காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று 30.08.2014 டியோரி என்ற ஊருக்கு வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.
இன்று 98 ஆம் நாள் - 31.08.2014 ஆவணி 15
தினவழிபாட்டை முடித்துக் கொண்டு 3.15 க்கு டியோரி (Teori) என்ற ஊரில் இருந்துயாத்திரயை தொடர்ந்தோம். பெப்ரான் என்ற ஊர் வழியாக 7.30 க்கு கட்னி என்ற ஊர் வந்து சேர்ந்தோம்.
காலை 6.50 க்கு வெயில் கடுமை. வறட்சியான வானிலை.
வழியில் தேநீர்.
இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் வந்து வணங்கிச் சென்றனர்.
தேநீர் முடிந்து செல்லும் போது பெரிய மாமரம் ஒன்றில் செம்பூத்து பறவையின் குரல் கேட்டு வணங்கிக் கொண்டார். ஆனால் பறவையைப் பார்க்க இயலவில்லை.
இந்தப் பறவையைப் பார்ப்பதும் இதன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனம் என்று கூறினார்.
சாலையோரம் சிறிது நேரம் நின்று, பெரிதும் முயன்று அந்தப் பறவையைத் தேடிப் பார்த்தார். ஆனால் அந்தப் பறவையைப் பார்க்க இயலவில்லை.
குருஜி கைது கூப்பி வேண்டிக் கொண்டு நடக்கத் துவங்கினார்.
அந்நேரத்தில் செம்பூத்து பறவை அடர்த்தியான அந்த மாமரத்திலிருந்து குருஜி யின் தலைக்கு மேலே பறந்து சென்றது. குருஜி அதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்து மீண்டும் வணங்கிக் கொண்டார்.
கட்னியில் உள்ள குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அன்பர் ஒருவர் அவரது நண்பர் ஒருவருடன் ஊர் எல்லையில் நின்று குருஜியின் பாதம் பணிந்து யாத்திரிகர்களை வரவேற்று உடன் அழைத்து சென்றார்.
வழியில் மான்கள் சரணாலயம் ஒன்று இருந்தது.
அன்பரின் திருமண மண்டபத்தை யாத்திரிகர் அடைந்தவுடன் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்து வரவேற்றார்.
தலைமைச் சமையல்காரர், துணைச் சமையல்காரர், சமையல் உதவியாளர் ஆகிய மூவருக்கும் மாலை மரியாதை செய்து வரவேற்றனர்.
அன்னதானவண்டி யின் வாகன ஓட்டுநருக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்து வரவேற்றனர்.
காலை உணவு.
தங்கல்.
ஓய்வு.
இன்றைய பயண தூரம் சுமார் 18 கி.மீ.
https://goo.gl/maps/RQijwB4ujmmmxbGd6
இங்கிருந்து காசி 371 கி.மீ. தூரத்தில் உள்ளது.
நாளை ஓய்வு.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்