20, 21.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை
குருசாமி பச்சைக்காவடி அவர்களது தலைமையில் அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம். பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி சுவாமிமலை ஆகிய ஐந்து தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு திருத்தணிகை சென்று கொண்டிருந்தோம்.
1) துன்முகி வைகாசி – 7 (20.05.2016) வெள்ளிக் கிழமை
இன்று காலை 03.00 மணிக்கு கடலூரில் இருந்து புறப்பட்டு 14 கி.மீ. நடந்து தவளக்குப்பம் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கு காசிஸ்ரீ தொப்பை என்ற கலியபெருமாள் அவர்களின் குடும்பத்தினர் வந்திருந்து யாத்திரிகர்களை வரவேற்று மைசூர்போண்டா தேநீர் கொடுத்து உபசரித்தனர்.
அன்னதான வண்டியின் சக்கரத்தில் காற்று குறைந்து விட்டதால் அந்தச் சக்கரத்தைக் கழட்டிச் செப்பனிட்டு மாற்றிப் புறப்படத் தாமதம் ஆனது.
பாண்டிச்சேரி நகரத்தார் சங்கத்தின்ர் தவளக்குப்பத்திற்கு வந்து யாத்திரிகர்களை வரவேற்று வழிகாட்டி அழைத்துச் சென்றனர். அங்கிருந்து சுமார் 5 கி.மீ. நடந்து பாண்டிச்சேரி முருங்கம்வாக்கத்தில் உள்ள நகரத்தார் விடுதியை அடைந்தோம்.
உடல்நலத்தைப் பாராது ஊர் ஊராய்த் தேடித் திரிந்து ஏடுகளைச் சேகரித்த பெரும் புண்ணியவான். மின்தமிழ் வழி நண்பர் ஐயா அண்ணாமலை சுகுமாரன் அவர்களும் அவரது நண்பரும் வந்து என்னை நலம் விசாரித்தனர். பின்னர் குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றனர்.
மாலை நேரத்தில் பாண்டிச்சேரி மணக்குளம் விநாயகர் கோயிலுக்குச் சென்று யாத்திர்கள் அனைவரும் வழிபாடு செய்து கொண்டோம். கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிமாக இருந்தது. கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள், பச்சைக்காவடி அவர்கள் 12 முறை இராமேச்சுரம்-காசி பாதயாத்திரை செய்தவர் என்பதை அறிந்து அவரை வணங்கி ஆசிகள் பெற்றனர்.
இன்று காலை மதியம் இரவு என மூன்று வேலை உணவும் நகரத்தார் விடுதியில் உண்டோம்.
2) துன்முகி வைகாசி – 8 (21.05.2016) சனிக் கிழமை
இன்று புதுச்சேரியில் ஓய்வு நாள். இன்று காலை மதியம் இரவு உணவைப் பாண்டிச்சேரி நகரத்தார் சங்கத்தினர் சார்பில் வழங்கி யாத்திரிகர்களை உபசரித்தனர். யாத்திரிகர்கள் குளிக்க எண்ணெய் வழங்கப்பட்டது. யாத்திரிகர்கள் பலரும் அவரவர் துணிகளைத் துவைத்துக் காயவைத்து, எண்ணைய் தேய்த்துக் குளித்து ஓய்வு எடுத்தனர். ‘Super Hero‘ அவர்கள் நகரத்தார் விடுதிக்கு எழுந்தருளி யாத்திரிகர்களைக் கண்டு மகிழ்ந்து காளைராசன் அவர்களுடன் படம் எடுத்துக் கொண்டார்.
குருசாமி பச்சைக்காவடி அவர்களது தொடர்பு எண் - 97 8787 2121.
குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,
அன்பன் காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக