்று தங்கினார். கோயில் வாசலில் உள்ள குளத்தைச் சுற்றி வந்தார். அங்கே ஒரு அடர்ந்த மூங்கில் புதர் இருந்தது. அதனுள்ளே யாரோ சிலர் தங்கி யிருந்த அடையாளங்கள் இருந்தன. காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்கள் அந்த இடத்தில் தனது கையில் இருந்த திருநீற்றைத் தூவி விட்டுள்ளார். அதன் பின்னர் காசியாத்திரையை மேற்கொண்டுள்ளார்.
சில நாட்களில் அந்தக் கிராமத்தினர் அந்த மூங்கில் புதருக்குள் மந்திரவாதி ஒருவன் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். அந்த நாள் தொடர்ந்து அந்தக் கிராமத்தில் எந்தவொரு உயிர் இழப்பும் இல்லாமல் போனது.
இதனால் இந்த ஊரார் ஒவ்வொரு ஆண்டும் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்கள் இராமேசுவரம் - காசி பாதயாத்திரை மேற்கொள்ளும் போது, தங்களது ஊருக்கு அழைத்துச் சென்று தங்கவைத்து உபசரிக்கின்றனர்.
ஊர்க் கோயிலின் உள்ளேயும், கிராமத்தினரின் ஒவ்வொரு வீட்டின் பூசையறையிலும் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் படத்தை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். யாத்திரிகர்கள் இந்தக் கிராமத்தில் தங்கி யிருந்த இரண்டு நாட்களிலும் ஒவ்வொருவர் வீட்டிற்கும் அழைத்துச் சென்று விருந்து உபசரித்தனர்.
ஆவணி 12 மற்றும் 13 (28, 29.08.2014) ஆகிய இரண்டு தினங்கள் யாத்திரிகர்கள் இங்கே தங்கிச் சென்றோம்.
G479+G4 Gunahru, Madhya Pradesh