வியாழன், 24 மே, 2018

இந்துக் கோயில்களின் அருகில் சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்கள் (என்னிடம் கேட்டால் ? )

கோயில்களின் அருகில் 
சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்கள்




நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை
(அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:469)
இதனால் நான் இங்கே சொல்ல வருவது யாதெனில் : மெய்யடியார்களே, நல்லோர்களே உங்களது பார்வையில் சீந்துவாரற்றுக் கிடக்கும் யாதேனும் மொரு சமணச் சிற்பங்கள் தென்பட்டால் மாவட்ட ஆட்சியாளருத் தெரிவித்துத் தேவையான பாதுகாப்பு செய்திடுமாறு சொல்லுங்கள். அல்லது அதை அப்படியே அங்கேயே விட்டுவிடுங்கள். அதைப் பார்க்கும் வேறு யாரேனு மொருவர் அதை அரசிடம் தெரிவிப்பார்.
மாறாக, நல்லது செய்வதாக எண்ணிக் கொண்டு சமண சிற்பங்களை அருகில் உள்ள கோயில்களில் கொண்டு வந்து வைக்காதீர்கள். இவ்வாறு கோயில் அருகில் வைக்கப் பட்டதால், தங்களது சமணச் சிற்பம் பாதுகாப்பாக உள்ளது என்று எந்த ஒரு சமணரும் (அல்லது ஆய்வாளரும்) கூறவில்லை !


மாறாக, அருகில் உள்ள ஆலயம் சமண ஆலயம் என்றும், இந்துக்கள் சமண சிற்பத்தை வாயிலில் வைத்துவிட்டு, அதை யொரு இந்து ஆலயமாக மாற்றிவிட்டனர் என்று ஆதாரங்கள் இல்லாமல் பழிச்சொற்களால் இழிவு படுத்துகின்றனர். சுயம்புலிங்கங்களை இடம்மாற்றி வைக்க முடியாது என அறிந்து ஆய்வாளர் சிலரும் தங்களது மேதாவித் தனத்தை நிறுவ முடியாமல் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர்.
இதெல்லாம் இந்துக்களுக்குத் தேவையா யென்ன ?

திண்டிவனத்திலிருந்து மேல்மருவத்தூர் செல்லும் வழியில் ஓங்கூர் என்ற ஊரில் சாலையோரம் அருள்மிகு சுந்தரபுரீசுவரர் ஆலயம் உள்ளது.  கோயிலுக்கு வெளியே ஒரு தீர்த்தங்கரர் சிற்பத்தைக் கொண்டு வந்து வைத்துள்ளனர்.  இதைப் பார்த்ததும் என் மனதில் தோன்றிய கருத்தினைப் பதிவு செய்துள்ளேன்.

வள்ளுவர் வழி நின்று இந்துக்களின் வழிபாட்டிற்கு இயைபு உடைய தெய்வச் சிற்பங்களை மட்டுமே இந்து ஆலயங்களின் அருகில் வைத்து வழிபட முற்பட வேண்டும் என்று எண்ணுகிறேன். என் கருத்து சரியா ?

அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

விளம்பி (௨௦௧௮) அறுபடைவீடு பாதயாத்திரை

குருசாமி பச்சைக்காவடி அவர்களின்,
விளம்பி (௨௦௧௮) வருட அறுபடைவீடு பாதயாத்திரை
யாத்திரிகர் பெயர்ப் பட்டியல்.

1.Batchai kavadi- age 67,
2.S.Dhurai sami-78
3.C.kannappan-75
4.R.Angamuthu-73
5.C.solaiyan-70
6.R.sathiya moorthi-70
7.D.Dhanasekaran-65
8.T.k.soundharajan-64
9.S.Muthukaruppan-64
10.A.S.Shanmugam-63
11.C.Thiyagarajan-63
12.S.Deenadhayalan-63
13.K.T.Periyakaruppan-62
14.P.S.Kathiresan-60
15.S.Ramanathan-59
16.VE.Karuppaiyaa-58
17.S.Vijayakumar-54
18.SP.Rajavel-50
19.R.Janakiraman-46
20.C.Manikandan-41
21.N.Sakthivel-20
22.S.Devan-45
23.D.Mani-28
24.C.Murugesan-26

திங்கள், 7 மே, 2018

அறுபடைவீடு பாதயாத்திரை வைதீசுவரன் கோயில் 16.05.2016

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தலைமையில்
அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம்.
பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி ஆகிய
நான்கு தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு
சுவாமிமலை சென்று கொண்டிருந்தோம்.
 
துன்முகி வைகாசி – 3 (16.05.2016) திங்கள் கிழமை

இன்று தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டு தேர்தல் வாக்குப்பதிவு நாள்.

யாத்திரிகர்கள் காலை 02.30 மணிக்கு குத்தாலத்தில் இருந்து புறப்பட்டு 26 கி.மீ. நடந்து வைத்தீசுவரன் கோயில் சென்று அங்குள்ள PL.A.  மண்டபத்தை 8.30 அடைந்து அங்கு தங்கினோம். 
இந்த மண்டபத்தை குருசாமி பச்சைக்காவடி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

வழியில் காலை 6.30 மணியளவில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.

யாத்திரிகர் அனைவரும் மண்டபத்தை வந்தடைந்த சிறிது நேரத்தில் மிகவும் பலத்த மழை பெய்தது.  இன்று முழுநாளும் விடாது மழை பெய்தது. சாலைகள் எல்லாம் மழைநீர் ஆறுபோல் ஓடியது.

யாத்திர்கள் அனைவரும் மாலை 5.00 மணிக்கு வைத்தீசுவரன் கோயில் சென்று அருள்மிகு தையல்நாயகி உடனாய வைத்தியநாதர் மற்றும் முத்துக்குமாரசாமி, அங்காரகன், தன்வந்திரி, பிள்ளையார் வழிபாடு செய்தோம்.
இங்குள்ள தீர்த்தம் மிகவும் பிரசித்தம்.  தவளை ஏதும் இதில் இருக்காது. இந்தத் தீர்த்தத்தில் உள்ள மண்ணை எடுத்துச் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி உடற்பிணிக்கு மருந்தாகக் கொடுக்கின்றனர்.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தொடர்பு எண் - 97 8787 2121.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,
அன்பன் காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

வியாழன், 3 மே, 2018

இராமேசுவரம் காசி பாதயாத்திரை, (35, 36ஆவது நாட்கள்) எலகங்கா, பெங்களூர்

இராமேசுவரம் காசி பாதயாத்திரை, 
(35, 36ஆவது நாட்கள்) 
பாபா கோயில், ஐயப்பன் கோயில், எலகங்கா , பெங்களூர்


குரு மகாராஜ் பச்சைக்காவடி அவர்கள், அவரது 20 யாத்திரிகர்களுடன் இராமேஸ்வரத்திலிருந்து காசிக்குப் புனித பாதயாத்திரை மேற்கொண்டார். இவர்கள் இந்த கோவிலில், 2014ஆம் ஆண்டு ஜூன் 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் தங்கி ஓய்வு எடுத்துச் சென்றுள்ளனர்.

மீண்டும் 2015ஆம் வருடமும் இராமேசுவரம் காசி பாதயாத்திரையின் போது இங்கே தங்கிச் சென்றுள்ளனர்.


27.06.2014
33 ஆவது நாள் பயணமாக
இன்று  தாவரக்கரை ஐய்யப்பன் கோயிலில் (பெங்களூரு) இருந்து காலை 4.05 மணிக்கு பறப்பட்டு மேர்க்கிரி சர்க்கிள் வழியாக எலகங்கா  ஐயப்பன் கோவிலுக்கு 9.15க்கு வந்து சேர்ந்தோம் .
தர்மகர்த்தா சாலையில் நின்று வரவேற்பு அளித்தார் .
காலை உணவு .
ஒய்வு .

-----------

28.06.2014  
34 ஆவது நாள் பயணமாக
இன்றும் முழு ஓய்வு, இங்கேயே தங்கல் .
-----------

29.06.2014  
35 ஆவது நாள் பயணமாக
யாத்திரிகர்களுக்கு  முழு ஓய்வு.  இங்கேயே தங்கல் .
ஆனால் குருஜி பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்து நல்லாசிகள் பெற ஆயிரக்கணக்கானோர் 
வந்து கொண்டே யிருந்தனர்.
மின்தமிழ் நண்பர் திரு.கந்தசாமி அவர்கள், எனது பேத்தி மற்றும் அவரது உறவினர்களுடன் நேற்று (29.06.2014) மாலை எலகங்கா ஐயப்பன் கோயிலுக்கு வந்து  யாத்திரிகர்களை சந்தித்து, குருஜி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றார் .







Guru Maharaj BatchaiKavadi, with his 20 devotees, performed Yatra from Rameswaram to Varanasi. They stay on this temple, on 28th and 29th June  2014 and again in 2015.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

13.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை சுவாமிமலை

13.05.2016 அறுபடைவீடு பாதயாத்திரை சுவாமிமலை 

பொன்னமராவதி வலையபட்டி சித்தர் பச்சைக்காவடி அவர்களது தலைமையில்  அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம்.  பிள்ளையார்பட்டியிலிருந்து பாதயாத்திரையாகச் சென்று பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி ஆகிய நான்கு தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு சுவாமிமலை சென்று கொண்டிருந்தோம்.

துன்முகி சித்திரை - 30 (13.05.2016) வெள்ளிக் கிழமை - இன்று காலை 03.00 மணிக்கு திருவையாறு மடத்தில் இருந்து புறப்பட்டு 26 கி.மீ. நடந்து காலை 8.45 மணிக்கு சுவாமிமலை நகர விடுதியை அடைந்து அங்கு தங்கினோம்.

வழியில் இருந்த பெட்ரோல்பங்கில் சற்று ஓய்வு எடுத்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து நடந்தோம்.  காலைவெயில் கடுமையாக இருந்தாலும் சாலையின் இருபக்கங்களிலும் மரங்கள் இருந்த காரணத்தினால் வெயிலின் தாக்கம் அதிகம் இல்லாமல் நடந்தோம்.




இன்று காலை உணவை சுவாமிமலை நகரவிடுதித் தலைவர் பாபநாசம் உயர்திரு எம்.பழனியப்ப செட்டியார்  அவர்கள் கொடுத்து உபசரித்தார்கள்.  மாலை 06.00 மணிக்கு சுவாமிமலை கோயிலுக்குச் சென்று அருள்மிகு சாமிநாதசாமியையும், மீனாட்சி சுந்தரேசுவரரையும் வழிபட்டோம். M.C.C Charitable Trust விடுதி மேலாளர் சுவாமி தரிசன ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்கள்.  இன்று கொத்தமங்கலம் திரு. வயிரவன் அவர்கள் M.C.C Charitable Trust மூலம் அன்னதானத்திற்கு நிதியுதவி அளித்தார்கள்.






அருணகிரிநாதர் அருளிச் செய்த “திரு எழுகூற்றிருக்கை“ தேர் வடிவில் அமைந்த சித்திர கவி படித்து மகிழ்ந்தோம்.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது தொடர்பு எண் - 97 8787 2121.
குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,
அன்பன் 
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

செவ்வாய், 1 மே, 2018

அறுபடைவீடு பாதயாத்திரை, இடிக்கப்படும் கோயில்கள்,

இடிக்கப்படும் கோயில்கள்


எப்போதும் அழியாமல் இருக்க வேண்டும் என்று கல்லால் கட்டப்பெற்ற கோயில் இது.
அந்த ஊர் வழியாகச் செல்வோர் அப்படியே கோயிலுக்குச் சென்று வழிபட்டுச் செல்ல வசதியாகக் கோயில் இடத்தில் சாலை அமைத்துக் கொடுத்துள்ளனர் அரசர்கள். அது அந்தக்காலம். 

இந்தக்காலத்தில் காசுபணம் கொடுப்பவர் அதிவேகமாக நிற்காமல் செல்லவேண்டும்.  அதற்காகக்  குறைந்தசெலவில் அதிக இலாபத்தில் வசதியாகச் சாலையை அகலப்படுத்தக் கோயில்களையும் இடித்து அப்புறப்படுத்தி உள்ளனர்.
கோயில்களை இடிப்பது யாரோ பாக்கிசுத்தான் தீவிரவாதி என்று நினைத்து விடாதீர்கள்.  சுதந்திர இந்தியாவில் மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட  ஆட்சியில்தான் இப்படியெல்லாம் இடிக்கப்படுகின்றன.

பக்திக்காகச் சாலை அமைத்த அரசாட்சிகள் போயி, பணத்திற்காகக் கோயிலை இடிக்கும் மக்களாட்சி முறைமையின் அவலங்களை எண்ணி வருந்த வேண்டியுள்ளது.

படத்தில்
1) மதுரை, கோவில்பட்டி அருகே இராமானுஞ்சபுரத்தில் சாலையின் ஓரத்தில் இருந்த கற்கோயில் ஒன்றை சாலையின் விரிவாக்கத்திற்காக இடித்துத் தள்ளப்பட்டுள்ள கோயில்.


2) சிவகங்கை மாவட்டம் மணலூரில் இடிக்கப்பட்டு விட்ட மசூதியும். இப்போது இந்த மசூதி மணலூரில் இல்லை.  இந்த மசூதியை அகற்றி விட்டுச் சாலையை அகலப்படுத்தி உள்ளனர்.


3) வேடசந்தூரில் இருந்த திருச்சி செல்லும் வழியில், வையம்பட்டி அருகே சாலையோரம் கோயில் ஒன்று இடிக்கப்பட்டு கிடக்கிறது.