காசி பாதயாத்திரை -
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்
இன்று 35ஆம் நாள் - ஆனி 15 (29.06.2014) ஞாயிற்றுக் கிழமை.
26.05.2014 அன்று குருசாமி பச்சைக்காவடி அவர்கள் 20 யாத்திரிகர்களை அழைத்துக் கொண்டு இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையை தொடங்கினார். நேற்று முன்தினம் பெங்களூரு எலகங்கா ஐயப்பன் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். நேற்றும் இன்றும் இங்கேயே தங்கியுள்ளோம்.
பெங்களூர் வாசிகள் பலரும் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்த வண்ணம் இருந்தனர். குருசாமி அவர்களும் மிகவும் பொறுமையாக அவர்களது குறைகளைக் கேட்டறிந்து நல்வழிகாட்டி ஆசிவழங்கிய வண்ணம் இருந்தார்.
எனது மின்தமிழ் நண்பர் திரு.கந்தசாமி அவர்கள், எனது பேத்தி மற்றும் அவரது உறவினர்களுடன் இன்று (29.06.2014) மாலை எலகங்கா ஐயப்பன் கோயிலுக்கு வந்து யாத்திரிகர்களை சந்தித்து,
குருஜி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றார் .
இன்று யாத்திரிகர்களுக்கு முழு ஓய்வு.
யாத்திரிகர் பலரும் தத்துவ விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர்.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்