புதன், 9 ஜனவரி, 2019

25/05/2016, உத்தரமேரூர், சுந்தரவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

உத்தரமேரூர்
அருள்மிகு சுந்தரவரதராஜப் பெருமாள் திருக்கோயில்



















25/05/2016 அன்று வழிபாடு.
உத்தரமேரூர் அருள்மிகு சுந்தரவரதராஜப் பெருமாள் திருக்கோயில். மிகவும் தொன்மையான கோயில். கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. அறுபடைவீடு பாதயாத்திரை, பிள்ளையார்பட்டியிலிருந்து புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களில் வழிபாடு செய்து கொண்டோம். சுவாமிமலையிலிருந்து வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் கடலூர் பாண்டிச்சேரி வழியாகத் திருத்தணிகை செல்லும் வழியில் இன்று உத்தரமேரூர் அருள்மிகு நூக்கலம்மன் கோயிலில் வந்து தங்கினோம்.
மாலைநேரத்தில் உத்திரமேரூர் அருள்மிகு கைலாசநாதர் சிவன்கோயிலுக்கும், அருள்மிகு வைகுண்டப் பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபாடு செய்துமுடித்து, அருள்மிகு சுந்தரவரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வந்து வழிபட்டோம்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக