காசி புனித பாதயாத்திரை
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் பாதயாத்திரை
ஞாயிறு, 9 நவம்பர், 2025
காசி சிக்ரா நந்தவனம் மீட்பு
புதன், 18 ஜூன், 2025
இராமேசுவரம் - காசி பாதயாத்திரைப் பயண அனுபவங்கள் புத்தகம்
இராமேசுவரம் - காசி பாதயாத்திரை தினசரி பயண அனுபவங்கள் அடங்கிய புத்தகம்
கோவிலூர் மடலாயம் நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.
கோவிலூர் மடலாயம் இணையதளத்திலும் வாசிக்கக் கிடைக்கிறது.
https://archive.org/details/rameswaram-kasi-patha-yathra-book-16-apr-2025-2/mode/2up
புத்தகமாக வேண்டும் என்றால்,
1) இந்தப் புத்தகத்தை ஜெராக்ஸ் கடைகளில் தரவிறக்கம் செய்து, பின்னர் அச்செடுத்துக் கொள்ளலாம்.
2) அச்சடித்த புத்தகமாக விலைக்கு வேண்டும் என்றால் காரைக்குடி பூச்சரம் அச்சகத்தாரைத் தொடர்பு கொள்ளலாம். ( 9585422924)
சனி, 22 பிப்ரவரி, 2025
காசிஸ்ரீ SP SN மாதவன் செட்டியார்
சூரக்குடி திரு SP SN மாதவன், வயது 81; கைப்பேசி எண்:- 9363073151; மிகவும் அமைதியானவர். சாது.
2014 ஆம் வருடம் காசிஸ்ரீ அயோத்திஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்கள் நடத்திய இராமேசுவரம் - காசி பாதயாத்திரையில் கலந்து கொண்டு காசிஸ்ரீ பட்டம் பெற்றவர். நடைவேகம் அதிகம். குருசாமிக்குப் பிடித்தமானவர். வட்டகைக் கூட்டம் பற்றியும், நகரத்தார் சமூகம் ஒன்றாக ஒற்மையுடன் சேர்ந்து வாழவேண்டும் பிரிவினை ஒருபோதும் பயனளிக்காது என்பது பற்றியும் அனைவரிடமும் எடுத்துக் கூறி வந்தார்.
இவரது மகன் இவரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்ததார். மதுரையில் மகனுடன் இருந்து வந்தார்.
வயது மூப்பின் காரணமாகச் சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்தார். ஆயுட்காலத்தின் கடைசி நாட்களில் இருப்பதை உணர்ந்து மகனிடம் சூரக்குடிக்குச் சென்று இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இவரது கடைசி விருப்பத்தின்படியே மதுரையிலிருந்து சூரக்குடிக்கு தைப்பூசம் 11.02.2025 அன்று வந்துள்ளனர். சூரக்குடிக்குச் சொந்த வீட்டிற்கு வந்துவிட்டோம் என்ற மனநிறைவு அவருக்கு. 17.02.2025 அன்று ஆகாரம் செல்லவில்லை. பால் மட்டுமே ஆகாரம். 18.022025 துளசித் தீர்த்தம் மட்டுமே ஆகாரம். 19.02.2025 அன்று அருள்மிகு காசிவிசுவநாதர் விசாலாட்சியின் திருவடியில் முத்தியடைந்து விட்டார்.
நாமும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம். காசிஸ்ரீ மாதவன் செட்டியார் அவர்களது நல்லாசிகள் நம் அனைவருக்கம் ஆகுக.
🙏🙏🙏
சனி, 1 பிப்ரவரி, 2025
அயோத்திஸ்ரீ பட்டம் பெற்றவர்கள் 11.01.2025
உ
காளையார்கோயில் AL. AR. கட்டளையின்
ஜமீன்தார் சுவாமிகள் குருபூஜை விழா
மார்கழி மாதம் 27ஆம் தேதி (11.01.2025) சனிக்கிழமை அன்று தேவகோட்டை சன்மார்க்க சங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
வலையபட்டி காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் தலைமையில் 12.06.224 அன்று இராமேஸ்வரத்தில் இருந்து புனித பாதயாத்திரை புறப்பட்டு, காசி வழியாக அயோத்திக்குச் சென்று 13.10.2024 அன்று வழிபாடு செய்து வந்துள்ள 22 அடியார்களுக்கு 'அயோத்தி ஸ்ரீ ' பட்டம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை AL. AR. ஜமீன்தார் குடும்பத்தினர் சார்பாக, தேவகோட்டை ஜமீன்தார் உயர்திரு AL. AR. SM. நாராயணன் செட்டியார் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்கள். துலாவூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ நிரம்பழகிய ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் தலைமையில் விழா சிறப்பாக நடைபெற்றது. தேவகோட்டை சன்மார்க்க சங்கத் தலைவர் திரு SV. AN. லெட்சுமணன் செட்டியார் அவர்களும், காளையார்கோயில் செல்லப்பசுவாமிகள் மடத்தின் அதிபர் அயோத்திஸ்ரீ காசிஸ்ரீ நர்மதாஸ்ரீ ஸ்ரீலஸ்ரீ ராமசாமி சுவாமிகளும் முன்னிலை வகித்தனர். திரு AL. AR. RM. V. C. RM. அருணாசலம் செட்டியார் அவர்களும், AL. AR. RM. C. SP. சித்தரஞ்சன் செட்டியார் அவர்களும், திரு VR. சுயம்பிரகாசம் செட்டியார் அவர்களும் முன்னின்று விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். திரு இலக்கியமேகம் ந. ஸ்ரீநிவாசன் அவர்கள் அனைவரையும் வாழ்த்திச் சிறப்புரை நிகழ்த்தினார். நகரத்தார் பெருமக்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காலையும் மதியமும் அனைவருக்கும் குருபூஜை திருவமுது வழங்கி உபசரித்தார்கள்.
படத்தில் இடமிருந்து வலமாக உட்கார்ந்து இருப்பவர்கள் - 1) வலையபட்டி - காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்கள், 2) துலாவூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ நிரம்பழகிய ஞானப்பிரகாச தேசிக சுவாமி அவர்கள், 3) காளையார்கோயில் செல்லப்பசுவாமிகள் மடத்தின் அதிபர் அயோத்திஸ்ரீ காசிஸ்ரீ நர்மதாஸ்ரீ ஸ்ரீலஸ்ரீ ராமசாமி சுவாமி அவர்கள் 4) தேவகோட்டை உயர்திரு AL. AR. SM. நாராயணன் செட்டியார் அவர்கள், 5) தேவகோட்டை சன்மார்க்க சங்கத் தலைவர் திரு SV. AN. லெட்சுமணன் செட்டியார் அவர்கள்.
படத்தில் இடமிருந்து வலமாக நிற்பவர்கள் - 1) திருமானூர் - ப. ஜோதி ரத்தினம் அவர்கள் 2) சீனமங்களம் - ரா. முத்தையா அவர்கள், 3) குழிபிறை - மு. தேனப்பன் அவர்கள், 4) சிவகங்கை - பெ. பாலகுரு அவர்கள், 5) கொத்தட்டை - பா. சண்முகம் அவர்கள், 6) திருவெறும்பூர் - காசிஸ்ரீ ரா. அங்கமுத்து அவர்கள், 7) பலவான்குடி - சொ. ஜெயபாண்டியன் அவர்கள், 8) பலவான்குடி - சி. சோலை அவர்கள், 9) (பின்னால் நிற்பவர்) உ. சிறுவயல் தெய்வத்திரு வெ. காசி செட்டியார் அவர்களது மகன் வெ.கா. வெங்கடாசலம் அவர்கள், 10) திருவெறும்பூர் - நா. சங்கநாராயணன் அவர்கள், 11) செட்டியப்பட்டி - சு. சௌந்தரபாண்டியன் அவர்கள், 12) குழிபிறை - ஆ. சண்முகம் அவர்கள், 13) மடுகரை (புதுச்சேரி) - காசிஸ்ரீ தொப்பை (எ) கலியபெருமாள் அவர்கள், 14) சென்னை பம்மல் - அ. மோகன் அவர்கள், 15) கொத்தமங்கலம் - சி. சிங்காரவேலன் அவர்கள், 16) காரைக்குடி - மெ.கா. மெய்யப்பன் அவர்கள், 17) கோனாபட்டு - மு. நடராஜன் அவர்கள், கோனாபட்டு இராம.திருப்பதி கண்ணன் அவர்களது சான்றிதழையும் இவர் பெற்றுக் கொண்டார். 18) வெட்டிக்காடு - ச. துரைசாமி அவர்கள், 19) மேல்மா கூட்டுரோடு - ரா.ஜானகிராமன் அவர்கள் நேரில் வர இயலாத காரணத்தினால் கோட்டையூர் கி. காளைராசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்,
அயோத்திஸ்ரீ பட்டம் வழங்கியதற்காக ஜமீன்தார் அவர்களுக்கு நன்றி
அயோத்திஸ்ரீ பட்டம் வழங்கியதற்காக
ஜமீன்தார் அவர்களுக்கு நன்றி
01.02.2025
அயோத்திஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் தலைமையில் 33 பேர் ராமேஸ்வரம் - காசி - அயோத்தி பாதயாத்திரை சென்று வந்தோம். அயோத்தியில் பாதயாத்திரை நிறைவு செய்த 22 பேர்களுக்கு "அயோத்தி ஸ்ரீ" பட்டம் வழங்கித் தேவகோட்டை ஜமீன்தார் அவர்கள் 11.01.2025 அன்று சிறப்பு செய்தார்கள் .
ஜமீன்தார் அவர்களுக்குக் காளையார்கோயில் செல்லப்ப சுவாமிகள் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ராமசாமி ஐயா அவர்களது தலைமையில் இன்று 01.02.2025 நேரில் சென்று நன்றி தெரிவித்தோம். ஜமீன்தார் அவர்கள் மிகவும் மகிழ்ந்து எல்லோரையும் ஆசீர்வதித்தார்கள்.
AL.AR. கட்டளையின் சார்பாக, ஐயா AL AR. RM. C. SP. சித்தரஞ்சன் செட்டியார் அவர்களும், அண்ணா என்ற அன்புடன் அழைக்கப்படும் ஐயா AL AR. RM. V. C. RM. அருணாச்சலம் செட்டியார் அவர்களும் எங்களை வரவேற்று உபசரித்து வாழ்த்தினார்கள்.
"அயோத்தி ஸ்ரீ" பட்டம் பெற்றவர்களுடைய ஏழேழு தலைமுறைக்கும் தேவகோட்டை ஜமீன்தார் ஐயா அவர்கள் வழங்கிய பட்டமானது நல்வழிப்படுத்தி உயர் வாழ்வு வாழ வைக்கும்.
🙏🙏
ஞாயிறு, 27 அக்டோபர், 2024
அயோத்தி சென்று வந்த நாமனூர் ராமசாமி
ஏட்டில் உள்ள செய்தி –
150 ஆண்டுகளுக்கு முன்பு
அயோத்தி லோக்குருவிடம் ஆசி பெற்ற
சிவகங்கை மண்ணின் மைந்தன்
ராமசாமி
உ
சிவமயம்
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டிக்கு அருகேயுள்ள நாமனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் 1874ஆம் ஆண்டு மு. பெருமாள் என்பரையும் அழைத்துக் கொண்டு அயோத்தியாபுரிக்குச் சென்றுள்ளார்.
வழியில் உள்ள கிர் காடுகளிலே (https://en.wikipedia.org/wiki/Gir_National_Park) அவருக்கு யாளிகளும் சிங்கங்களும் காவலாய் இருந்துள்ளன. ஸ்ரீமுக ௵(வருடம்), சீர் தை ௴ (மாதம்), 5 ௳(நாள்), அயோத்தியாபுரி சென்று வணங்கியுள்ளார். அயோத்தியாபுரியானது தெற்கு-வடக்காக நூற்றிப்பத்து காதமும் (சுமார் 1760 கி.மீ தொலைவும்), கிழக்கு- மேற்காக நூற்றிப்பத்து காதமும் – ஆகமொத்தம் 220 காத (3520 கி.மீ.) வழி உடையது. இந்த நான்கு முலைகளிலும் யாளிகளும், சிங்கங்களும் காவலாய் இருக்கின்றன. இவ்வளவு பரந்துபட்ட அயோத்தியாபுரியைச் சூரியர்களும் சந்திரர்களும் அரசு ஆண்டுள்ளனர். அவர்களெல்லாம் திருக்கயிலாய உலகத்திற்குப் போனபடியால், அதன் பிற்பாடு, ராமசாமி அவர்களுக்கு அசோக வனத்திலே ஜனக மகாராஜா வம்சத்தினரும், எமதரும மா ராஜா வகையறாவும், யாளிகளும் சிங்கங்களும் துணையாய் இருந்தபடியால் – இப்போது, இரவு பகல் ஒரு காலாகமாக இருக்கும் காலத்திலே, ராமசுவாமி முழித்துப் பார்க்கும் நேரத்தில், எங்கும் படு சக்தியாக – ராமமாய் இருக்கிறது. பசுவின் வயிற்றில் பிறந்து வழிவழியாக நல்லாட்சி புரிந்த அரசர்களெல்லாம் (இரணிய கெற்ப அரசர்கள் ) சாம்பலாகவே இருக்கிறது. – கலிகாலம் முத்திவிட்டது.
அப்போது – திருவினை
ஐயனார் சுவாமியை தரிசனம் பண்ண
வேண்டிப் புறம்படும் பொழுது,
லோககுருவையும் அந்தப் பட்டருடைய
மனைவியையும் ராமசாமி பார்த்து, இடமாகச் சுற்றி வந்து, வலமாகச்
சுற்றி வந்து வணங்கி, சாஷ்ட்டாங்கமாக் கீழே விழுந்து
வணங்கினார். அப்போது அவருக்கு அருள்
வந்தது.
பின்னர், ராமசாமி காசிக்கும்
திருக்கையிலாயத்திற்கும் சென்றுள்ளனார். அங்கே உபதேசம் செய்துள்ளார். அங்கிருந்து சிதம்பரத்திற்குச் சென்று வணங்க வேண்டுமென்று புறப்பட்டார். வழியில்
திருப்பதி என்ற வேங்கடாசலம் வந்தார். ஸ்ரீரங்கம் வந்து அங்கே உபதேசம்
பெற்றார். மதுரை கூடலழகர் பெருமாள்
கோயிலுக்குப் போகிறோம் என்று வாக்கு பெற்றார்.
திருக்கோஷ்டியூர் வணங்கித் திருப்பாற் கடலிலே தீர்த்தம் ஆடிப் பெருமாளை தரிசனம் பண்ணினார். பாறைஓவியங்கள் உள்ள இடமாகப் புகழ் பெற்று விளங்கும்
திருமலையில் உள்ள அருள்மிகு மலைக்கொழுந்தீசுவரர் கோயிலின்
மாணிக்கவாசலிலே கையெடுத்துக் கும்பிட்டு, அவரிடத்தில்
உத்தரவு பெற்றுள்ளார்.
மலைக்கொழுந்தீசுவரர் உத்தரவுப்படி, நாமனூர் ஜமீன் அழகுயேந்தன் ராசன் - துளசி
ராசன் இவர்களிடத்தில் சென்று கோம்பை என்று அழைக்கப்படும் கோயில்உரிமைகளைக்
கேட்டுள்ளார். உள்ளூர் கரைக்கு
மகாராசாவான இவர்களது நிர்வாக நாளிலே – தேர்ச் சக்கரம் (சப்பரம்) ஓடும் போது, சுவாமிக்கு மெய்காவலாகச் சென்றுள்ளார்.
காவல் தலைவன் ஆகிய தனுச்சன் சங்கழன், உறங்காபுலி உறங்கான்,
செம்புளி வயினான், முத்தழகன் நண்டன், இந்த
நாலு வகைப் பேருக்கும் முன்பாக கையெழுத்து
போட்டுக் கொடுத்து, அழகுகேந்திரன் ராசா இடத்தில், வேளான் இடத்தில், கானி(வயல்) பெற்றார். இவ்வாறு
ராமசாமியால் சேர்க்கப்பட்ட வயலுக்கு “உறங்கான்
செய்”
என்று பெயர். இந்த வயலில்
வரும் விளைச்சல் வருமானத்தைக் கொண்டு இன்றும் அன்னதானம் நடைபெற்று வருகிறது.
கோயிலில் இருந்து சோறு
பெற்றுள்ளனர். இவர்கள் காவல் காத்து, (கலம்
அளவுள்ள நெல்லை 12 பாகமாகப் பிரித்தால் அதில் 1 பகுதி குருணி ஆகும்.) குருணி அளவு நெல் பெற்றுள்ளனர். தானியக் கிடங்கு பெற்றுள்ளனர்.
கோவில்படி காத்து, இவர்களது வகை போக, நண்டன் செம்புலி இவர்கள் மேல்கோட்டை
வடகோட்டை காத்துள்ளனர்.
அயோத்தியைப் போற்றுவோம்,
ராமசாமியைப் போற்றுவோம்.
(குறிப்பு - மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் நாடு வெள்ளையன்
பெரியஅம்பலகார் வகையறாவினரிடம் இந்த ஓலைச்சுவடி
ஏடு உள்ளது. அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் அ.
செந்தில்ராஜன் அவர்களிடம் இந்த ஓலைச்சுவடியைக் கொண்டு வந்து வாசிக்கக் கொடுத்தவர்
மு. பெ. சொக்கலிங்கம் மகன் சீனிவாசன் (915981456) சளுப்புலி மாடன் வகையறா அம்பலம்
அவர்கள். ஓலைச்சுவடியைச்
சுத்தம் செய்து, படம் எடுத்து, வாசித்துத் தட்டச்சு செய்து ஆவணப் படுத்தியவர் –
காரைக்குடி அழகப்பா பல்கைகலைக்கழகத்தின் மேனாள் துணைப்பதிவாளர் காசிஸ்ரீ முனைவர் கி.
காளைராசன், கோட்டையூர் - 9443501912)
புதன், 23 அக்டோபர், 2024
பண்டைய ஈராக்கில் கிடைத்துள்ளது இராமாயண ஓவியமா?
உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது ?
A clue to the colour scheme of an ancient palace:
This glazed tile was found by the excavator Henry Layard at the Assyrian city of Nimrud. Along with the stone reliefs, it was part of the decorative scheme of the royal palace, although few examples survived Nimrud’s destruction in the seventh century BC.
This example depicts an Assyrian king, possibly Ashurnasirpal II (reigned 883-859 BC), accompanied by his bodyguard and attendants. It was probably part of a sequence showing the king as triumphant warrior and hunter. Such tiles provide a clue to the kind of colour scheme used for the relief panels. The decoration was executed in yellow, black and green (perhaps originally red) paint. These were made from natural materials.
It is likely that most major Assyrian buildings had paintwork at least in the reception rooms. Ashurnasirpal recorded that he had represented his triumphs in paintings. There were murals on the walls above the carved stone panels and the ceilings were also painted.
Glazed bricks are mentioned first in the second half of the second millennium BC when the mastery of the mechanical properties of glass had become known.
---------------------------
வெள்ளி, 26 ஜூலை, 2024
ஞாயிறு, 21 ஜூலை, 2024
02.07.2014 காசி பாதயாத்திரை - 38ஆம் நாள் - ஆனி 18
இன்று 38ஆம் நாள் - ஆனி 18 (02.07.2014) புதன் கிழமை. 26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று சிக்பலப்பூர் ஐயப்பன் கோயில் வந்து சேர்ந்து இருந்தோம்.
காசிஸ்ரீ தனசேகரன் அவர்கள் சற்று தொலைவில் வந்து கொண்டிருந்தார்.
காசிஸ்ரீ காளைராசன், காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களும், காசிஸ்ரீ பஞ்சவர்ணம் அவர்களும் ஒன்றாக மகிழ்ந்து பேசிக் கொண்டே நடந்தனர்.
இராமேசுவரத்தில் இருந்து காசி வரை 2464 கி.மீ. வழி நெடுகிலும் எத்தனை யெத்தனையோ ஊர்கள், அத்தனை ஊர்களும் குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்குச் சொந்தஊர் போன்றே இருந்தன. அந்த ஊரில் உள்ளோர் உறவினர்களாகவே யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தனர்.
தேசிய மிகவும்
திங்கள், 29 ஏப்ரல், 2024
காசியில் திதி கொடுப்பது எப்படி ?
முகநூலில் ந்ண்பர்
SekkizharParamparai Sidhayoghi VadapathiAadeenam
29/04/2024 ·
காசியில் திதி கொடுப்பது எப்படி ?
முழுமையாக தந்திருகின்றேன் , பொறுமையாக படித்து பாருங்கள் .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ♂【இதில் உள்ள போட்டோவில் உள்ளது நடுவில் இருப்பவர் எனது அம்மா இரண்டுபக்கம் இருப்பவர் எனது அம்மாவின் தாத்தா பாட்டி எங்கள் வீட்டில் இருக்கும் மிகவும் பழமையான போட்டோ ♂
நமது மூதாதையருக்கு தலைமுறை தாண்டி திதி கொடுக்காமல் அல்லது திதி கொடுக்க மறந்திருந்தால்
வாழ்வில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாமையான ஒரு சூழல் அதாவது காரணமின்றி தொடர் நஷ்டங்களும், கஷ்டங்களும் வந்து அதனை சரி செய்யமுடியாத நிலையும் ஏற்படும்.
இந்த நிலை அவரவர் வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் பல்வேறு, மாறுபட்ட, வெவ்வேறு விஷயங்களாக வெளிப்படும்.
இதனை பித்ரு தோஷம், பித்ரு சாந்தி என்று சொல்வார்கள்.
திதி என்பது மூதாதையரின் ஆன்மா சாந்தி அடைய மூதாதையரின் (இறந்தபின் எரித்த) சாம்பலை வைத்து கொடுக்கபடுவது.
இப்போது ஒருவர் தனது மூதாதையருக்கு திதி கொடுக்க எண்ணுகிறார். அவருக்கு அவரது மூதாதையரின் சாம்பல் எங்கிருந்து கிடைக்கும். ?
இறந்து பல வருடங்கள் கழிந்த பின் எங்கே போவது சாம்பலுக்கு ?
அதனால் அவர் காசி யாத்திரை புறப்படும் நாளுக்கு பத்து நாட்கள் முன்னதாக ராமேஸ்வரம் செல்ல வேண்டும்.
அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் ஒரு ஐயரிடம் சென்று அவரிடம்,
ஐயா, நான் காசிக்கு சென்று எனது மூதாதையருக்கு திதி கொடுக்கப் போகிறேன், எனக்கு மூதாதையரின் சாம்பல் வேண்டும்
அதனால் இங்கு அவர்களுக்கு திதி கொடுத்து மண் வாங்க வந்துள்ளேன் என்று சொல்லி திதி தர வேண்டும்.
அவர்கள் சம்பிரதாயப்படி எல்லாம் செய்து அக்னி தீர்த்தக் கடலிலிருந்து மூன்று கை மண் எடுத்து அதனை ஒன்றாக்கி
பிறகு அதனை மூன்று சம பாகமாக்கி ஒன்று மகாவிஷ்ணு, ஒன்று மகாசிவன், ஒன்று நமது மூதாதையர் என பிரித்து
அதற்கு பூஜை செய்து மகாவிஷ்ணு, சிவன் எனும் இரு பாகங்களை அங்கேயே அக்னி தீர்த்தத்திலேயே விட்டு விட்டு நமது மூதாதையர் பாகமான மணலை மட்டும் ஒரு துணியில் நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்.
இந்த மணலை வீட்டுக்கு கொண்டு சென்று காசிக்கு புறப்படும் நாள்வரை மலர் (பூ) வைத்து பூஜை செய்யவேண்டும்.
இந்த நாட்களில் உறவினர் இறந்தால் இருப்பது போல துக்கம் அனுஷ்டிக்கவேண்டும்.
இந்த மணல் காய்ந்தபின் பார்த்தால் இடுகாட்டு சாம்பலுக்கு சற்றும் மாறாமல் இருக்கும்.
. காசி யாத்திரை தொடங்கும் நாளில் நீங்கள் திதி கொடுக்க இருக்கும் நாளின் நட்சத்திரம், திதி, நாம் திதி கொடுக்க இருப்பவர் பெயர், அவருக்கு நாம் என்ன உறவு என்பது போன்ற விபரங்களுடன்
இந்த மணல், தேன் 50Ml , பச்சரிசி மாவு 250g, எள் Rs.3.00 ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளவும்.
இப்போது நாம் திதி கொடுக்க தயார்.
முதலில் அலகாபாத் செல்ல வேண்டும் அங்குள்ள த்ரிவேணி சங்கமத்தில்தான் இந்த மணலை விடவேண்டும்.
திதி கொடுப்பவர் இங்கே முடியை எடுத்துக்கொள்ளவேண்டும்.
(மொட்டையடித்துக் கொள்ளவேண்டும்).
பின்னர் குளித்து விபூதி சந்தனம் பூசிக்கொண்டு ஒரு படகில் ஏறி கங்கை,யமுனா,சரஸ்வதி சங்கம இடத்திற்கு சென்று அங்கு மிக ஆழமாக இருக்கும் அதனால் படகுகளை இணைத்துக்கட்டி ஒரு திறந்தவெளி பாத்ரூம் போல அமைத்திருப்பார்கள்.
அங்கே நாம் சென்று இறங்கி இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு அந்த மணலில் கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்டு,
அதில் சிறிது பூவை வைத்து வருடம், மாதம், அன்றைய கிழமை, அன்றைய திதி, அன்றைய நட்சத்திரம், தான் இன்னார் மகன் அல்லது மகள், திதி தருபவருக்கு என்ன உறவு போன்றவைகளை சொல்லி என்னால் கொடுக்கப்படும் இந்த திதியை ஏற்று
அவர்களின் ஆன்மாவை கைலாயத்திற்க்கோ வைகுண்டத்திற்கோ சேர்த்து ஆன்மாவிற்கு விடுதலை தரவேண்டும் தாயே என்றவாறு
அந்த மணலை கையில் ஏந்தி நம் தலையில் வைத்து கங்காதேவி, யமுனாதேவி, சரஸ்வதி தேவியை நினைத்து மனமுருகி வேண்டி அப்படியே நீரில் மூழ்கி விட்டு விடவேண்டும்.
( நம் தலையில் நேரடியாக மணலை வைக்கக்கூடாது, மணல் நம் தலையில் படக்கூடாது, கையில் வைத்து மூடிக் கொள்ளவேண்டும்).
இப்படியே நமது அத்தனை உறவினர்களுக்கும் ஒவ்வொருவராக சொல்லி சொல்லி மணலை த்ரிவேணி சங்கமத்தில் கரைக்க வேண்டும்.
நினைவில் இல்லாதவர்களுக்கும் இறுதியில் எனது வம்சம்,எனது தாயார் வம்சம், எனது தந்தையார் வம்சம் எல்லோருக்கும் என்று சொல்லி விட்டு விடலாம்.
நமக்கு விரோதமான சொந்தமாக இருந்தாலும் இங்கே கோபம் பாராட்டாமல் விரோதம் பாராட்டாமல் கொடுக்கவேண்டும்.
ஆத்மாக்களுக்கு சொந்தமில்லை நாமெல்லோரும் உறவுகளே !!!
எல்லோருக்கும் கொடுத்து முடித்தவுடன் நன்றாக குளித்துவிட்டு படகில் ஏறி இன்னும் கொஞ்சம் நதியின் உள்ளே சென்று ஒரு கேன் அல்லது ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் த்ரிவேணி தீர்த்தம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
அடுத்து நாம் செல்வது வாரனாசி எனப்படும் காசி மாநகரம்.
இரண்டாவது கட்டமாக நமது திதி கொடுக்கும் நிகழ்வில் நாம் இப்போது அலகாபாத்தில் இருந்து சுமார் 220km தொலைவில் இருக்கும் வாரணாசிக்கு வந்துவிட்டோம்.
கங்காதேவி இங்கு ஆர்ப்பரித்து ஆனந்தமாக பாய்ந்து செல்கிறாள். இங்கேதான் பல ஆயிரம் முனிவர்களும் மகரிஷிகளும் தினசரி அரூபமாக வந்து ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசிப்பதாக வாரனாசி க்ஷேத்ர புராணம் கூறுகிறது.
மேலும் எம்பெருமான் சிவன் கேதார்நாத்தில் இருப்பதை காட்டிலும் காசியில் இருப்பதை விரும்புகிறார் என்கிறது.
இங்கே நாம் கங்கையில் ஆனந்தமாக நீராடி (நமது அன்னையின் மடியில் தவழ்வதுபோல்) மகிழ்வுடன் ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசித்து அங்கே சாஷ்ட்டாங்கமாக வீழ்ந்து தண்டனிடவேண்டும். ( நமஸ்கரிக்கவேண்டும் )
அப்போது நாம் “ ஐயனே எனக்கு தெரிந்தவகையில் எனது மூதாதையருக்கு என்னால் ஆன வகையில் திதி தந்துள்ளேன். பெருமான் அதனை ஏற்று எனது மூதாதையரின் ஆன்மாக்களை திருக்கைலாயமோ, ஸ்ரீவைகுண்டமோ எது அவர்களின் இருப்பிடமோ அங்கு சேர்க்க வேண்டும்
என்று மனதில் ஆழமாக சிந்தித்து தண்டனிட வேண்டும் என்பார் பெரியோர்கள்.
இங்கு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருமேனியில்(சிவலிங்கத்தில்) நமது சிரம் வைத்து வணங்கி வேண்டுதல் செய்யலாம்.
இங்கு பார்க்க வேண்டிய கோயில்கள் ஏராளம், ஏராளம். ஸ்ரீ அன்னை அன்னபூரணி, ஸ்ரீ காசி விசாலாட்சி, ஸ்ரீ மகாகால பைரவர் என நிறைய கோயில்கள் உள்ளன.
சந்திரமுகி, அரிச்சந்திரா கட்டம் என நிறைய படித்துறைகள் உண்டு. கங்கை கரை ஓரங்களில் முதலைகள் உண்டு. ஜாக்கிரதை.
அடுத்து நாம் செல்லவேண்டியது கயா எனும் நகரம்.
மூன்றாவதாக நாம் செல்ல இருப்பது கயாசுரன் எனும் அரக்கனால் நமக்கு கிடைத்த “பித்ரு பிண்டார்ப்பன ஸ்தலம்”
இங்கு நாம் ஒரு தமிழ் தெரிந்த ஐயரை பார்த்து பேசிக் கொள்ள வேண்டும். ( இரயில்வே ஸ்டேஷனிலேயே நம்மை அவர்கள் மடக்கி விடுவார்கள்.) நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இல்லையென்றால் காசு கறந்து விடுவார்கள்.
இங்கு பல்குனி எனப்படும் ஆறு ஓடுகிறது. அதில் குளித்து விட்டு வந்து விடவேண்டும். ஐயர் நம்மிடம் எள், பச்சரிசி மாவு, தேன் தந்து அதனை கலக்கி பிசைந்து தயார் செய்ய சொல்வார், நாம் வைத்துள்ள எள், தேன், பச்சரிசி மாவுடன் அதையும் சேர்த்து நிறைய மாவாக்கி அதனை பிசைந்து கொள்ளவேண்டும்.
அதனை மூன்று பாகமாக்கி ஒவ்வொரு பாகத்தையும் முப்பத்திரண்டு சிறு சிறு உருண்டைகளாக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது தனித்தனியாக நம்மிடம் மூன்று முப்பத்திரண்டு உருண்டைகள் உள்ளது.
நாம் நிர்மாணித்த ஐயர் மந்திரங்கள் சொல்லி பூஜைகள் செய்வார்,
பிறகு நம்மிடம் நமக்கு மிகவும் பிடித்த ஒரு இலை, ஒரு காய், ஒரு பழம் இவைகளை நமது மூதாதையருக்காக இனி பயன்படுத்தமாட்டேன் என்று விட்டுவிட சொல்வார்.
சரி என்று நாம் ஏதாவது ஒரு இலை, ஒரு காய், ஒரு பழம் விடவேண்டும். அதனை நாம் என்றுமே உண்ணவே கூடாது.
1. முதல் முப்பத்திரண்டு உருண்டைகளை பல்குனி ஆற்றில் கொஞ்சம் கொஞ்சமாக விடவேண்டும், மீன்களுக்கு உணவாகும்.
2. இரண்டாவது முப்பத்திரண்டு உருண்டைகளை கயாசுரன் மார்பில் மகாவிஷ்ணுவின் ஒரு பாதம் மீது ஒவ்வொரு உருண்டையாக நமது உறவினர்களின் பெயரைச் சொல்லி சொல்லி விட வேண்டும்,
அப்போதும் நாம் “எம்பெருமானே! என்னாலான வகையில் எனது மூதாதையருக்கு திதி தந்துள்ளேன்,
இதனை மனமுவந்து ஏற்று அவர்களின் ஆன்மாவை திருக்கைலாயமோ, ஸ்ரீவைகுண்டமோ அங்கு அழைத்துச் செல்வாயாக”
என்று மனமுருக வேண்டிக் கொண்டே ஒவ்வொன்றாக அந்த திருவடியின் மீது விடவேண்டும்.
3. மூன்றாவது முப்பத்திரண்டு உருண்டைகள் கோயிலுள்ளே இருக்கும் ஆலமரத்தின் வேர்களில் இடவேண்டும்.
(இந்த ஆலமரத்தின் வேர்பகுதி அலகாபாத்திலும், நடுப்பகுதி ஸ்ரீகாசியம்பதியிலும் , கடைசிப்பகுதி (கயாவழியாக - கயாசுரன் வேண்டுதல்படி- படிக்க : கயாசுரன்-கதை) இறைவனாரின் தோட்டத்திலும் இருப்பதாகவும் நமது மூதாதையரின் ஆன்மாக்கள் எல்லாம் அந்த மரத்தின் விழுதினைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் இங்கே தரும் திதியைப் பருகி மேலேறுவதாகவும் ஐதீகம்.
நாம் திதி தரமறந்தாலோ, தராமல் இருந்தாலோ அவர்களால் கீழேயேதான் இருக்கமுடியும், மேலேறும் மற்ற ஆன்மாக்களைப் பார்த்து அழுதுகொண்டிருப்பர்கள்,
இங்கே அவர்கள் அழ அழ நாம் அங்கே மிகுந்த கஷ்டங்களுக்கு ஆளாவோம் என்பார்கள், அந்த ஆன்மாக்களின் உறவுகளின் வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் உடனே இவனாவது நமக்கு திதி தந்து மேலேற்றுவானா என்று எண்ணுவார்களாம்.
நாம் இப்படி திதி கொடுப்பதனால் அவர்கள் உடனே மரத்தின் உச்சிக்கு சென்று தங்களின் இருப்பிடம் சேர்ந்து விடுவதாக ஐதீகம்.
இதனை
அலகாபாத்தில் முண்டம் (முடிஎடுத்தல் ) காசியில் தண்டம் (சுவாமியை தண்டனிடுதல்)
கயாவில் பிண்டம்
(பிண்டார்ப்பணம் செய்தல் ) என்பார்கள்.
பின்னர் அங்குள்ள ஒரு ஐயரை அழைத்து நாம் நிர்மாணித்த ஐயர் கேட்பார் “ இவர்களின் மூதாதையர் சொர்க்கம் சென்று விட்டார்களா? அவர்கள், ஆம், சென்று விட்டார்கள்,
நமது ஐயர், அவர்கள் இவர்களின் செய்கையினால் சந்தோஷப்பட்டார்களா? அவர்கள், ஆம், மிகவும் சந்தோஷப்பட்டார்கள்,
நமது ஐயர், சரி, இவர்களை ஆசீர்வதியுங்கள்.
அந்த ஐயர், உங்கள் உறவினர்கள் சார்பில் உங்களை ஆசிர்வதிக்கிறேன்,
உங்கள் செய்கையினால் அவர்கள் மிக சந்தோஷம் அடைந்து சொர்க்கம் சென்றார்கள்.
உங்களுக்கு ஆசீர்வாதம், இனி நன்றாக இருங்கள், என்று சொல்வார்கள் . இதற்கு “சொஸ்தி சொல்வது” என்பார்கள்.
அடுத்தது நாம் செல்ல இருப்பது இராமேஸ்வரம்.
நாம் அடுத்து மீண்டும் இராமேஸ்வரம் வரவேண்டும்,
இராமேஸ்வரம் வந்து நாம் அலகாபாத்தில் நாம் எடுத்த தீர்த்தத்தை கோயிலில் கங்கா அபிஷேகம் என்று சொல்லி இரசீது போட்டு அதனை இங்குள்ள கோயில் ஐயரிடம் தரவேண்டும்,
அவர் உங்களை உள்ளே அமரச்செய்து உங்கள் கங்கை நீரினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதை நீங்கள் காணச்செய்வார்.
அப்போது நீங்கள் “ ஐயனே என் அறிவுக்கு தெரிந்தவாறு எனது மூதாதையருக்கு திதி தந்துள்ளேன், அதனை ஏற்று அவர்களை நின் மலர்ப்பதத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று மனமுருகி வேண்டிக் கொள்ளவேண்டும்.
பின்னர் அங்கே வரும் கோடித் தீர்த்தம் பிடித்து வந்து வீட்டில் எல்லோருக்கும் தரவேண்டும்.
வீட்டிலும் வைத்துக்கொள்ளலாம். காசியிலும் கங்காதீர்த்தம் பிடித்து வந்து வைத்துக் கொள்ளலாம். கங்காதீர்த்தம் வீட்டில் இருப்பது நன்றாகும்.
இப்படியாக இராமேஸ்வரத்தில் துவங்கி இராமேஸ்வரத்திலமுடிகிறது
மூதாதையருக்கு திதி தரும் காசி யாத்திரை.
ஸ்ரீஅலகாபாத், ஸ்ரீகாசி மாநகரம், ஸ்ரீகயா நகரம் இங்கெல்லாம் மலர்கள் மணப்பதில்லை, காகம், பல்லிகள் சப்தமெழுப்புவது இல்லை, மாடுகள் முட்டுவதில்லை, பிணம் எரியும் வாடை வருவதில்லை.
காரணம் என்ன ? அங்கு லட்சோப லட்சம் முனிவர்களும் ரிஷி பெருமக்களும் தவமியற்றிகொண்டே இருக்கின்றார்கள்.
அவர்களின் தவம் கலைந்து விடக்கூடாதென்று எண்ணியே எம்பெருமான் கருணை கொண்டு அருளியதே காரணம்.
காசி யாத்திரை செல்லுங்கள், மூதாதையருக்கு திதி கொடுங்கள். அவர்களின் ஆத்மாவை சாந்தப்படுத்தி நீங்கள் சந்தோஷமாகுங்கள் ,
உங்கள் சந்ததிகளுக்கும் நல்வழிஅமைத்துக்கொடுங்கள் .
வளமோடு வாழுங்கள் வாழும் நாளெல்லாம்.
செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022
ஆவணி 27 (12.09.2022) குருவருளைப் போற்றுவோம்
நாம் ஆயிரத்தில் ஒருவரல்ல, கோடியிலும் ஒருவரல்ல, கோடனுகோடியில் ஒருவர் என்பதை உணர்வோம். நமக்கு இந்தப் பேற்றினை நல்கிய குருவருளைப் போற்றுதல் செய்வோம். வரும் ஆவணி 27 (12.09.021) ஞாயிற்றுக் கிழமையன்று வலையபட்டியில் ஒன்றுகூடி, யாத்திரை மீண்டும் தொடர குருவிடமும் தெய்வங்களிடமும் வேண்டுதல் செய்வோம்.
அண்டத்தில் வேறெங்கும் உயிர்கள் இருப்பதாக இதுநாள்வரை அறியப்பெற வில்லை.
இந்தப் பூமியில் மட்டுமே உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து வருகின்றன. உலகில் தோன்றியுள்ள உயிரினங்களில் மனிதன் மட்டும் அறிவினால் உயர்ந்துள்ளான்.
இவ்வாறு உயர்ந்துள்ள மனிதருள்ளும் கடவுளை அறிந்து வணங்கி வாழுவோராகப் புன்னிய பாரதநாட்டின் மக்கள் உள்ளனர்.
பாரத நாட்டிலுள்ள மக்கள் பலகாலமாக இராமேசுவரத்திற்கும் காசிக்கும் பாதயாத்திரையாகச் சென்று வழிபட்டு வருகின்றனர்.
அவ்வகையில் இராமேசுவரத்திலிருந்து காசிக்குப் பாதயாத்திரையாகச் சென்றுள்ளார் காஞ்சி மகாப் பெரியவர்.
மகாப் பெரியவர் பாதயாத்திரை சென்ற வழித்தடத்தில் வலையபட்டிச் சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களும் 12 முறை பாதயாத்திரை சென்று அருள்மிகு காசிவிசுவநாதரை வணங்கி அருள்பெற்றுள்ளார்.
இவர் பாதயாத்திரையாகச் செல்லும் போது, ஒவ்வொரு வருடமும் குறைந்தது 20 அடியார்களை எவ்விதமான கட்டணமும் இல்லாமல், உணவு உடை மற்றும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துத் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் நற்கருணையினால், நாமும் அவருடன் இராமேசுவரம் - காசி புனித பாதயாத்திரை சென்று அருள்மிகு காசிவிசுவநாதரை 12.09.2014 அன்று வணங்கும் பேறு பெற்றுள்ளோம். காசிஸ்ரீ என்ற பட்டமும் பெற்றுள்ளோம்.
மேலும் அறுபடைவீடுகளுக்கும் 60 நாட்கள் பாதயாத்திரையாகச் சென்று எம்பெருமான் முருகப்பெருமானிள் திருவருளையும் பெற்றுள்ளோம்.
உலகில் வாழும் கோடானகோடி மனிதர்களில் இப்பேற்றினைப் பெற்றவர்கள் நம்மைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?
பெறற்கரிய இந்தப் பேற்றினைப் பெற்றுள்ள நாம், அதைப் போற்றும் வகையில் சென்ற வருடத்தைப் போன்றே இந்த வருடமும், வரும் ஆவணி 27 (12.09.2022) திங்கள் கிழமையன்று வலையபட்டியில் ஒன்றுகூடிக், கோயிலில் வழிபாடு செய்து, சித்தர் ஐயா அவர்களின் அருளாசியைப் பெறுவோம்.
இதற்கு முதல்நாள் ஆவணி 26 (11.09.2022) ஞாயிற்றுக் கிழமை இரவே வலையபட்டிக்கு வந்து சேர்பவர்கள் தங்குவதற்கான வசதிகளையும் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் செய்துள்ளார்கள்.
பாதயாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் வருக, திருவருளும் குருவருளும் பெருக.
ஆறுபடைவீடு ஆறாவது முறை நிறைவு பாதயாத்திரை 2023இல் சிறப்பாக நடைபெற குருவிடமும் தெய்வங்களிடமும் வேண்டுதல் செய்வோம்.
அடியேன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்
செவ்வாய், 8 பிப்ரவரி, 2022
12.09.2021 வலையபட்டியில் ஒன்றுகூடி
வெள்ளி, 8 அக்டோபர், 2021
சித்தண்ணவாயில், அண்ணல் கோயில்
வியாழன், 7 அக்டோபர், 2021
09.10.2014 காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு - 137 ஆம் நாள், புரட்டாசி 23
இராமேசுவரம் காசி பாதயாத்திரை -
இன்று 137 ஆம் நாள், புரட்டாசி 23 (09.10.2014)
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014 அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம். காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.
புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து சாலைவழியாக இராமேசுவரம் வந்து சேர்ந்தார்கள்.
நேற்று முன்தினம் 07.10.2014 இராமேசுவரத்தில் குருசாமி பச்சைக்காவடி ஐயா அவர்கள் காசிஸ்ரீ சரவணன் அவர்களையும், காசிஸ்ரீ காளைராசன் அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு, அருள்மிகு பர்வதவர்த்தினி உடனாய இராமநாதசுவாமிக்குக் கங்காதீர்த்த அபிஷேகம் செய்து, இராமேசுவரம் - காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு செய்தார்.
நேற்று 08.10.2014 பிள்ளையார்பட்டியில் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்துகொண்டார். காசிஸ்ரீ சின்னக்கருப்பன் செட்டியார் மற்றும் அடியார்கள் பலரும் கலந்து கொண்டர்.
இன்று 09.10.2014 அன்று பொன்னமராவதி வலையபட்டியில் குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மலையாண்டி கோயிலில் வழிபாடு செய்து கொண்டார். இத்துடன் இராமேசுவரம் காசி பாதயாத்திரையும், அதன் தொடர்ச்சியான அனைத்து வழிபாடுகளும் நிறைவுற்றன.
மெய்யன்பர் அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு கற்பகவிநாயகர், அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
08.10.2014 காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு - 136 ஆம் நாள், புரட்டாசி 22
இன்று 136 ஆம் நாள், புரட்டாசி 22 (08.10.2014)
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014 அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம். காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.
புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து சாலைவழியாகப் புறப்பட்டு,
நேற்று 07.10.2014 இராமேசுவரம் வந்து சேர்ந்தனர்.
நேற்று மதியம் குருசாமி பச்சைக்காவடி ஐயா அவர்கள் காசிஸ்ரீ சரவணன் அவர்களையும், காசிஸ்ரீ காளைராசன் அவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு, அருள்மிகு பர்வதவர்த்தினி உடனாய இராமநாதசுவாமிக்குக் கங்காதீர்த்த அபிஷேகம் செய்து, இராமேசுவரம் - காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு செய்தார்.
வழிபாடு முடிந்தபின்னர் காசிஸ்ரீ சரவணன் அவர்கள் இராமேசுவரத்திலிருந்து அவரது ஊருக்குப் பயணம் ஆனார். குருசாமி பச்சைக்காவடி அவர்களும் காசிஸ்ரீ காளைராசன் அவர்களும் அன்னதானவண்டியில் இராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு கோட்டையூர் வந்து தங்கியிருந்தனர்.
இன்று 136 ஆம் நாள் - புரட்டாசி 22 (08.10.2014)
2014 ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை நிறைவு. பிள்ளையார்பட்டியில் அபிஷேகம் மற்றும் வழிபாடு.
காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களும் மற்றும் அடியார்கள் பலரும் வந்திருந்தனர்.
மெய்யன்பர் அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு கற்பகவிநாயகர், அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
புதன், 6 அக்டோபர், 2021
07.10.2014 காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு - 135 ஆம் நாள், புரட்டாசி 21
இன்று 135 ஆம் நாள், புரட்டாசி 21 (07.10.2014)
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014 அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம். காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.
புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை - குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து சாலைவழியாக இராமேசுவரத்திற்குப் புறப்பட்டனர். இரவு 9.00 மணிக்குக் காசி-இராமேசுவரம் தொடர்வண்டியில் யாத்திரிகர்கள் அனைவரும் இராமேசுவரத்திற்குப் புறப்பட்டனர்.
பாதயாத்திரை நடைபெற்றபோது, வழி நெடுகிலும் யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி கொண்டு, அன்னதான வண்டியில் காசியிலிருந்து இராமேசுவரத்திற்குக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் வந்து கொண்டிருந்தார். அவருடன் காசிஸ்ரீ சரவணன் அவர்களும் வந்து கொண்டிருந்தார்.
இன்று 135 ஆம் நாள், புரட்டாசி 21 (07.10.2014) காசி பாதயாத்திரை நிறைவு வழிபாடு -
இராமேசுவரத்தில் 07.10.2014 அன்று குருசாமி பச்சைக்காவடி அவர்களும் காசிஸ்ரீ சரவணன் அவர்களும், காசிஸ்ரீ காளைராசன் அவர்களும் கங்காதீர்த்தம் அபிஷேகம் செய்து இராமநாதசுவாமியையும் பர்வதவர்த்தனி அம்பாளையும் வழிபாடு செய்து கொண்டனர்.

இராமேசுவரம் - காசி பாதயாத்திரையைத் தொடங்கிட இராமேசுவரம் செல்லும் வழியில் தேவகோட்டையில் எடுத்த படம் இது.
மெய்யன்பர் அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்








%20of%20ramar%20a%20Iran1.jpg)































