வெள்ளி, 3 ஜூலை, 2020

04.07.2014 காசி பாதயாத்திரை - 40ஆம் நாள் - ஆனி 20

பயணக் கட்டுரை -
இராமேசுவரம் - காசி பாதயாத்திரை - 
பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.

இன்று 40ஆம் நாள் - ஆனி 20 (04.07.2014) வெள்ளிக் கிழமை.  
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 
நேற்று பாகேபள்ளி வந்து சேர்ந்து இருந்தோம்.

3.03 am
இன்று 04.07.2014 அதிகாலை 3.00 மணிக்கு தினசரி வழிபாடு முடிந்தவுடன் ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு,  பாகேபள்ளி கீதா மந்திரில் இருந்து புறப்பட்டு பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.  
5.35 am

6.11 am
வழியில் சாலையோரம் இருந்த பெட்ரோல்பங்கில் அமர்ந்து ரொட்டி தேநீர் சாப்பிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம்.

7.14 am
காலை மணி 7.15 அளவில் புட்டபர்த்தி ஸ்ரீ சாய்பாபா கோயிலுக்குச் செல்லும் பிரிவுப்பாதை இருந்தது.  ஸ்ரீ சாய்பாபாவை நினைத்து வணங்கிக் கொண்டே யாத்திரையைத் தொடர்ந்தோம்.

7.15 am

8.17 am
வழியில் உள்ள மற்றொரு பெட்ரோல்பங்கில் அன்னதானவண்டியை நிறுத்தியிருந்தனர்.  அங்கே காலை உணவு சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.

8.37 am

9.17 am

9.48 am





9.47 am
புலகுருளபள்ளி (Pullagurlapalli) என்ற ஊருக்குச் சற்று முன்னதாக உள்ள ஒரு கிராமத்தில் (NH 44 - Andhra Pradesh 515241 - 13.922671, 77.691000) காசிஸ்ரீ சிவாப்பாவிற்குச் சொந்தங்கள் பலரும்  வசிக்கின்றனர்.   காசிஸ்ரீ சிவாப்பாவும் யாத்திரிகர்களும் வருவதை அறிந்த ஊரார் பலரும் சாலையோரம் நின்று யாத்திரிகர்களை வரவேற்றனர்.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அவர்களை ஆசிர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார்.



10.12 am
புத்தபள்ளி செல்லும் பிரிவு சாலை அருகே ஆற்றங்கரையோரம் ஒரு சிறிய ஆஞ்சனேயர் கோயில் இருந்தது.  சிவாப்பா மிகவும் பக்தியுடன் அந்த ஆஞ்சனேயசுவாமியை வணங்கிக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தார்.

10.39 am
10.48 am
காசிஸ்ரீ சிவாப்பா அவர்களின் நண்பர் பாலசமுத்திரம் ஊர் எல்லையில் வந்து நின்று குருசாமி பச்சைக்காவடி அவர்களை வரவேற்று அழைத்துச் சென்றார்.

10.54 am

பாலசமுத்திரம் எல்லையில் ஒரு சிறிய கோயில் சிதிலமடைந்து கிடந்தது.  அங்கே மிகப் பெரிய ஆலமரமும் வேப்பரமும்  இருந்தன.  அவற்றின் நடுவே நாகக் கன்னியை வைத்து வழிபாடு செய்கின்றனர்.

11.00 am
பாலசமுத்திரத்தில் காசிஸ்ரீ சிவாப்பா அவர்களின் உறவினர்கள் பலரும் வந்திருந்து சிவாப்பாவையும் யாத்திரிகர்களையும் வரவேற்றனர்.



11.05 am
ஜில்லா பரிசாத் மேல்நிலைப் பள்ளியில் (Zilla Parishad High School)  தங்கினோம்.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஆசிர்வதித்தார்.
மதிய உணவு.
ஓய்வு.



பள்ளிக்கு நேர் எதிரே ஒரு மசூதி உள்ளது.  மசூதியின் வாயிலில் ஆவுடையார் ஒன்று சிதைந்த நிலையில் கிடந்தது.  அந்த ஆவுடையாரில் நந்தியின் சிற்பம் பொறிக்கப்பட்டிருந்தது.  இந்த மசூதியானது பாலசமுத்திரம் கண்மாய் (அல்லது ஏரி)க் கரையில் இருந்தது.


https://goo.gl/maps/AFWrkKWUmoNA1Zbu5
இன்றைய பயணம் சுமார் 28 கி.மீ .
கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 2 ஜூலை, 2020

03.07.2014 காசி பாதயாத்திரை - 39ஆம் நாள் - ஆனி 19

இராமேசுவரம் - காசி பாதயாத்திரை - 
பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.

இன்று 39ஆம் நாள் - ஆனி 19 (03.07.2014) வியாழக் கிழமை.  
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று பெரச்சந்திரா வந்து சேர்ந்து இருந்தோம்.

இன்று அதிகாலை 2.45 மணிக்கு தினசரி வழிபாடு முடிந்தவுடன் ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு, பெரச்சந்திராவில் இருந்து புறப்பட்டு பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.  பரகோடு வழியாக பாகேபள்ளிக்கு காலை மணி 10.15 க்கு வந்து சேர்ந்தோம்.  இன்றுடன் கர்நாடக எல்லை முடிகிறது.  நாளையிலிருந்து ஆந்திரா மாநிலம் வழியாகப் பயணம் .

7.32 am

7.37 am


7.41 am
வரும் வழியில் பரகோடு பேருந்து நிறுத்தத்தில் காலை உணவு. அருகில் சில தொழிலாளர் தொலைத்தொடர்பு இணைப்பு பணிகள் செய்து கொண்டிருந்தனர், ஒரு முதியவரும் இருந்தார்.  அவர்களில் சிலர் திண்டுக்கல் என்றனர்.

8.11 am
குருஜி பச்சைக்காவடிஅவர்களையும் அழைத்து காலை உணவு வழங்கினார்.

8.29 am


8.45 am

8.54 am

9.16 am

9.34 am

9.39 am

9.45 am

9.51 am
கடுமையான வெயில்.

10.15 am

10.16 am
காலை மணி 10.15 அளவில் பாகேபள்ளி கீதாமந்திர் வந்து சேர்ந்தோம்.
மாடியில் தங்கிக் கொள்ள வசதி செய்து கொடுத்திருந்தனர். நன்கு வசதியாக காற்றோட்டமாகத் தங்கினோம்.
ஓய்வு.



11.22 am
குருசாமி பச்சைக்காவடி அவர்களும் காசிஸ்ரீ சரவணன் அவர்களும் பாகேபள்ளி சந்தைக்குச் சென்று காய்கறிகள் நிறைய வாங்கிக் கொண்டு கொடுத்தனர்.
பாகேபள்ளி கீதாமந்திரில் மதிய உணவு .
ஓய்வு.
தங்கல்.

https://goo.gl/maps/KYGakGP4KMrLphVi8
இன்றைய பயணம் சுமார் சுமார் பயணம் 27 கீ.மீ .
கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

03.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 26ஆவது நாள், ஆனி 19

பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று  26ஆவது நாள், ஆனி 19 (03.07.2017) திங்கள் கிழமை.
பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பகவிநாயகரை வழிபட்டு பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை, 2) திருப்பரங்குன்றம், 3) திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களில் வழிபாடு செய்துவிட்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் நேற்று கூத்தியார்குண்டு வந்து சேர்ந்தோம்.

இன்று அதிகாலை 3.30 மணிக்குத் திருவேடகம் நோக்கிப் பாதயாத்திரை தொடர்ந்தது.  வழக்கம்போல் காலைவழிபாடு முடித்து ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுப் பாதயாத்திரை செய்தோம்.

விடியும்போது நாகமலையைக் கடந்து சென்று கொண்டிருந்தோம்.  அதன் பின்னர் எங்களது பயணம் முழுவதும் வைகை ஆற்றங்கரையில்  நடந்தது.  மரங்கள் நிறைந்து குளிர்ச்சியாக இருந்தது. 

வழியில் கீழமாத்தூர் அருகே 7.10க்கு மணிக்கு சாலையோரம் உள்ள கோயில் வளாகத்தில் சிறிது நேரம் தங்கி ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு நடக்கத் தொடங்கினோம். 



காலை மணி 9.00 அளவில் ஆற்றுப்பாலம் அருகே சாலையோரம் உள்ள ஸ்ரீ அருள்மிகு மாலையம்மன் கோயில் வளாகத்தில் அமர்ந்து காலை உணவு.   இத்தனை நாட்களும் வெயிலில் நடந்து வந்து எங்களுக்கு இந்த இடம் சொர்க்கம் போன்று இருந்தது.


காலை மணி 9.30 அளவில் திருவேடகம் ஊருக்கு வந்து சேர்ந்தோம்.

வைகை ஆற்றங்கரையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாதுவென்ற விநாயகர்கோயிலை வணங்கிக் கொண்டு, அருகில் உள்ள  திருஞானசம்பந்தர் சந்நிதியையும் வணங்கிக் கொண்டோம்.   மதுரையில் வைகை ஆற்றில் விடப்பெற்ற திருஞானசம்பந்தரின் ஏடுகள் ஆற்றை எதிர்த்துச் சென்று கரை யேறிய இடம் இது.  இன்று தமிழகத்தில் சைவம் தழைத்தோங்கிடக் காரணமான இந்தப் புனிதமான இடத்தை வலம் வந்து அனைவரும் வணங்கிக் கொண்டோம்.

காலை 9.50 மணிக்கு திருவேடகம் சொக்கலிங்கம் சுவாமிகள் மடம் வந்து சேர்ந்தோம் . ஊரார் வந்து நின்று வரவேற்று உபசரித்தனர்.

மதிய உணவு.
ஓய்வு.

தேவகோட்டை பழ.இராம.பழ. சோமசுந்தரம் செட்டியார் (இருப்பு - மதுரை) அவர்கள் குடும்பத்துடன் வந்திருந்து மாலைநேரம் யாத்திரிகர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.   கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்து வைத்தார்.


மாலை மணி 6.00 அளவில் அருள்மிகு ஏலவார்குழலி உடனாய திரு ஏடகநாதர் ஆலயம் சென்று  வழிபாடு செய்தோம்.  அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனி இராஜகோபுரங்கள்.   சமணரோடு திருஞானசம்பந்தப் பெருமுன் புனல்வாதம் செய்தபோது வைகையில் இட்ட பாடல்கள் ஆற்றை எதிர்த்துச் சென்று கரை ஒதுங்கிய இடம் திருவேடகம்.  ஆண்டுதோறும் ஆவணி மாதம் பௌர்ணமி அன்று “ஏடு எதிர் ஏறிய விழா” சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.  

கோயிலில் வழிபாடு முடிந்தவுடன், அருகில் உள்ள அடியார் வீட்டில் வரவேற்புக் கொடுத்தனர்.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அந்தக் குடும்பத்தினரை ஆசிர்வதித்தார்.

ஓய்வு.

https://goo.gl/maps/cWvC7q45UigSQkfR9
இன்றைய பயணம் சுமார் 21 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்



புதன், 1 ஜூலை, 2020

02.07.2017 அறுபடைவீடு - பாதயாத்திரை - பயணக் கட்டுரை - 25ஆவது நாள், ஆனி 18

பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று  25ஆவது நாள், ஆனி 18 (02.07.2017) ஞாயிற்றுக் கிழமை.
பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பகவிநாயகரை வழிபட்டு பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை, 2) திருப்பரங்குன்றம், 3) திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களில் வழிபாடு செய்துவிட்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் நேற்று பந்தல்குடி வந்து சேர்ந்தோம்.

வலையன்குளத்தில் இருந்து இன்று காலை மணி 3:10 க்குப் புறப்பட்டோம். காலை மணி 6.00 அளவில் சிப்காட் தொழிற்சாலை வளாகத்திற்கு வந்து சேர்ந்தோம். 

கப்பலூரில் கொப்பனாபட்டு திரு . பழனியப்பன் அவர்கள் வரவேற்று அவரது நூற்பாலைக்கு அழைத்துச் சென்று உபசரித்தார். 
7.10க்கு மணிக்கு ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.

காலை 8.10 மணிக்கு மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கூத்தியார்குண்டு திரு அக்கின்ராசு எம்.பி. அவர்களது வீடு வந்து சேர்ந்தோம் . 
அவரது மகன்களில் இருவர் அங்கேயிருந்து யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தனர்.

எம்.பி. அவர்களது வீட்டில் தங்கல்.
மணி 8.30 அளவில் காலை உணவு.
ஓய்வு.

நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் பெரிய கண்மாய் உள்ளது.  இங்கிருந்து பார்த்தால் திருப்பரங்குன்றம் பசுமலை நாகமலை ஆகிய மூன்று மலைகளும் நன்றாகத் தெரிகின்றன.


மாலை மணி 4.00 அளவில் சில அடியார்கள் மீனாட்சியம்மன் ஆலயத்திற்குச் சென்றுவழிபட்டு வந்தோம்.

கூத்தியார்குண்டு ஒரு வரலாற்றுச் சிறப்புடன் தொடர்புடைய ஊர். மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயிலில் நடனமாடும் கூத்தி ஒருத்திக்கு நிவந்தமாக வழங்கப்பட்டது இந்தக் கண்மாய் என்று கூறினர்.  இதனால் இந்த ஊருக்குக் கூத்தியார்குண்டு என்ற காரணப்பெயர் உண்டாகியதாம்.  இதற்கு முன் இந்த ஊருக்குச் சதுர்வேத மங்கலம் என்ற பெயர் இருந்துள்ளது.
கூத்தியார்குண்டில் அருள்மிகு மீனாட்சியம்மன் உடனமர் சுந்தரேசுவரர் கோயில் உள்ளது.
திருமலை நாயக்கர் பதிவி யேற்றவுடன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலைப் புனர்நிர்மாணம் செய்வதற்கு முன்பு  இந்தக் கோயிலைக் கட்டினான் என்கின்றனர்.  இராணி மங்கம்மாள் இந்தக் கோயில் வழிபாட்டிற்கு முறையாக வந்து செல்வதுண்டாம். திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை மீனாட்சி ஆலயத்தில் நடைபெற்ற அத்தனை விழாக்களும் இங்கம் நடைபெற்றுள்ளன. இந்தத் திருக்கோயில் பற்றிய பதிவை இத்துடன் இணைத்துள்ளேன். 
https://temples-kalairajan.blogspot.com/2018/06/blog-post_50.html

இரவு நேர வழிபாட்டிற்குப் பின்னர் உணவு.


https://goo.gl/maps/x5bDJ6EeLb2QaXLcA
இன்றைய பயணம் சுமார் 15
 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்