வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

பச்சைக்காவடி - பெயர் விளக்கம் .



பச்சைக்காவடி - பெயர் விளக்கம்




நகரத்தார் சமூகத்தினர் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக தைப்பூசம் விழாவின் போது பழனிக்கு காவடி எடுத்து வருகின்றனர் .
பழனி முருகன் கோயிலில் இருந்து தைப்பூசம் இந்நாளில் நடைபெறவுள்ளது என்று 
1)கண்டனூர் சாமியாடி
2)அரண்மனை பொங்கல் 
3)நெற்குப்பை ஐயா 
இம் மூவருக்கும் 
"ஓலை" அனுப்புவார்கள் .
இம் மூவரது  ஏற்பாட்டில் காவடிகள் புறப்படும்.
ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் காவடிகள் சென்றன. இப்போது சுமார் 400 காவடிகள் செல்கின்றன .

தொடர்வண்டி மற்றும் பேருந்துகளுக்கு ஓட்டுனர் நடத்துனர் இருப்பது போல காவடிக்கும் உண்டு .
காவடிகளுக்கு முன்னதாகச் செல்பவர் கையில் வேல் எடுத்துச் செல்வார். வேல் பின்னர் அனைத்து காவடிகளும் செல்லும் .

காவடிகளின் மேல் சுற்றப்பட்டிருக்கும் துணிக்கு "பண்ணாங்கு " என்று பெயர்.
எல்லாகாவடிகளிலும் மஞ்சள் , காவி, அரக்கு நிறத்தில் காவடி எடுப்பவரின் விருப்பப்படி பண்ணாங்கின்  இருக்கும் .
ஆனால் ஒரே ஒரு காவடியில் மட்டும் பச்சை நிற த்தில் பண்ணாங்கு துணி போர்த்தப்பட்டு  இருக்கும் .
இதனால் இந்த காவடிக்கு "பச்சைக்காவடி " என்று பெயர்.
எல்லாக் காவடிகளையும்  விடுதல் இன்றி அழைத்துக் கொண்டு வர வேண்டியது இவரது பொறுப்பு .
பச்சைக்காவடி வந்து விட்டால்  எல்லாக் காவடிகளும் வந்து விட்டனர் என்று பொருள் .
காவடி எடுப்பவர்கள் வேல் எடுத்துச்  செல்பவரை முந்திச் செல்லவும் மாட்டார்கள் , பச்சைக்காவடி க்குப் பின் வரவும் மாட்டார்கள் .

கடந்த 42 ஆண்டுகளாக பொன்னமராவதி வலையப்பட்டியைச் சேர்ந்த "தேனி மலை" என்பவர் பச்சைக்காவடி எடுத்து வருகிறார் .  பச்சைக்காவடி எடுக்கும் காரணத்தால் எல்லோரும் மரியாதை நிமித்தமாக இவரது இயற்பெயரைக் கொண்டு அழைக்காமால் "பச்சைக்காவடி"  என்றே அழைத்தனர் .
இதனால் குருஜியின் இயற்பெயர் மறைந்து பச்சைக்காவடி என்ற பட்டம், குருஜி அவர்களுக்குப் பெயராக நிலைத்துவிட்டது .


பச்சைக்காவடி பெயர்விளக்கம் தகவல் வழங்கியவர் -
காசிஸ்ரீ சு.ப.சின்னக் கருப்பன் செட்டியார் ,  
காரைக்குடி .

------------------------------------------------------------

பச்சைக்காவடி - அறிமுகம்

பச்சைக்காவடி அவர்களின் இயற்பெயர் தேனிமலை.   பொன்னமராவதி வலையபட்டி நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்.  
அழகர்கோயில், சபரிமலை, திருப்பதி, காசி, மலேசியா-சிங்கப்பூர், அறுபடைவீடு எனப் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

இவர் எம்.என்.நம்பியார் அவர்கள் சபரிமலைக்குச் செல்வதைப் பார்த்துள்ளார்.  அதனால் ஈர்க்கப்பட்டவர் பொன்னமராவதியில் இருந்து சபரிமலைக்குப் பாதயாத்திரையாகப் பல ஆண்டுகள் சென்றுள்ளனர்.  
திருப்பதிக்குப் பாதயாத்திரை 18 ஆண்டுகள் சென்றுள்ளார்.

கடந்த 42 ஆண்டுகளாக பொன்னமராவதியிலிருந்து பழனிக்குக் காவடி எடுத்து வருகிறார்.

பச்சைக்காவடி அவர்கள் 12 முறை இராமேசுவரம் காசி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.  முதன்முறையாக இராமேசுவரம் காசி பாதயாத்திரை மேற்கொள்ளும் போது திரு.அரு.சோ. மற்றும் சிலருடன் சென்றுள்ளார்.  அடுத்தடுத்த ஆண்டுகளில் இவரே தன்னுடன் 20 அடியார்களையும் அழைத்துக் கொண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இவரது 12ஆவது காசி யாத்திரையை 2015ஆம் ஆண்டு நிறைவு செய்தார்.

ஒருமறை மலேசியா முருகன் கோயிலுக்குச் சிங்கப்பூரிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

அறுபடைவீடு பாதயாத்திரையை 2016ஆம் ஆண்டு துவக்கி, ஒவ்வொரு ஆண்டும் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.  ஆறு ஆண்டுகளுக்கு இந்த யாத்திரையை மேற்கொள்வதெனத் திட்டம் வைத்துள்ளார்.  2016, 2017 மற்றும் 2018 என மூன்று ஆண்டுகள் இதுவரை நிறைவாகியுள்ளன. 2019, 2020 மற்றும் 2021 என மூன்று ஆண்டுகள் யாத்திரை நடைபெற நேர்ந்துகொண்டுள்ளார்.

இப்படிக்கு
அடியேன்,
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
2014ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை,
2015ஆம் ஆண்டு நாக்பூர் காசி பாதயாத்திரை,
2016ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரை
2017ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரை

இறையருளால், குருசாமி பச்சைக்காவடி அவர்களால் அடியேனுக்குக் கிடைக்கப் பெற்ற பேறு இவை.


அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக