திருவையாறு
தாம்பூல சித்தர் ஜீவசமாதி
காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும் அவருடன் 20 அடியார்களும் அறுபடைவீடு பாதயாத்திரை மேற்கொண்டிருந்தோம். பிள்ளையார்பட்டியில் தொடங்கி, பழமுதிர்சோலை (அழகர்கோயில்) திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி ஆகிய நான்கு திருத்தலங்களிலும் வழிபாடு செய்து கொண்டோம். பழனியில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் வழியில் இன்று 12.05.2016 காலை திருவையாறு வந்து சேர்ந்தோம். திருவையாற்றில் சாலையோரம் உள்ள அருள்மிகு தாம்பூலசித்தர் சீவசமாதியில் வழிபாடு செய்து கொண்டோம்.
பேருந்துநிலையம் எதிரில் உள்ள சி.நா.சத்திரத்தில் தங்கினோம். மாலைநேரத்தில் அருள்மிகு ஐயாறப்பர் கோயில் வழிபாடு செய்து கொண்டோம்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக