அறுபடைவீடு பாதயாத்திரை,
மணப்பாறை,
துன்முகி சித்திரை 24 (07.05.2016)
குருசாமி பச்சைக் காவடி அவர்களது தலைமையில் அறுபடைவீடு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தோம். பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழநி ஆகிய நான்கு தலங்களில் வழிபாட்டை முடித்துக் கொண்டு சுவாமிமலை சென்று கொண்டிருந்தோம்.
கடந்த துன்முகி சித்திரை - 24 (07.05.2016) சனிக் கிழமை
இன்று அதிகாலை 02.30 மணிக்கு அய்யலூரில் இருந்து புறப்பட்டு 25 கி.மீ. பயணத்தில் காலை 09.00 மணிக்கு ஆலத்தூர்கேட் வந்து தங்கினோம்.
இங்கு காவல் ஆய்வாளர் ஒருவர் வீட்டில் தங்கினோம். காசிஸ்ரீ அங்கமுத்து சாமி அவர்களின் நண்பர் ஆவிக்காரப்பட்டி திரு. அருண் அவர்கள் இந்த இடத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.
இன்றும் கடுமையான வெயில். ஆங்காங்கே மேகங்கள் தெரிந்தன. இன்னும் ஓரிருநாட்களில் ஆங்காங்கே மழை வரக்கூடும் என எதிர்பார்த்தோம்.
வழியில் அன்பர் ஒருவர் குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்று விபூதி பிரசாதம் வாங்கிக் கொண்டார்.
அருள்நிறைந்தோர் கட்டிய கோயில்கள் பல பொருள் நிறைந்தோர் வேகமாகச் செல்ல வேண்டி இடித்துத் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டு மனம் வருந்தினேன்.
காலை 07.00 மணிக்கு ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம். மாலையில் மஞ்சம்பட்டி அருகே ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.
இன்று மாலை 04.30 மணிக்கு ஆலத்தூர் கேட்டில் இருந்து புறப்பட்டு 9 கி.மீ. தூரம் நடந்து மாலை 06.30 மணிக்கு மணப்பாறையில் இருக்கும் மெட்ராஸ் மெடிக்கல்ஸ் கடையை அடைந்தோம். அங்கு மணப்ரை நகரத்தார்கள் வந்து பச்சைக்காவடி சாமியை வரவேற்றார்கள். பின் யாத்திரிகர் அனைவரும் மணப்பாரை நகர விடுதியை அடைந்து அங்கு தங்கினோம்.
நகரவிடுதியினர் யாத்திரிகர் அனைவரையும் அன்புடன் துண்டு போர்த்தி மரியாதை செய்து வரவேற்றுத் தங்க வைத்து உணவு அளித்து உபசரித்தனர். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் நகரத்தார்களுக்கு அருளாசிகள் வழங்கினார்.
இந்த நகர விடுதியை காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.
சிவன்கோயிலுக்கு அருகிலேயே நகரவிடுதி இருந்தது. யாத்திரிகர் சிலர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து வந்தனர்.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
சிவன்கோயிலுக்கு அருகிலேயே நகரவிடுதி இருந்தது. யாத்திரிகர் சிலர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து வந்தனர்.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக