செவ்வாய், 30 ஜூன், 2020

01.07.2017 பயணக் கட்டுரை - அறுபடைவீடு பாதயாத்திரை - 24ஆவது நாள், ஆனி 17

பயணக் கட்டுரை - அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று  24ஆவது நாள், ஆனி 17 (01.07.2017) சனிக் கிழமை.
பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பகவிநாயகரை வழிபட்டு பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை, 2) திருப்பரங்குன்றம், 3) திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களில் வழிபாடு செய்துவிட்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் நேற்று கல்குறிச்சி வந்து சேர்ந்து இருந்தோம்.

வெயில் கடுமையாக இருக்கின்ற காரணத்தால் வெயிலுக்கு முந்திப் பாதயாத்திரை சென்று விடவேண்டும் என்று யாத்திரிகர்கள் கருதினார்.  எனவே கல்குறிச்சியில் இருந்து இன்று அதிகாலை மணி 2:10 க்கு வழக்கமான தினசரி வழிபாட்டிற்குப் பின்னர் ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு யாத்திரை புறப்பட்டோம்.  



பாரபத்தி பெருமாள் கோயில் வளாகத்தில் காலை மணி 6.40 மணிக்கு ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.

கோயில் வளாகத்தில் இளவட்டக்கல் மூன்று கிடந்தன.  கோயில் வளாகத்தை மிகவும் சுத்தமாக வைத்திருந்தனர்.





எலியார்பத்தி வழியாகக் காலை 8.00 மணிக்கு வலையன்குளம் சமுதாயக்கூடம் வந்து சேர்ந்தோம் .
வலையங்குளம் அன்பர்கள் திரு. மாரியப்பன் அவர்களும், திரு. பழனியப்பன் அவர்களும் யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்தனர்.
வலையங்குளம் சமுதாயக்கூடத்தில் தங்கல் .
காலை உணவு.
ஓய்வு .


மாலை மணி 5.30 அளவில் அன்பர் திரு பழனியப்பன் அவர்களின் அழைப்பின் பேரில் குருசாமி அவர்கள் 7 யாத்திரிகர்களை அழைத்துக் கொண்டு அவரது இல்லத்திற்குச் சென்றார்.
அங்கே யாத்திரிகர்களுக்குப் பாதபூஜை செய்து பொன்னாடை போர்த்தி மலர்தூவி வரவேற்றனர் .  ரெட்டியும் தேநீரும் வழங்கி உபசரித்தனர்.  அவர்களது இல்லத்தில் குருசாமி அவர்கள் வழிபாடு செய்து அந்தக் குடும்பத்தினரை ஆசிர்வதித்தார்.

மாலை மணி 6.15 அளவில் யாத்திரிகர் பலரும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டோம்.  ஊரார் மிகவும் பயபக்தியுடன் இங்கே வழிபாடு செய்கின்றனர்.  கோயில் எல்லையில் அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர்.  இந்தக் கோயில் வளாக எல்லையில்கூட  யாரும் செருப்பு அணிந்து செல்வதில்லை.   கோயிலுக்குள்ளே பெண்கள் செல்லவதில்லை.  சிவலிங்க வடிவில் பெருமாளை எழுந்தருளி யுள்ளார். https://temples-kalairajan.blogspot.com/2018/07/blog-post.html  மதுரை - அருப்புக்கோட்டை சாலை வழியாகத் தூத்துக்குடி திருச்செந்தூர் மற்றும் பிற ஊர்களுக்குப் பயணம் செல்வோர் அவசியம் வணக்கிச் செல்ல வேண்டிய கோயில்.


https://goo.gl/maps/EBYpho3iEbKGk98T8
இன்றைய பயணம் சுமார் 24 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்





01.07.2014 காசி பாதயாத்திரை - 37ஆம் நாள் - ஆனி 17

இராமேசுவரம் - காசி பாதயாத்திரை - 
பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இன்று 37ஆம் நாள் - ஆனி 17 (01.07.2014) செவ்வாய்க் கிழமை.
26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று 30.06.2014 திப்புசுல்தான் பிறந்த ஊரான தேவனஹள்ளி வந்து சேர்ந்தோம்.  இன்று காலை 3.10 மணிக்குத் தினசரி வழிபாடு முடிந்தவுடன் ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுத் தேவனஹள்ளியில் இருந்து பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.

5.28 am
5.44 am
5.54 am
காலை மணி 6.00 அளவில் முதுகுர்கி என்ற ஊரைக் கடந்து சென்றோம்.  முதுகுர்கி (Mudugurki) என்றால் முதுமையான மலை என்ற பொருளாகுமா?

"விருத்த' என்றால் "முதுமை' என்றும், "அசலம்' என்றால் "மலை' என்றும் பொருள்படும். முதுமையான மலை உள்ள காரணத்தினால்  ஊருக்கு “விருத்தாச்சலம்” என்ற காரணப் பெயர் உண்டாகியது என்பர்.  விருத்தாச்சலம் போன்று முதுகுர்கி என்பதும் முதுமையான மலையைக் குறிக்குமோ?  என்ற சிந்தனையுடன் நடந்து சென்றேன்.

6.23 am
வரும் வழியில் மேற்கே தெரிந்த நந்தி மலையைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.

6.50 am
காலை மணி 6.50 அளவில் சாலையோரம் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம்.

7.10 am
7.38 am

7.47 am

7.51 am

8.21 am
எலவாஹள்ளிவழியாக சிக்பலப்பூர் 8.20 க்கு வந்து சேர்ந்தோம்.  சிக்பலப்பூரில் அழகழகாக மண்பொம்மைகள் செய்து விற்பனைக்கு வைத்திருந்தனர்.


சிக்பலப்பூர் ஐயப்பன்  அடியார்கள்  கோயில் வாயிலில்  நின்று வரவேற்பு அளித்தார்கள்.
காலை உணவு.
திரு.K. நாகேஷ் தலைமையில் ஐயப்பன் பக்தர்கள் மதியம் அன்னதானம் வழங்கினர்.
(Rameswaram to Varanasi Patha Yathra, Swamy PatchaiKavadi with Sri.Gopal Swamy,  and Sri. Raghavendra of Sri Ayyappa Swamy Seva Trust, B.B.Road, Chickbalapur, 562 1015)

ஒய்வு.
இன்றைய பயணம் சுமார் 21 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

திங்கள், 29 ஜூன், 2020

30.06.2014 காசி பாதயாத்திரை - 36ஆம் நாள் - ஆனி 16

இராமேசுவரம் - காசி பாதயாத்திரை - 
பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு பாதயாத்திரை - 110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்.
இன்று 36ஆம் நாள் - ஆனி 16 (30.06.2014) திங்கள் கிழமை.

26.05.2014 அன்று இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 27.06.2014 அன்று பெங்களூரு எலகங்கா  ஐயப்பன் கோயிலுக்கு வந்து  சேர்ந்தோம்.  நேற்று முன்தினமும் நேற்றும் இங்கேயே தங்கி யிருந்தோம்.

இன்று காலை தினசரி வழிபாடு முடிந்தவுடன் ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுப் பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.

6.50 am
6.49 am
7.01 am

7.03 am
7.12 am

7.39 am

8.03 am

8.38 am
9.30 am

9.45 am
காசி பாதயாத்திரை
9.46 am

காசி பாதயாத்திரை
9.49 am
ஊருக்குள் நுழைந்ததும் திப்புசுல்தான் பிறந்த இடம் இருந்தது.

காசி பாதயாத்திரை
9.51 am

காசி பாதயாத்திரை
9.53 am
வழியில் மிகப்பெரிய ஆஞ்சனேயர் உருவத்துடன் கூடிய கோயில் ஒன்று இருந்தது.  குருசாமி பச்சைக்காவடி அவர்களும் யாத்திரிகர் அனைவரும் சாலையோரம் நின்று வணங்கிக் கொண்டு நடந்தோம்.
காசி பாதயாத்திரை
9.57 am

காசி பாதயாத்திரை
10.22 am
ஸ்ரீ சங்கர் விஜய் மரஅறுவை தொழிற்சாலைக்கு  வந்து சேர்ந்தோம்.

காசி பாதயாத்திரை
10.23 am

காசி பாதயாத்திரை
10.24 am
மரஅறுவை தொழிற்சாலையின் முதலாளி அவர்கள் ஊருக்குச் சென்றிருந்தார்.  அவரது வீட்டில் உள்ளோர் யாத்திரிகர்களை வரவேற்று, அவர்களது வீட்டின் மாடியில் யாத்திரிகர்கள் தங்குவதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர்.

அருகில் மிகப்பெரிய சைன மடம் (Shri Shri Nakoda Avanti 108 Parshwanath Jain Tirth Dham) உள்ளது.  மாலை நேரத்தில் ஒரு சந்நியாசி காவி உடையுடன் குருசாமி அவர்களைக் காண வந்தார்.  அவர் இராமேசுவரத்திற்குப் பாதயாத்திரையாகச் செல்வதாகவும், அருகில் உள்ள சைனமடத்தில் தங்கிச் செல்லலாம் எனச் சென்றதாகவும், ஆனால் அவர்கள் நுழைவாயிலின் உள்ளேயே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர் என்றும், இங்கே யாத்திரிகர்களுடன் தங்கிக் கொள்ள அனுமதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.  அதற்குக் குருசாமி அவர்கள் நாங்கள் காசிக்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்றார்.  உடனே அந்தச் சந்நியாசியும் “காசிக்கு உங்களுடன் நானும் சேர்ந்து வருகிறேன்” என்று கூறினார்.  இந்த யாத்திரை புறப்படும்போது சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த யாத்திரையில் இருக்கின்றனர்.  இடையில் யாரையும் சேர்த்துக் கொள்வது கிடையாது என்று விளக்கமாக எடுத்துக் கூறி, சிறிதளவு உதவிகளைச் செய்து குருசாமி அவர்கள் அந்தச் சந்நியாசியை வழியனுப்பி வைத்தார்.    


https://goo.gl/maps/XFYxvLyJgdkojbn57
இன்றைய பயணம் சுமார் 21 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 28 ஜூன், 2020

30.06.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 23ஆவது நாள், ஆனி 16

பயணக் கட்டுரை - 
அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.

இன்று  23ஆவது நாள், ஆனி 16 (30.06.2017) வெள்ளிக் கிழமை.

பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பகவிநாயகரை வழிபட்டு பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை, 2) திருப்பரங்குன்றம், 3) திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களில் வழிபாடு செய்துவிட்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் நேற்று பந்தல்குடி வந்து சேர்ந்தோம்.

இன்று அதிகாலை மணி 3.05க்கு வழக்கமான தினசரி வழிபாட்டிற்குப் பின்னர் ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டு, பந்தல்குடி சக்திபீடம் கோயிலில் இருந்து யாத்திரை புறப்பட்டோம்.  
அன்பர் வீரபாகு அவர்களும் அவரது குடும்பத்தினரும் எங்களை வழியனுப்பி வைத்தனர்.

ஆறுபடைவீடு பாதயாத்திரை

ஆறுபடைவீடு பாதயாத்திரை
வழியில் ரொட்டியும் தேநீரும்.
காலையில் இருந்தே கடுமையான வெயில்.

அறுபடைவீடு பாதயாத்திரை
இராமனுஜபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காலை உணவு.
அறுபடைவீடு பாதயாத்திரை
09.30மணிக்கு கல்குறிச்சி நாடார் திருமண மண்டபம் வந்து சேர்ந்தோம்.   அதிகாலையில் யாத்திரை புறப்படும் போது வாளைமீன் போல் துள்ளிக் குதித்து நடந்த யாத்திரிகர் அனைவரும் வெயிலில் காய்ந்து காற்றுப்போன பலூன் போலத் துவண்டுபோய்ப் படுத்துக் கிடந்தனர்.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் மட்டும் எல்லோரும் வந்து சேர்ந்து விட்டார்களா என எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

காசிஸ்ரீ சத்தியமூர்த்தி அவர்கள் எங்களுடன் வந்து சேர்வதற்குக் காலதாமதம் ஆனது.  வெயிலினால் உடல்நலக் குறைவு காரணமாக நடந்து வர மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் கையில் தண்ணீர் வைத்துள்ளரா? என்று  தெரியவில்லை.  எனவே அன்னதானவாகன ஓட்டுநர் திரு. ஆறுமுகம் அவர்கள் சென்று அழைத்து வந்தார்.
ஓய்வு .
தங்கல் .

ஆறுபடைவீடு பாதயாத்திரை

https://goo.gl/maps/3cdxTWixhCtMhP2P8
இன்றைய பயணம் சுமார் 25 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

29.06.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 22ஆவது நாள், ஆனி 15

பயணக் கட்டுரை - அறுபடைவீடு இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
இன்று  22ஆவது நாள், ஆனி 15 (29.06.2017) வியாழன் கிழமை.

பிள்ளையார்பட்டியில் அருள்மிகு கற்பகவிநாயகரை வழிபட்டு 
பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை, 2) திருப்பரங்குன்றம், 3) திருச்செந்தூர் ஆகிய மூன்று திருத்தலங்களில் வழிபாடு செய்துவிட்டு, திருச்செந்தூரில் இருந்து பழனி செல்லும் வழியில் நேற்று சிந்தலக்கரை வந்து சேர்ந்தோம்.

இன்று சிந்தலக்கரை வெக்காளி அம்மன் கோயிலில் இருந்து காலை மணி 3:30 க்கு தினசரி வழிபாட்டை முடித்து, ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுப் பாதயாத்திரை புறப்பட்டோம். 
ஆறுபடைவீடு பாதயாத்திரை

வெம்பூர் நென்மேனி பிரிவு சாலை அருகே காலை மணி 7.10 அளவில் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.  கடுமையான வெயில்.

ஆறுபடைவீடு பாதயாத்திரை

அறுபடைவீடு பாதயாத்திரை

ஆறுபடைவீடு பாதயாத்திரை
பந்தல்குடி புறவழிச்சாலை அருகில் காலை உணவு.

ஆறுபடைவீடு பாதயாத்திரை

அறுபடைவீடு பாதயாத்திரை

ஆறுபடைவீடு பாதயாத்திரை
10.15 மணிக்கு பந்தல்குடி சக்திபீடம் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.  பந்தல்குடி அன்பர் வீரபாகு அவர்கள் அடியார்களை வரவேற்று உபசரித்தார்.

ஓய்வு .
தங்கல் .

https://goo.gl/maps/sJ1rh2NVPRtuQizt9
இன்றைய பயணம் சுமார் 26 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு அருள்மிகு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்