வலையன்குளம் பெருமாள் கோயில்
எல்லாச் சமூகத்தாரும் ஒன்றாய் வணங்கும் கோயில்.
திருவிழாவின் தொடர்ச்சியாக 60 நாட்களுக்கும் மேலாக தினமும் நாடகம் நடத்தி வழிபடும் கோயில்.
கோயில் வளாகத்திற்குள் யாரும் காலணி அணிந்து செல்லக் கூடாது எனக் கிராமத்தினரால் கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ள கோயில்.
பெண்கள் கோயில் வாலிலேயே நின்று வழிபடும் கோயில்.
மூலவரோ சுயம்பு.
பெயரோ பெருமாள் கோயில்.
விபூதி பிரசாதம்.
வில்வம் தீர்த்தம்.
தேவியர் இல்லாத மூலவர்.
பரிவார தெய்வங்கள் ஏதும் இல்லாத கோயில்.
ஊரார் ஒன்று சேர்ந்து நடத்தும் அன்னதானம்.
உயிர்பலி இல்லாத வழிபாடு.
மதுரை விமானநிலையம் அருகில் உள்ளது வலையங்குளம் அருள்மிகு பெருமாள் கோயில்.
சாதியின் பெயரால் சண்டைகளை வளர்க்கும் பகுத்தறிவாளர்களும், கடவுளை நம்பும் காட்டுமிராண்டிகளும் அவசியம் வழிபடவேண்டிய கோயில்.
அறுபடைவீடு பாதயாத்திரை, பிள்ளையார்பட்டியிலிருந்து பாதயாத்திரை புறப்பட்டு, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களிலும் வழிபாடு செய்து கொண்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் 01.07.2017 அன்று இங்கே உள்ள சமுதாயக்கூடத்தில் தங்கியிருந்து கோயில்வழிபாடு செய்து கொண்டோம்.
வலையங்குளம் திரு.மாரியப்பன் செட்டியார் அவர்களும், நகைக்கடை வைத்திருக்கும் நகரத்தார் அன்பர் ஒருவரும் அடியார்களை அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.
அன்பன்
காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன்