உத்தரமேரூர் முருகன்கோயில்
25/05/2016 அன்று வழிபாடு.
மிகவும் தொன்மையான முருகன் கோயில். ஒரு சிறு குன்றின்மீது கோயில் உள்ளது. பிரளயத்தில் ஏற்பட்ட பெருஞ் சுனாமியினால் நிலப்பகுதி மேடாக மாறிய காரணத்தினால் ஒரு சிறு பாறைமட்டுமே இப்போது வெளியில் தெரிகிறது. முருகனுக்கு யானை வாகனம்.
உத்தரமேரூர் அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில். மிகவும் தொன்மையான கோயில். கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன.
அறுபடைவீடு பாதயாத்திரை, பிள்ளையார்பட்டியிலிருந்து புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களில் வழிபாடு செய்து கொண்டோம். சுவாமிமலையிலிருந்து வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் கடலூர் பாண்டிச்சேரி வழியாகத் திருத்தணிகை செல்லும் வழியில் இன்று உத்தரமேரூர் அருள்மிகு நூக்கலம்மன் கோயிலில் வந்து தங்கினோம். மாலைநேரத்தில் உத்திரமேரூர் அருள்மிகு கைலாசநாதர் சிவன்கோயில், அருள்மிகு வைகுண்டப் பெருமாள் கோயில், அருள்மிகு சுந்தரவரராஜப் பெருமாள் கோயில்களில் வழிபாடு செய்து முடித்து, அருள்மிகு கோயிலுக்கு வந்து வழிபட்டோம்.
கூகுள் புவிப்படத்தில் https://goo.gl/maps/esW6DWKQjD62
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக